தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
லேவியராகமம்
1. {ஆரோன் பலி செலுத்தல்} [PS] மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.
2. அவர் ஆரோனிடம் கூறியது: “நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்றையும் எரிபலியாக ஊனமற்ற ஓர் ஆட்டுக்கிடாயையும் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா.
3. இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்
4. நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில், இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.”[PE]
5. [PS] அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.
6. அப்பொழுது மோசே, “நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே; ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்” என்றார்.
7. மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்” என்றார். [* எபி 7:27. ] [PE]
8. [PS] ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார்.
9. ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார்.
10. பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து,
11. இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.[PE]
12. [PS] பின்பு, அவர் எரிபலிக்கிடாயை அடித்தார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.
13. எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து,
14. குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார்.[PE]
15. [PS] பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார்.
16. பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்;
17. உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார்.
18. பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். [* லேவி 3:1-11. ]
19. காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து,
20. நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள். கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார்.
21. நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.[PE]
22. [PS] பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்; தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார். [* எண் 6:22-26.. ]
23. மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்; பின்னர், வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
24. ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது. மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.[PE]
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 27
ஆரோன் பலி செலுத்தல் 1 மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார். 2 அவர் ஆரோனிடம் கூறியது: “நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்றையும் எரிபலியாக ஊனமற்ற ஓர் ஆட்டுக்கிடாயையும் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா. 3 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும் 4 நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில், இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.” 5 அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர். 6 அப்பொழுது மோசே, “நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே; ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்” என்றார். 7 மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்” என்றார். [* எபி 7:2 7 ] 8 ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார். 9 ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார். 10 பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து, 11 இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார். 12 பின்பு, அவர் எரிபலிக்கிடாயை அடித்தார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். 13 எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து, 14 குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார். 15 பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார். 16 பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்; 17 உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார். 18 பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். * லேவி 3:1- 11. 19 காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து, 20 நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள். கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார். 21 நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார். 22 பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்; தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார். * எண் 6:22-26.. 23 மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்; பின்னர், வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது. 24 ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது. மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References