தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவிற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.
2. நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.
3. மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.
4. உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.
5. வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.
6. ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.
7. மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?
8. விவோகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.
9. பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.
10. ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.
11. பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.
12. ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.
13. நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.
14. உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.
15. பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.
16. ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.
17. எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.
18. பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.
19. தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.
20. ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.
21. அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.
22. தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.
23. கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.
24. ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை.
25. உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.
26. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.
27. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.
28. மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும்; உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.
29. பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.
30. மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புறுக்கியாகும்.
31. ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.
32. பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.
33. விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.
34. நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.
35. கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 14 of Total Chapters 31
நீதிமொழிகள் 14:24

×

Alert

×

tamil Letters Keypad References