1. {தலைவர்களின் படையல்கள்} [PS] மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில்,
2. கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள் ஆகியோர் காணிக்கைகள் கொணர்ந்தனர்.
3. அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர்.
4. பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:[PE]
5. [PS] “சந்திப்புக் கூடாரப் பணியைச் செய்வதற்குப் பயன்படும்படி இவற்றைப் பெற்றுக்கொள்; ஒவ்வொருவரின் பணிக்கும் ஏற்ப இவற்றை லேவியரிடம் ஒப்படைப்பாய்”.
6. அவ்வாறே மோசே வண்டிகளையும் மாடுகளையும் பெற்று லேவியரிடம் ஒப்படைத்தார்.
7. கேர்சோன் புதல்வருக்கு அவரவர் பணிக்கேற்ப இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கொடுத்தார்.[PE]
8. [PS] அவர் மெராரிப் புதல்வருக்கு அவர்கள் பணிக்கேற்ப நான்கு வண்டிகளையும், எட்டு மாடுகளையும் கொடுத்தார்; இவர்கள் பணி குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமரின் மேற்பார்வையில் இருந்தது.
9. ஆனால், கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர்.
10. மேலும், பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர்.
11. ஆண்டவர் மோசேயிடம் “நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும்” என்றார்.[PE]
12. [PS] முதல் நாளில் தம் காணிக்கையைக் கொண்டு வந்தவர் நகசோன், இவர் யூதா குலத்து அம்மினதாபின் மகன்.
13. அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம்* நிறையையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம்** நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று; உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது;
14. நூற்றுப் பதினைந்து கிராம்* நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது; [* * ‘நூற்று முப்பது செக்கேல்’ என்பது எபிரேய பாடம்; ** ‘எழுபது செக்கேல்’ என்பது எபிரேய பாடம் ]
15. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று - இவை எரிபலிக்குரியவை. [* * ‘பத்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம். ]
16. பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.
17. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - அம்மினதாபின் மகன் நகசோனின் காணிக்கை இதுவே.[PE]
18. [PS] இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல்.
19. அவர் கொண்டு வந்த காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
20. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது.
21. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை.
22. பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
23. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - சூவாரின் மகன் நெத்தனியேலின் காணிக்கை இதுவே.[PE]
24. [PS] மூன்றாம் நாள்; செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு.
25. அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று- உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு இருந்தது.[PE]
26. [PS] நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது.
27. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை -எரிபலிக்குரியவை.
28. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
29. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - கேலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே.[PE]
30. [PS] நான்காம் நாள்; ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்; இவர் செதேயூரின் மகன்.
31. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
32. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறைய தூபம் இருந்தது.
33. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
34. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
35. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து - செதேயூரின் புதல்வன் எலிட்சூரின் காணிக்கை இதுவே.[PE]
36. [PS] ஐந்தாம் நாள்; சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்; இவர் கரிசத்தாயின் மகன்.
37. அவர் காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
38. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று - அது நிறையத் தூபம் இருந்தது.
39. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.
40. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
41. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து - ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - சுரிசத்தாயின் புதல்வன் செலுமியேலின் காணிக்கை இதுவே.[PE]
42. [PS] ஆறாம் நாள்; காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு; இவர் தெகுவேலின் மகன்.
43. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரைக் கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
44. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
45. இளங்காளை ஒன்று; ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரி பலிக்குரியவை.
46. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
47. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - தெகுவேலின் புதல்வன் எல்யாசாபின் காணிக்கை இதுவே.[PE]
48. [PS] ஏழாம் நாள்; எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா; இவர் அம்மிகூதின் மகன்.
49. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
50. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
51. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று - இவை எரிபலிக்குரியவை.
52. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
53. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து -அம்மிகூதின் புதல்வன் எலிசாமாவின் காணிக்கை இதுவே.[PE]
54. [PS] எட்டாம் நாள்: மனாசே மக்களின் தலைவர் கமாலியேல், இவர் பெதாசூரின் மகன்.
55. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித் தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
56. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது.
57. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
58. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
59. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - பெதாசூரின் புதல்வன் காமாலியேலின் காணிக்கை இதுவே.[PE]
60. [PS] ஒன்பதாம் நாள்; பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்; இவர்கிதயோனியின் மகன்.
61. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
62. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது.
63. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.
64. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
65. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - கிதயோனியின் புதல்வன் அபிதானியின் காணிக்கை இதுவே.[PE]
66. [PS] பத்தாம் நாள்; தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன்.
67. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
68. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
69. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
70. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று,
71. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - அம்மிசத்தாயின் புதல்வன் அகியேசரின் காணிக்கை இதுவே.[PE]
72. [PS] பதினோராம் நாள்; ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன்.
73. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
74. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
75. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை.
76. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.
77. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - ஒக்ரானின் மகன் பகியேலின் காணிக்கை இதுவே.[PE]
78. [PS] பன்னிரண்டாம் நாள்; நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்;
79. அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று - உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
80. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
81. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக் கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
82. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
83. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து - ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே.[PE]
84. [PS] பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் இஸ்ரயேல் தலைவர்களிடமிருந்து வந்த அதற்கான அர்ப்பணக்காணிக்கை இதுவே; வெள்ளித்தட்டுகள் பன்னிரண்டு, வெள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு;
85. தூயகச் செக்கேலின்படி வெள்ளித்தட்டின் நிறை ஒன்றரை கிலோ கிராம், வெள்ளிக்கலத்தின் நிறை எண்ணூறு கிராம். ஆக, தூயகச் செக்கேலின்படி அனைத்து வெள்ளிப்பாத்திரங்களின் நிறை இருபத்தியேழு கிலோ அறுநூறு கிராம்.
86. தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு; தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம்.
87. எரிபலிக்கான மொத்த கால்நடைகள்; காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு; இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்; பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு;
88. நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்; காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே.
89. ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.[PE]