1. {மூதாதையர் மரபு[BR](மத் 15:1-20)} [PS] ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
2. அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். [* லூக் 11:38. ]
3. பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; [* யோவா 2:6; கலா 1:14. ]
4. சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே* உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. [* ‘சந்தையிலிருந்து… பின்னரே’ என்னும் சொற்றொடரை ‘பொது இடங்களிலிருந்து வந்ததும் குளித்த பின்னரே’ எனவும் மொழிபெயர்க்கலாம். ]
5. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
6. அதற்கு அவர், {SCJ}“வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். [QS][SS]‘இம்மக்கள் உதட்டினால் என்னைப்[SE][SS] போற்றுகின்றனர்;[SE][SS] இவர்கள் உள்ளமோ என்னை விட்டு[SE][SS] வெகு தொலையில் இருக்கிறது.[SE][PE][QE] {SCJ.} {SCJ} [* எசா 29:13. ]
7. [QS][SS] மனிதக் கட்டளைகளைக்[SE][SS] கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.[SE][SS] இவர்கள் என்னை வழிபடுவது வீண்’[SE][PE] என்று அவர் எழுதியுள்ளார். [* எசா 29:13. ] [QE]
8. {SCJ}நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” {SCJ.} [PE] என்று அவர்களிடம் கூறினார்.
9. மேலும் அவர், {SCJ}“உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.[PE] {SCJ.} {SCJ}
10. ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! [* விப 20:12;21:17; லேவி 20:9; இச 5:16. ]
11. ஆனால், ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால்,
12. அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.[PE]
13. {SCJ}இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” {SCJ.} [PE] என்று அவர்களிடம் கூறினார்.[PE]
14. [PS] இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, {SCJ}“நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.[PE] {SCJ.} {SCJ}
15. வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.[PE]
16. {SCJ}(கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்)” {SCJ.} [PE]* என்று கூறினார். [* அடைப்புக் குறிக்குள் உள்ள வசனம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.. ] [PE]
17. [PS] அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,
18. அவர் அவர்களிடம், {SCJ}“நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? [* திப 10:9-16; கொலோ 2:16,21,22. ] [PE]
19. {SCJ}ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது” {SCJ.} [PE] என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார். [* திப 10:9-16; கொலோ 2:16,21,22. ]
20. மேலும் {SCJ}“மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.[PE] {SCJ.} {SCJ}
21. (21-22) ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.[PE]
22.
23. {SCJ}தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன” {SCJ.} [PE] என்றார்.[PE]
24. {கானானியப் பெண்ணின் நம்பிக்கை[BR](மத் 15:21-28)} [PS] இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.
25. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
26. அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
27. இயேசு அவரைப் பார்த்து, {SCJ}“முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” {SCJ.} [PE] என்றார்.
28. அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார்.
29. அப்பொழுது இயேசு அவரிடம், {SCJ}“நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று” {SCJ.} [PE] என்றார்.
30. அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.[PE]
31. {காது கேளாதவர் நலம்பெறுதல்} [PS] மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.
32. காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். [* மாற் 6:5; 8:23; 1 திமொ 4:14,15. ]
33. இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.
34. பிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி {SCJ}“எப்பத்தா”[PE] அதாவது {SCJ}“திறக்கப்படு”[PE] என்றார்.
35. உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். [* மத் 8:3,4. ]
36. இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். [* மத் 8:3,4. ]
37. அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள். [* மத் 9:33; 15:31. ] [PE]