தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நாகூம்
1. [PS] [QS][SS] இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ[SE][SS] கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம்[SE][SS] பொய்களும் கொள்ளைப் பொருளுமே![SE][SS] சூறையாடலுக்கு முடிவே இல்லை! [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] சாட்டையடிகளின் ஓசை![SE][SS] சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி![SE][SS] தாவிப் பாயும் புரவிகள்![SE][SS] உருண்டோடும் தேர்கள்! [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] குதிரை வீரர்கள் பாய்ந்து[SE][SS] தாக்குகின்றனர்;[SE][SS] வாள் மின்னுகின்றது;[SE][SS] ஈட்டி பளபளக்கின்றது;[SE][SS] வெட்டுண்டவர்கள்[SE][SS] கூட்டமாய்க் கிடக்கின்றனர்;[SE][SS] பிணங்கள் குவிந்து கிடக்கின்றன;[SE][SS] செத்தவர்களுக்குக்[SE][SS] கணக்கே இல்லை;[SE][SS] அந்தப் பிணங்கள் மேல்[SE][SS] மனிதர் இடறிவிழுகின்றனர். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.[QE]. ] [SE][QE]
4. [QS][SS] அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய்,[SE][SS] தன் வேசித்தனங்களால்[SE][SS] மற்ற வேற்றினத்தாரையும்[SE][SS] தன் மயக்கும் கவர்ச்சியால்[SE][SS] பல இனங்களையும்[SE][SS] ஏமாற்றிய அந்த விலைமகளின்[SE][SS] எண்ணற்ற வேசித்தனங்களே[SE][SS] இதற்குக் காரணம்![SE][QE]
5. [QS][SS] இதோ! படைகளின்[SE][SS] ஆண்டவர் கூறுகிறார்:[SE][SS] உனக்கெதிராக நான் எழும்புவேன்;[SE][SS] நீ உடுத்தியிருக்கும் ஆடையை[SE][SS] உன் முகத்துக்கு மேலாகத்[SE][SS] தூக்குவேன்;[SE][SS] மற்ற வேற்றினத்தார்[SE][SS] உன் திறந்த மேனியையும்[SE][SS] அரசுகள் உன் அவமானத்தையும்[SE][SS] பார்க்கும்படி செய்வேன்.[SE][QE]
6. [QS][SS] அருவருப்பானவற்றை[SE][SS] உன்மீது எறிவேன்;[SE][SS] உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப்[SE][SS] பகடிப் பொருள் ஆக்குவேன்.[SE][QE]
7. [QS][SS] உன்னை நோக்குவோர் எல்லாரும்[SE][SS] உன்னிடமிருந்து பின்வாங்கி,[SE][SS] ‘நினிவே பாழாய்ப் போனது;[SE][SS] அவளுக்காகப் புலம்புவோர்[SE][SS] யாரேனும் உண்டோ?’[SE][SS] என்று சொல்வார்கள்.[SE][SS] உன்னைத் தேற்றுவோரை[SE][SS] எங்கே தேடுவேன்?[SE][QE]
8. [QS][SS] நைல் நதியின் கரையருகில்[SE][SS] நீரால் சூழப்பட்ட,[SE][SS] கடலை அரணாகவும்[SE][SS] தண்ணீரை மதிலாகவும் கொண்ட[SE][SS] தீப்சு நகரைவிட[SE][SS] நீ சிறப்புற்று இருந்தாயோ?[SE][QE]
9. [QS][SS] எத்தியோப்பியாவும் எகிப்தும்[SE][SS] அந்த நகருக்கு[SE][SS] வலிமையாய் இருந்தன;[SE][SS] அதன் வலிமைக்கோ[SE][SS] எல்லை இல்லை;[SE][SS] பூத்தும் லிபியாவும்[SE][SS] அதற்குத் துணையாய் இருந்தன.[SE][QE]
10. [QS][SS] இருந்தும், அதன் மக்கள்[SE][SS] சிறைப் பிடிக்கப்பட்டு[SE][SS] அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்;[SE][SS] அதன் குழந்தைகள்[SE][SS] தெருக்கள் தோறும்[SE][SS] மோதியடிக்கப்பட்டனர்;[SE][SS] அதன் உயர்குடி மக்கள் மேல்[SE][SS] சீட்டுப் போடப்பட்டது;[SE][SS] அதன் பெரிய மனிதர் அனைவரும்[SE][SS] சங்கிலிகளால்[SE][SS] இறுகக் கட்டப்பட்டனர்.[SE][QE]
11. [QS][SS] நீயும் குடிவெறியில்[SE][SS] மயங்கிக்கிடப்பாய்;[SE][SS] நீயும் உன் பகைவரிடமிருந்து[SE][SS] தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.[SE][QE]
12. [QS][SS] உன் அரண்கள் யாவும்[SE][SS] முதலில் பழுத்த கனிகள் நிறைந்த[SE][SS] அத்தி மரங்களுக்கு ஒப்பானவை;[SE][SS] அந்த மரங்களைப் பிடித்து[SE][SS] உலுக்கும்போது[SE][SS] பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.[SE][QE]
13. [QS][SS] உன் போர்வீரர்கள்[SE][SS] உன் பெண்களைப் போன்றவர்களே![SE][SS] உன் நாட்டு வாயில்கள்[SE][SS] பகைவர்களுக்காகத்[SE][SS] திறந்து கிடக்கின்றன;[SE][SS] உன் தாழ்ப்பாள்கள்[SE][SS] நெருப்புக்கு இரையாயின.[SE][QE]
14. [QS][SS] முற்றுகை நாள்களுக்காகத்[SE][SS] தண்ணீர் சேமித்து வை;[SE][SS] உன்னுடைய அரண்களை[SE][SS] வலிமைப்படுத்து;[SE][SS] களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு;[SE][SS] செங்கல் அறுக்கச்[SE][SS] சட்டங்களை எடு.[SE][QE]
15. [QS][SS] ஆயினும், நெருப்பு[SE][SS] உன்னை விழுங்கும்;[SE][SS] வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்;[SE][SS] வெட்டுக்கிளிபோல்[SE][SS] அது உன்னை விழுங்கிவிடும்;[SE][SS] வெட்டுக்கிளிபோல்[SE][SS] நீங்கள் பலுகுங்கள்;[SE][SS] பச்சைக்கிளிபோல்[SE][SS] நீங்கள் பெருகுங்கள்.[SE][QE]
16. [QS][SS] விண்மீன்களைவிட மிகுதியாக[SE][SS] உன் வணிகர்களைப்[SE][SS] பெருகச் செய்தாய்;[SE][SS] இந்த வெட்டுக்கிளிகள்[SE][SS] இறக்கையை விரித்துப்[SE][SS] பறந்தோடிவிடும்.[SE][QE]
17. [QS][SS] உன் காவல் வீரர்கள்[SE][SS] பச்சைக் கிளிகளுக்கும்[SE][SS] உன் அரசு அலுவலர்[SE][SS] வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும்[SE][SS] ஒப்பானவர்;[SE][SS] குளிர்ந்த நாளில் அவை[SE][SS] வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன;[SE][SS] கதிரவன் எழுந்ததும்[SE][SS] பறந்தோடிவிடுகின்றன;[SE][SS] அதன்பின் அவை இருக்குமிடம்[SE][SS] யாருக்கும் தெரியாது.[SE][QE]
18. [QS][SS] அசீரிய மன்னனே![SE][SS] உன் ஆயர்கள் துயில் கொண்டனர்;[SE][SS] உன் படைத் தலைவர்கள்[SE][SS] உறக்கத்தில் ஆழ்ந்தனர்;[SE][SS] கூட்டிச் சேர்க்க யாருமின்றி[SE][SS] உன் மக்கள் மலைகளில்[SE][SS] சிதறிப் போயினர்.[SE][QE]
19. [QS][SS] உன் காயத்துக்கு மருந்தில்லை,[SE][SS] உன் புண் குணமாகாது;[SE][SS] உன்னைப்பற்றிய[SE][SS] செய்தி கேட்கும் யாவரும்[SE][SS] கைகொட்டுவர்;[SE][SS] ஏனெனில்,[SE][SS] உன் இடைவிடாத கொடுமையால்[SE][SS] துன்புறாதவர் ஒருவரும் இல்லை.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
1 இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ] 2 சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ] 3 குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ] 4 அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மற்ற வேற்றினத்தாரையும் தன் மயக்கும் கவர்ச்சியால் பல இனங்களையும் ஏமாற்றிய அந்த விலைமகளின் எண்ணற்ற வேசித்தனங்களே இதற்குக் காரணம்! 5 இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கெதிராக நான் எழும்புவேன்; நீ உடுத்தியிருக்கும் ஆடையை உன் முகத்துக்கு மேலாகத் தூக்குவேன்; மற்ற வேற்றினத்தார் உன் திறந்த மேனியையும் அரசுகள் உன் அவமானத்தையும் பார்க்கும்படி செய்வேன். 6 அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். 7 உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?’ என்று சொல்வார்கள். உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்? 8 நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ? 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன; அதன் வலிமைக்கோ எல்லை இல்லை; பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன. 10 இருந்தும், அதன் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்; அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்; அதன் உயர்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது; அதன் பெரிய மனிதர் அனைவரும் சங்கிலிகளால் இறுகக் கட்டப்பட்டனர். 11 நீயும் குடிவெறியில் மயங்கிக்கிடப்பாய்; நீயும் உன் பகைவரிடமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய். 12 உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை; அந்த மரங்களைப் பிடித்து உலுக்கும்போது பழங்கள் தின்பதற்கு வாயில் விழும். 13 உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன; உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின. 14 முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை; உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து; களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு; செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு. 15 ஆயினும், நெருப்பு உன்னை விழுங்கும்; வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்; வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்; வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்; பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள். 16 விண்மீன்களைவிட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச் செய்தாய்; இந்த வெட்டுக்கிளிகள் இறக்கையை விரித்துப் பறந்தோடிவிடும். 17 உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்; குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன; கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன; அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது. 18 அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்; உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்; கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர். 19 உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
×

Alert

×

Tamil Letters Keypad References