தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நீதிமொழிகள்
1. [PS] [QS][SS] அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.[SE][QE]
2. [QS][SS] நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.[SE][QE]
3. [QS][SS] பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்த தில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்க முடியாது.[SE][QE]
4. [QS][SS] பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.[SE][QE]
5. [QS][SS] நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.[SE][QE]
6. [QS][SS] பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.[SE][QE]
7. [QS][SS] பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்ற லின்றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.[SE][QE]
8. [QS][SS] மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.[SE][QE]
9. [QS][SS] வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.[SE][QE]
10. [QS][SS] நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.[SE][QE]
11. [QS][SS] உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.[SE][QE]
12. [QS][SS] தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.[SE][QE]
13. [QS][SS] தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.[SE][QE]
14. [QS][SS] ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.[SE][QE]
15. [QS][SS] மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.[SE][QE]
16. [QS][SS] மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச் சியைப் பொருட்படுத்தார்.[SE][QE]
17. [QS][SS] உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.[SE][QE]
18. [QS][SS] சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.[SE][QE]
19. [QS][SS] ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.[SE][QE]
20. [QS][SS] சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.[SE][QE]
21. [QS][SS] நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்த தாய் இருக்கும்.[SE][QE]
22. [QS][SS] பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்ற வர்களை அவர் அரவணைக்கிறார்.[SE][QE]
23. [QS][SS] விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.[SE][QE]
24. [QS][SS] ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.[SE][QE]
25. [QS][SS] மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.[SE][QE]
26. [QS][SS] சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.[SE][QE]
27. [QS][SS] சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.[SE][QE]
28. [QS][SS] நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.[SE][PE][QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 31
1 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர். 2 நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார். 3 பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்த தில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்க முடியாது. 4 பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள். 5 நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை. 6 பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும். 7 பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்ற லின்றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும். 8 மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர். 9 வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல். 10 நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது. 11 உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர். 12 தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும். 13 தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர். 14 ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார். 15 மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர். 16 மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச் சியைப் பொருட்படுத்தார். 17 உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர். 18 சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும். 19 ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே. 20 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர். 21 நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்த தாய் இருக்கும். 22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்ற வர்களை அவர் அரவணைக்கிறார். 23 விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர். 24 ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர். 25 மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும். 26 சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும். 27 சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர். 28 நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References