1. {பாளையத்தில் குலங்களின் ஒழுங்கமைப்பு} [PS] ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2. இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்; எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர். [* எண் 26:1-51. ]
3. கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர் யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர். யூதா மக்களின் தலைவன் நக்சோன்; இவன் அம்மினதாபின் மகன். [* எண் 26:1-51. ]
4. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு. [* எண் 26:1-51. ]
5. அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்; இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்; இவன் சூவாரின் மகன்; [* எண் 26:1-51. ]
6. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து நாலாயிரத்து நானூறு. [* எண் 26:1-51. ]
7. அடுத்து வருவது செபுலோன் குலம்; செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு; இவன் கேலோனின் மகன்; [* எண் 26:1-51. ]
8. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தேழாயிரத்து நானூறு. [* எண் 26:1-51. ]
9. இவ்வாறாக, யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு; இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர். [* எண் 26:1-51. ] [PE]
10. [PS] தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்; [* எண் 26:1-51. ]
11. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு. [* எண் 26:1-51. ]
12. இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்; சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல், இவன் சுரிசத்தாயின் மகன்; [* எண் 26:1-51. ]
13. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு. [* எண் 26:1-51. ]
14. அடுத்து வருவது காத்து குலம்; காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்; [* எண் 26:1-51. ]
15. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது. [* எண் 26:1-51. ]
16. இவ்வாறாக, ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது; இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர். [* எண் 26:1-51. ] [PE]
17. [PS] அதன் பின், சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும். அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர். [* எண் 26:1-51. ] [PE]
18. [PS] மேற்கே பாளையமிறங்க வேண்டியவர் எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன். [* எண் 26:1-51. ]
19. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஐந்நூறு. [* எண் 26:1-51. ]
20. அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்; மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்; [* எண் 26:1-51. ]
21. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு. [* எண் 26:1-51. ]
22. அடுத்து வருவது பென்யமின் குலம்; பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்; இவன் கிதயோனியின் மகன்; [* எண் 26:1-51. ]
23. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானூறு. [* எண் 26:1-51. ]
24. இவ்வாறாக, எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு. அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர். [* எண் 26:1-51. ] [PE]
25. [PS] வடக்கே பாளையமிறங்க வேண்டியவர் தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; தாண் மக்களின் தலைவன் அகியேசர்; இவன் அம்மி சத்தாயின் மகன்; [* எண் 26:1-51. ]
26. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு. [* எண் 26:1-51. ]
27. அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்; ஆசேர் மக்களின் தலைவன் பகியேல், இவன் ஒக்ரானின் மகன்; [* எண் 26:1-51. ]
28. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு. [* எண் 26:1-51. ]
29. அடுத்து வருவது நப்தலிக் குலம்;நப்தலி மக்களின் தலைவன் அகிரா; இவன் ஏனானின் மகன்; [* எண் 26:1-51. ]
30. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து மூவாயிரத்து நானூறு. [* எண் 26:1-51. ]
31. இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர். [* எண் 26:1-51. ] [PE]
32. [PS] தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே; அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது. [* எண் 26:1-51. ]
33. ஆனால், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை. [* எண் 26:1-51. ] [PE]
34. [PS] ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர். [* எண் 26:1-51. ] [PE]