தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது; முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.
2. இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.
3. நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.
4. கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.
5. குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.
6. நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.
7. பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.
8. கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.
9. இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்பெறுவர்.
10. நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.
11. நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.
12. அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;
13. வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.
14. திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.
15. அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.
16. கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.
17. இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.
18. பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.
19. நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.
20. வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.
21. தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.
22. மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.
23. கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.
24. அளவின்றிச் செலவழிப்போர் செல்வராவதும் உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு.
25. ஈகை குணமுள்ளோர் வளம் பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.
26. தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.
27. நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.
28. தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.
29. குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.
30. நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல் உயிராற்றலை இழக்கச் செய்யும்.
31. நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 11 of Total Chapters 31
நீதிமொழிகள் 11:1

×

Alert

×

tamil Letters Keypad References