1. {எருசலேமில் வாழ்ந்தோர் பட்டியல்} [PS] மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.
2. எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.
3. இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.[PE]
4. [PS] எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு; இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு; உசியா மகன் அத்தாயா — உசியா செக்கரியாவின் மகன்; இவர் அமரியாவின் மகன்; இவர் செபற்றியாவின் மகன்; இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்: [* நெகே 7:73. ]
5. மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன்.
6. எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.[PE]
7. [PS] பென்யமினின் புதல்வர் இவர்களே; சல்லூ மெசுல்லாமின் மகன்; இவர் யோபேதுவின் மகன்; இவர் பெத்யாவின் மகன்; இவர் கொலயாவின் மகன்; இவர் மாசேயாவின் மகன்; இவர் இத்தியேலின் மகன்; இவர் ஏசாயாவின் மகன்.
8. அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.
9. சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.[PE]
10. [PS] குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்;
11. செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.
12. கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன்.
13. குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அம்சசாய் அசரியேலின் மகன்; இவர் அகிசாயின் மகன்; இவர் மெசில்ல மோத்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
14. படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.[PE]
15. [PS] லேவியர்: செமாயா; இவர் அசூபாவின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் பூனியின் மகன்.
16. கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;
17. மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா; இவர் மீக்காவின் மகன்; இவர் சப்தியின் மகன்; இவர் ஆசாபின் மகன்; பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்; இவர் காலாயின் மகன்; இவர் எதுத்தூனின் மகன்.
18. புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.[PE]
19. [PS] வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
20. ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.
21. கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.
22. எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மத்தனியாவின் மகன்; இவர் மீக்காவின் மகன்; இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.
23. பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.
24. மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.[PE]
25. {மற்ற ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்தோர் பட்டியல்} [PS] சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;
26. மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்
27. அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
28. சிக்லாசிலும், மெக்கோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,
29. ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,
30. சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.[PE]
31. [PS] பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,
32. அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்
33. ஆட்சோரிலும், இராமாவிலும், கித்தயிமிலும்
34. ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,
35. லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
36. லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.[PE]