1. [PS] [QS][SS] ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய[SE][SS] ஆண்டவர் ஏதோமைக் குறித்து[SE][SS] இவ்வாறு சொல்கின்றார்:[SE][SS] “விழித்தெழுங்கள்,[SE][SS] ஏதோமுக்கு எதிராகப்[BR]போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!”[SE][SS] என்று அறிவிக்கத்[SE][SS] தூதன் ஒருவனை[SE][SS] வேற்றினத்தாரிடையே[SE][SS] ஆண்டவர் அனுப்பினார், என்பதாக[SE][SS] ஆண்டவரிடமிருந்து வந்த[SE][SS] செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][PE][QE]
2. {ஏதோம் நாட்டை ஆண்டவர் தண்டிப்பார்} [PS] [QS][SS] நான் உன்னை மக்களினத்தாரிடையே[SE][SS] சிறுமைக்குள்ளாக்குவேன்;[SE][SS] நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
3. [QS][SS] பாறை இடுக்குகளில் வாழ்பவனே! [BR] உயரத்திலே குடியிருப்பை[SE][SS] அமைத்திருப்பவனே![SE][SS] ‘என்னைத் தரை மட்டும்[SE][SS] தாழ்த்தக் கூடியவன் யார்?’ என[SE][SS] உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே![SE][SS] உன் இதயத்தின் இறுமாப்பு [BR] உன்னை ஏமாற்றிவிட்டது. [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
4. [QS][SS] நீ கழுகைப் போல்[SE][SS] உயர உயரப் பறந்தாலும்,[SE][SS] விண்மீன்கள் நடுவில்[SE][SS] உன் கூட்டை அமைத்தாலும்,[SE][SS] அங்கிருந்தும் உன்னைக்[SE][SS] கீழே விழச் செய்வேன், [BR] என்கிறார் ஆண்டவர். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
5. [QS][SS] உன்னிடம் திருடர்கள்[SE][SS] வருவார்களாயின்,[SE][SS] கொள்ளைக்காரர்கள்[SE][SS] இரவில் வருவார்களாயின்[SE][SS] தங்கள் தேவைக்கு அதிகமாகத்[SE][SS] திருடுவார்களோ?[SE][SS] திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள்[SE][SS] உன்னிடம் வந்தால்[SE][SS] திராட்சைப் பழங்களில்[SE][SS] சிலவற்றையாவது[SE][SS] விட்டுவைக்க மாட்டார்களா?[SE][SS] நீயோ வெனில்[SE][SS] முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்! [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
6. [QS][SS] ஏசா எவ்வளவாய்க்[SE][SS] கொள்ளையடிக்கப்பட்டான்![SE][SS] மறைத்து வைக்கப்பட்ட[SE][SS] அவனுடைய கருவூலங்கள்[SE][SS] சூறை யாடப்பட்டன. [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
7. [QS][SS] உன்னோடு உடன்படிக்கை[SE][SS] செய்தவர்கள் யாவரும்[SE][SS] உன்னை ஏமாற்றி விட்டார்கள்;[SE][SS] அவர்கள் உன்னை[SE][SS] நாட்டின் எல்லைவரை[SE][SS] விரட்டி விட்டார்கள்;[SE][SS] உன்னோடு உறவாடியவர்கள்[SE][SS] உனக்கு எதிராய் எழும்பி[SE][SS] உன்னை மேற்கொண்டார்கள்;[SE][SS] உன்னோடு உண்டவர்களும்[SE][SS] நல்லுறவு கொண்டிருந்தவர்களும்[SE][SS] உனக்குக் கண்ணி வைத்தார்கள்;[SE][SS] உன்னைக் குறித்து[SE][SS] ‘அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை [BR] எங்கே?’ என்றார்கள். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
8. [QS][SS] அந்நாளில் நான்[SE][SS] ஏதோமிலுள்ள ஞானிகளையும்[SE][SS] ஏசாவின் மலைமேல் உள்ள[SE][SS] அறிவாளிகளையும்[SE][SS] அழிக்காமல் விடுவேனா?[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
9. [QS][SS] தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள்[SE][SS] திகிலடைவார்கள்;[SE][SS] ஆதலால் ஏசாவின்[SE][SS] மலைமேல் உள்ள யாவரும்,[SE][SS] வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][PE][QE]
10. {ஏதோம் தண்டிக்கப்படக் காரணம்} [PS] [QS][SS] உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக [BR] நீ செய்த கொடுமையை முன்னிட்டு,[SE][SS] நீ வெட்கி நாணுவாய்.[SE][SS] நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
11. [QS][SS] அயல் நாட்டார் [BR] யாக்கோபின் செல்வத்தைக்[SE][SS] கொள்ளையிட்ட அந்நாளில் —[SE][SS] வெளிநாட்டார்[SE][SS] அவன் வாயில்களுக்குள் புகுந்து[SE][SS] எருசலேமுக்காகத் தங்களுக்குள்[SE][SS] சீட்டுப்போட்ட அந்நாளில் —[SE][SS] நீ விலகி நின்று[SE][SS] அவர்களுள் ஒருவனாக இருந்தாயே! [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
12. [QS][SS] நீ உன் சகோதரனுடைய[SE][SS] நாளைக் கண்டு,[SE][SS] அவனுடைய வேதனை[SE][SS] நாளைக் கண்டு[SE][SS] மகிழ்ச்சியடையாது[SE][SS] இருந்திருக்க வேண்டும்;[SE][SS] யூதாவின் மக்களைப் பார்த்து[SE][SS] அவர்களின் அழிவு நாளில்[SE][SS] களிப்படையாது[SE][SS] இருந்திருக்க வேண்டும்;[SE][SS] அவர்களின் துன்ப நாளில்[SE][SS] இறுமாப்படையாது [BR] இருந்திருக்க வேண்டும்; [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
13. [QS][SS] என் மக்கள் துன்புற்ற நாளில்,[SE][SS] அவர்களுடைய வாயில்களுக்குள்[SE][SS] நுழையாது இருந்திருக்கவேண்டும்;[SE][SS] அவர்கள் கேடுற்ற நாளில்,[SE][SS] அவர்களின் அழிவைக் குறித்து[SE][SS] மகிழ்ச்சியடையாது [BR] இருந்திருக்க வேண்டும்.[SE][SS] அவர்கள் அழிவுற்ற நாளில்,[SE][SS] அவர்களின் பொருள்களைக்[SE][SS] கொள்ளையடிக்காது[SE][SS] இருந்திருக்க வேண்டும். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][QE]
14. [QS][SS] அவர்களுள் தப்பி ஓடியவர்களை[SE][SS] வெட்டி வீழ்த்தும்படி[SE][SS] வழிச் சந்துகளில் பதுங்கியிராது[SE][SS] இருந்திருக்க வேண்டும்;[SE][SS] அவர்கள் துயருற்ற நாளில்,[SE][SS] அவர்களில் எஞ்சியோரைக்[SE][SS] காட்டிக் கொடுக்காது[SE][SS] இருந்திருக்க வேண்டும். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2-5. ] [SE][PE][QE]
15. {வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] ஏனெனில், ஆண்டவரின் நாள்[SE][SS] வேற்றினத்தார் எல்லார் மேலும் [BR] வரப்போகின்றது;[SE][SS] நீ செய்ததுபோலவே[SE][SS] உனக்கும் செய்யப்படும்;[SE][SS] நீ செய்த வினைகள்[SE][SS] உன் தலைமேலேயே விழும்.[SE][QE]
16. [QS][SS] என் திரு மலையில்,[SE][SS] நீங்கள் என் தண்டனையாகிய[SE][SS] பானத்தைக் குடித்தது போலவே[SE][SS] வேற்றினத்தார் அனைவரும் [BR] குடிப்பார்கள்.[SE][SS] மேலும்குடிப்பார்கள்,[SE][SS] குடித்துக் கொண்டே இருப்பார்கள்;[SE][SS] குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.[SE][PE][QE]
17. {இஸ்ரயேலின் வெற்றி} [PS] [QS][SS] ஆனால், தப்பிப் பிழைத்தோர்[SE][SS] சீயோன் மலையில் இருப்பர்;[SE][SS] சீயோன் மலையும்[SE][SS] தூய்மையாய் இருக்கும்;[SE][SS] யாக்கோபின் குடும்பத்தார்[SE][SS] தங்கள் உரிமைச் சொத்தைத்[BR]திரும்பப் பெறுவர்.[SE][QE]
18. [QS][SS] யாக்கோபின் குடும்பத்தார்[SE][SS] நெருப்பாய் இருப்பர்;[SE][SS] யோசேப்பின் குடும்பத்தார்[SE][SS] தீப்பிழம்பாய் இருப்பர்;[SE][SS] ஏசாவின் குடும்பத்தாரோ[SE][SS] வைக்கோலாய் இருப்பர்;[SE][SS] அவர்கள் இவர்களைத்[SE][SS] தீக்கிரையாக்கி[SE][SS] முற்றிலும் அழித்து விடுவார்கள்;[SE][SS] ஏசாவின் குடும்பத்தாருள்[SE][SS] எவருமே தப்பமாட்டார்;[SE][SS] ஆண்டவரே இதைக் கூறினார்.[SE][QE]
19. [QS][SS] நெகேபில் இருப்பவர்கள்[SE][SS] ஏசாவின் மலையைத்[SE][SS] தமதாக்கிக் கொள்வார்கள்.[SE][SS] செபேலாவைச் சார்ந்தவர்கள்[SE][SS] பெலிஸ்தியர் நாட்டை[SE][SS] உரிமையாக்கிக் கொள்வார்கள்.[SE][SS] அவர்கள் எப்ராயிம்,[SE][SS] சமாரியா நாடுகளைத்[SE][SS] தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்;[SE][SS] பென்யமினோ[SE][SS] கிலயாதைத்[SE][SS] தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.[SE][QE]
20. [QS][SS] இஸ்ரயேலிலிருந்து[SE][SS] நாடுகடத்தப்பட்ட வீரர்கள்[SE][SS] திரும்பி வந்து[SE][SS] பெனீசியாவிலிருந்து[SE][SS] சாரிபாத்து வரை உள்ள நாட்டை[SE][SS] உரிமையாக்கிக் கொள்வர்;[SE][SS] எருசலேமிலிருந்து செபராதுக்கு[SE][SS] நாடுகடத்தப்பட்டோர்[SE][SS] நெகேபின் நகர்களைச்[SE][SS] சொந்தமாக்கிக் கொள்வர்.[SE][QE]
21. [QS][SS] விடுதலை பெற்றோர்*[SE][SS] ஏசாவின் மலையை ஆளுவதற்குச்[SE][SS] சீயோன் மலைமேல் ஏறுவர்;[SE][SS] அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும். [* ‘வெற்றி வீரர்கள்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][PE]