1. {எளியோரை ஒடுக்குவோருக்கு வரும் தண்டனை} [PS] [QS][SS] தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து[SE][SS] தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்[SE][SS] கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][SS] பொழுது புலர்ந்தவுடன்[SE][SS] தங்கள் கைவலிமையினால்[SE][SS] அவர்கள் அதைச்[SE][SS] செய்து முடிக்கின்றார்கள். [* 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,[SE][SS] அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;[SE][SS] வீடுகள்மேல் இச்சை கொண்டு[SE][SS] அவற்றைக்[SE][SS] கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;[SE][SS] ஆண்களை ஒடுக்கி,[SE][SS] அவர்கள் வீட்டையும்[SE][SS] உரிமைச் சொத்தையும்[SE][SS] பறிமுதல் செய்கின்றார்கள்.[SE][QE]
3. [QS][SS] ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “இந்த இனத்தாருக்கு எதிராகத்[SE][SS] தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;[SE][SS] அதனினின்று[SE][SS] உங்கள் தலையை விடுவிக்க[SE][SS] உங்களால் இயலாது;[SE][SS] நீங்கள் ஆணவம் கொண்டு[SE][SS] நடக்கமாட்டீர்கள்;[SE][SS] ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.[SE][QE]
4. [QS][SS] அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி[SE][SS] இரங்கற்பா இயற்றி,[SE][SS] ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;[SE][SS] ஆண்டவருடைய மக்களின்[SE][SS] உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே![SE][SS] நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்[SE][SS] கொள்ளைக்காரர்களுக்குப்[SE][SS] பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று[SE][SS] ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.[SE][QE]
5. [QS][SS] ஆதலால், நூல்பிடித்துப்[SE][SS] பாகம் பிரித்து[SE][SS] உங்களுக்குத் தருபவன் எவனும்[SE][SS] ஆண்டவரின் சபையில் இரான்.[SE][QE]
6. [QS][SS] அவர்கள் பிதற்றுவது:[SE][SS] ‘சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்;[SE][SS] அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்;[SE][SS] மானக்கேடு நம்மை அணுகாது.[SE][QE]
7. [QS][SS] யாக்கோபின் குடும்பத்தாரே,[SE][SS] ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?[SE][SS] இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?[SE][SS] நேர்மையாய் நடப்போரிடம்[SE][SS] அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’[SE][QE]
8. [QS][SS] ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்[SE][SS] பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்![SE][SS] போரில் நாட்டம் கொள்ளாமல்,[SE][SS] அமைதியை நாடுவோரின்[SE][SS] மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;[SE][SS] இதனால், அவர்களின்[SE][SS] மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;[SE][QE]
9. [QS][SS] என் மக்களின் கூட்டத்திலுள்ள[SE][SS] பெண்களை[SE][SS] அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து[SE][SS] விரட்டுகின்றீர்கள்;[SE][SS] அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்[SE][SS] என் மாட்சி என்றும் விளங்காதவாறு[SE][SS] செய்துவிடுகின்றீர்கள்.[SE][QE]
10. [QS][SS] எழுந்து அகன்றுபோங்கள்;[SE][SS] இது இளைப்பாறும் இடம் அல்ல;[SE][SS] நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது;[SE][SS] அது அழிவைக் கொண்டுவரும்.[SE][SS] அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.[SE][QE]
11. [QS][SS] ‘திராட்சை இரசத்தையும்[SE][SS] மதுவையும்பற்றி[SE][SS] உங்களுக்கு உரையாற்றுவேன்’[SE][SS] என்று கூறி,[SE][SS] வீண் சொற்களையும்[SE][SS] பொய்களையும் பிதற்றுகிறவன்தான்[SE][SS] இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்![SE][QE]
12. [QS][SS] யாக்கோபே![SE][SS] நான் உங்கள் அனைவரையும்[SE][SS] ஒன்றாகக் கூட்டுவேன்;[SE][SS] இஸ்ரயேலில் எஞ்சியோரை[SE][SS] ஒன்றாகத் திரட்டுவேன்;[SE][SS] இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை[SE][SS] ஆடுகளைக் கிடையில்[SE][SS] மடக்குவது போலவும்;[SE][SS] மந்தையை மேய்ச்சல் நிலத்தில்[SE][SS] வளைப்பது போலவும்[SE][SS] ஒன்றாகச் சேர்ப்பேன்.[SE][QE]
13. [QS][SS] அவர்களின் வழிகாட்டிகள்[SE][SS] தடைகளைத் தகர்த்தெறிந்து[SE][SS] வெளியேறுவார்கள்;[SE][SS] அவர்களின் அரசர்[SE][SS] அவர்களுக்கு முன்னால்[SE][SS] கடந்து செல்வார்;[SE][SS] ஆண்டவரே அவர்களை[SE][SS] வழிநடத்திப் போவார்.”[SE][PE][QE]