1. [PS] [QS][SS] திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.[SE][QE]
2. [QS][SS] செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.[SE][QE]
3. [QS][SS] எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேக முள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.[SE][QE]
4. [QS][SS] தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.[SE][QE]
5. [QS][SS] நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.[SE][QE]
6. [QS][SS] நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.[SE][QE]
7. [QS][SS] செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.[SE][QE]
8. [QS][SS] அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.[SE][QE]
9. [QS][SS] கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.[SE][QE]
10. [QS][SS] ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.[SE][QE]
12. [QS][SS] அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்; கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.[SE][QE]
13. [QS][SS] “வெளியே சிங்கம் நிற்கிறது; வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்” என்கிறான் சோம்பேறி.[SE][QE]
14. [QS][SS] பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி; ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.[SE][QE]
15. [QS][SS] பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.[SE][QE]
16. [QS][SS] செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.[SE][PE][QE]
17. {முப்பது முதுமொழிகள்} [PS] ஞானிகள் போதித்ததை நான் உனக்குக்கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்; நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.
18. அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக்கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.
19. நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன். [* ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.[QE]. ]
20. அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா?
21. அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.[PE]
22. {1} [PS] ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
23. ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்; அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.[PE]
24. {2} [PS] கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே; எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.
25. அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றுக்கொள்வாய்; உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.[PE]
26. {3} [PS] பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.
27. அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?[PE]
28. {4} [PS] வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே.[PE]
29. {5} [PS] தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.[PE]