1. [PS] நினிவேயைக் குறித்த இறைவாக்கு; எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15. ] [PE]
2. {நினிவேயின்மீது ஆண்டவர் சினம் கொள்ளல்} [PS] [QS][SS] ஆண்டவர்[SE][SS] அநீதியைப் பொறாத இறைவன்;[SE][SS] பழிவாங்குபவர்;[SE][SS] ஆண்டவர் பழிவாங்குபவர்;[SE][SS] வெகுண்டெழுபவர்;[SE][SS] தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்;[SE][SS] தம் பகைவர்மீது சினம் கொள்பவர். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15. ] [SE][QE]
3. [QS][SS] ஆண்டவர் விரைவில்[SE][SS] சினம் கொள்ளார்;[SE][SS] ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர்.[SE][SS] அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும்[SE][SS] பழிவாங்காமல் விடமாட்டார்.[SE][SS] சுழற்காற்றிலும் புயற்காற்றிலும்[SE][SS] அமைந்துள்ளது அவர் வழி;[SE][SS] மேகங்கள் அவர்தம்[SE][SS] காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்! [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15. ] [SE][QE]
4. [QS][SS] அவர் கடலை அதட்டி[SE][SS] வற்றச் செய்கின்றார்;[SE][SS] ஆறுகளையெல்லாம்[SE][SS] வற்றிப்போகச் செய்கின்றார்;[SE][SS] பாசானும் கர்மேலும்[SE][SS] காய்ந்து போகின்றன;[SE][SS] லெபனோனின் மலர்கள்[SE][SS] வாடிப்போகின்றன.[SE][QE]
5. [QS][SS] அவர் முன்னிலையில்[SE][SS] மலைகள் அதிர்கின்றன;[SE][SS] குன்றுகள் கரைகின்றன;[SE][SS] நிலமும் உலகும்[SE][SS] அதில் குடியிருக்கும் அனைத்தும்[SE][SS] அவர் முன்னிலையில்[SE][SS] நடுநடுங்கின்றன.[SE][QE]
6. [QS][SS] அவரது கடும் சினத்தை[SE][SS] எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்?[SE][SS] அவர் கோபத்தீயின் முன்[SE][SS] நிற்பவன் யார்?[SE][SS] தீயைப்போல் அவரது கோபம்[SE][SS] கொட்டுகின்றது;[SE][SS] பாறைகளும் அவர்முன்[SE][SS] தவிடு பொடியாகின்றன.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் நல்லவர்;[SE][SS] துன்பநாளில் அவர்[SE][SS] காவலரண் ஆவார்;[SE][SS] அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை[SE][SS] அவர் அறிவார்.[SE][QE]
8. [QS][SS] தம் எதிரிகளைப்[SE][SS] பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே[SE][SS] முற்றிலும் அழித்திடுவார்;[SE][SS] தம் பகைவர்களை[SE][SS] இருளுக்குள் விரட்டியடிப்பார்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரைப்பற்றி[SE][SS] நீங்கள் நினைப்பது என்ன?[SE][SS] அவர் முற்றிலும் அழித்துவிடுவார்;[SE][SS] தீமை மீண்டும் தலைதூக்காது.[SE][QE]
10. [QS][SS] குடிவெறியில்[SE][SS] மயங்கிக் கிடக்கும் அவர்கள்[SE][SS] பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும்[SE][SS] காய்ந்த சருகுபோலும்[SE][SS] முற்றிலும் எரிந்துபோவார்கள்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவருக்கு எதிராய்த்[SE][SS] திட்டம் தீட்டித்[SE][SS] தீய ஆலோசனைகளைக் கூறுபவன்[SE][SS] உன்னிடமிருந்து தோன்றினான்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “அவர்கள் வல்லவர்களாயினும்[SE][SS] பெரும் தொகையினராயினும்[SE][SS] வெட்டி வீழ்த்தப்பட்டு[SE][SS] அழிந்துவிடுவார்கள்;[SE][SS] உன்னை நான் இதுவரை[SE][SS] துன்புறுத்தியிருந்தாலும்[SE][SS] இனிமேல் உன்னைத்[SE][SS] துன்புறுத்தமாட்டேன்.[SE][QE]
13. [QS][SS] இப்பொழுதே,[SE][SS] உன்மேல் இருக்கும்[SE][SS] அவன் நுகத்தை முறித்து[SE][SS] உன் கட்டுகளை நான்[SE][SS] அறுத்துவிடுவேன்.”[SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் உன்னைப்பற்றி[SE][SS] இட்ட தீர்ப்பு இதுவே:[SE][SS] “உன் பெயரைத்தாங்கும்[SE][SS] வழிமரபே இல்லாமல் போகும்;[SE][SS] உன் தெய்வங்களின்[SE][SS] கோவிலில் உள்ள[SE][SS] செதுக்கிய சிலைகளையும்[SE][SS] வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன்.[SE][SS] நானே உனக்கு அங்குப்[SE][SS] புதை குழி வெட்டுவேன்;[SE][SS] ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.[SE][QE]
15. [QS][SS] “வெற்றி! வெற்றி!” என்று முழங்கி[SE][SS] நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள்[SE][SS] மலைகளின்மேல் தென்படுகின்றன![SE][SS] யூதாவே, உன் திருவிழாக்களைக்[SE][SS] கொண்டாடு![SE][SS] உன் பொருத்தனைகளை[SE][SS] நிறைவேற்று![SE][SS] ஏனெனில், தீயவன் உன் நடுவில்[SE][SS] இனி வரவே மாட்டான்;[SE][SS] அவன் முற்றிலும் அழிந்து விட்டான். [* எசா 52:7.[QE]. ] [SE][PE]