தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நீதிமொழிகள்
1. [PS] [QS][SS] திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங் கொள்பவர் மடையரே.[SE][QE]
2. [QS][SS] அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.[SE][QE]
3. [QS][SS] விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.[SE][QE]
4. [QS][SS] சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.[SE][QE]
5. [QS][SS] மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.[SE][QE]
6. [QS][SS] பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?[SE][QE]
7. [QS][SS] எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.[SE][QE]
8. [QS][SS] மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.[SE][QE]
9. [QS][SS] “என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்?[SE][QE]
10. [QS][SS] பொய்யான எடைக் கற்களையும் பொய் யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.[SE][QE]
11. [QS][SS] சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.[SE][QE]
12. [QS][SS] கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.[SE][QE]
13. [QS][SS] தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.[SE][QE]
14. [QS][SS] ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.[SE][QE]
15. [QS][SS] பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.[SE][QE]
16. [QS][SS] அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.[SE][QE]
17. [QS][SS] வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.[SE][QE]
18. [QS][SS] நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.[SE][QE]
19. [QS][SS] வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே. [* ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.[QE]. ] [SE][QE]
20. [QS][SS] தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்து போகும்.[SE][QE]
21. [QS][SS] தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.[SE][QE]
22. [QS][SS] “தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.[SE][QE]
23. [QS][SS] பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.[SE][QE]
24. [QS][SS] மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?[SE][QE]
25. [QS][SS] எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும்.[SE][QE]
26. [QS][SS] ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.[SE][QE]
27. [QS][SS] ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.[SE][QE]
28. [QS][SS] அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.[SE][QE]
29. [QS][SS] இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.[SE][QE]
30. [QS][SS] நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.[SE][PE][QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 31
1 திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங் கொள்பவர் மடையரே. 2 அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார். 3 விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர். 4 சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார். 5 மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார். 6 பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்? 7 எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள். 8 மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான். 9 “என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்? 10 பொய்யான எடைக் கற்களையும் பொய் யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார். 11 சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம். 12 கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார். 13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும். 14 ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார். 15 பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன். 16 அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு. 17 வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும். 18 நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே. 19 வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே. [* ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.. ] 20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்து போகும். 21 தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது. 22 “தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார். 23 பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது. 24 மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்? 25 எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும். 26 ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான். 27 ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும். 28 அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும். 29 இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி. 30 நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References