1. மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.
|
3. இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.
|
4. எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு; இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர். யூதாவின்; புதல்வர் பின்வருமாறு; உசியா மகன் அத்தாயா-உசியா செக்கரியாவின் மகன்; இவர் அமரியாவின் மகன்; இவர் செபற்றியாவின் மகன்; இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்;
|
5. மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன்.
|
7. பென்யமினின் புதல்வர் இவர்களே; சல்லூ மெசுல்லாமின் மகன்; இவர் யோபேதுவின் மகன்; இவர் பெத்யாவின் மகன்; இவர் கொலயாவின் மகன்; இவர் மாசேயாவின் மகன்; இவர் இத்தியேலின் மகன்; இவர் ஏசாயாவின் மகன்.
|
9. சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.
|
11. செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.
|
12. கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன்.
|
13. குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அமசசாய் அசரியேலின் மகன்; இவர் அகிசாயின் மகன்; இவர் மெசில்ல மோத்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
|
14. படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.
|
16. கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;
|
17. மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா; இவர் மீக்காவின் மகன்; இவர் சப்தியின் மகன்; இவர் ஆசாபின் மகன்; பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்; இவர் காலாயின் மகன்; இவர் எதுத்தூனின் மகன்.
|
19. வாயிற்காவலர்; வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
|
20. ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.
|
21. கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.
|
22. எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மத்தனியாவின் மகன்; இவர் மீக்காவின் மகன்; இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.
|
23. பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.
|
24. மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.
|
25. சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு; யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;
|
30. சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.
|