1. {எருசலேமுக்குரிய தண்டனை} [PS] [QS][SS] ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர்[SE][SS] தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்![SE][SS] அவர் இஸ்ரயேலின் மேன்மையை[SE][SS] விண்ணினின்று[SE][SS] மண்ணுக்குத் தள்ளினார்![SE][SS] அவரது சினத்தின் நாளில்[SE][SS] தம் கால்மணையை[SE][SS] மனத்தில் கொள்ளவில்லை![SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் யாக்கோபின்[SE][SS] அனைத்துக் குடியிருப்புகளையும்[SE][SS] இரக்கமின்றி அழித்தார்;[SE][SS] அவர் சீற்றமடைந்து[SE][SS] மகள் யூதாவின் அரண்களைத்[SE][SS] தகர்த்தார்;[SE][SS] அவற்றைத் தரைமட்டமாக்கினார்.[SE][SS] அவரது நாட்டையும்[SE][SS] அதன் தலைவர்களையும்[SE][SS] மேன்மை குலையச் செய்தார்.[SE][QE]
3. [QS][SS] அவர் வெஞ்சினம் கொண்டு[SE][SS] இஸ்ரயேலின் கொம்பை[SE][SS] முற்றிலும் வெட்டிவிட்டார்;[SE][SS] பகைவன் வந்தபொழுது[SE][SS] தம் வலக்கையைப்[SE][SS] பின்புறம் மறைத்துக்கொண்டார்;[SE][SS] சூழ்ந்திருக்கும் யாவற்றையும்[SE][SS] எரிக்கும் தீப்பிழம்பென,[SE][SS] அவர் யாக்கோபின் மீது[SE][SS] பற்றியெரிந்தார்.[SE][QE]
4. [QS][SS] எதிரி போலத்[SE][SS] தமது வில்லை நாணேற்றினார்;[SE][SS] பகைவன் போலத்[SE][SS] தம் வலக்கையை ஓங்கினார்;[SE][SS] கண்ணுக்கு இனியவை[SE][SS] அனைத்தையும் அழித்தார்;[SE][SS] மகள் சீயோனின் கூடாரத்தில்[SE][SS] தம் சினத்தை[SE][SS] நெருப்பெனக் கொட்டினார்.[SE][QE]
5. [QS][SS] என் தலைவர் எதிரி போலானார்;[SE][SS] அவர் இஸ்ரயேலை அழித்தார்;[SE][SS] அதன் கோட்டை கொத்தளங்களைத்[SE][SS] தகர்த்தார்;[SE][SS] மகள் யூதாவின் அழுகையையும்[SE][SS] புலம்பலையும் மிகுதியாக்கினார்.[SE][QE]
6. [QS][SS] தோட்டத்துப் பரணைப்[SE][SS] பிரித்தெறிவது போலத்[SE][SS] தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்;[SE][SS] சபை கூடும் இடத்தையும் அழித்தார்;[SE][SS] சீயோனில் ஆண்டவர்[SE][SS] விழாக்களையும் ஓய்வுநாளையும்[SE][SS] மறக்கச் செய்தார்;[SE][SS] அவர் வெஞ்சினமுற்று[SE][SS] அரசனையும் குருவையும்[SE][SS] வெறுத்து ஒதுக்கினார்.[SE][QE]
7. [QS][SS] என் தலைவர் தம் பலிபீடத்தை[SE][SS] வெறுத்தொதுக்கினார்.[SE][SS] தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்;[SE][SS] அதன் கோட்டைச் சுவர்களைப்[SE][SS] பகைவரிடம் கையளித்தார்;[SE][SS] விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல[SE][SS] ஆண்டவரின் இல்லத்தில்[SE][SS] அவர்கள் ஆரவாரம் செய்தனர்;[SE][QE]
8. [QS][SS] மகள் சீயோனின் மதிலை அழிக்க[SE][SS] ஆண்டவர் திட்டமிட்டார்;[SE][SS] அதற்கென நூலினால் அளந்தார்;[SE][SS] அதை அழிப்பதை நிறுத்தத்[SE][SS] தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை;[SE][SS] அரணும் மதிலும் புலம்பச் செய்தார்;[SE][SS] அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.[SE][QE]
9. [QS][SS] அவளின் வாயிற்கதவுகள்[SE][SS] மண்ணில் புதைந்து கிடந்தன;[SE][SS] அதன் தாழ்களை[SE][SS] உடைத்துச் சிதறடித்தார்;[SE][SS] அவளின் அரசனும் தலைவர்களும்[SE][SS] வேற்றினத்தாரிடையே உள்ளனர்![SE][SS] திருச்சட்டம் இல்லை;[SE][SS] அவளின் இறைவாக்கினரும்[SE][SS] ஆண்டவரின் காட்சி பெறவில்லை.[SE][QE]
10. [QS][SS] மகள் சீயோனின் பெரியோர்[SE][SS] தரையில் மௌனமாய்[SE][SS] அமர்ந்துள்ளனர்;[SE][SS] அவர்கள் தங்கள் தலைமேல்[SE][SS] புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்;[SE][SS] சாக்கு உடை உடுத்தியுள்ளனர்;[SE][SS] எருசலேமின் கன்னிப் பெண்கள்[SE][SS] தங்கள் தலைகளைத்[SE][SS] தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.[SE][QE]
11. [QS][SS] என் கண்கள் கண்ணீர் சொரிந்து[SE][SS] சோர்ந்துள்ளன![SE][SS] என் குலை நடுங்குகின்றது![SE][SS] என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத்[SE][SS] தரையில் சிதறுகின்றது![SE][SS] என் மக்களாகிய மகள்[SE][SS] நசுக்கப் பட்டுள்ளாள்![SE][SS] நகர் வீதிகளில்[SE][SS] குழந்தைகளும் மழலைகளும்[SE][SS] மயங்கிக் கிடக்கின்றனர்![SE][QE]
12. [QS][SS] அவர்கள் தங்கள் அன்னையரிடம்,[SE][SS] ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’[SE][SS] என்று கேட்கின்றனர்![SE][SS] படுகாயமுற்றோரைப்போல,[SE][SS] நகர் வீதிகளில் அவர்கள்[SE][SS] மயங்கி வீழ்கின்றனர்![SE][SS] தாய் மடியில்[SE][SS] உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்![SE][QE]
13. [QS][SS] மகளே! எருசலேம்![SE][SS] உன் சார்பாக நான் என்ன சொல்வேன்?[SE][SS] உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?[SE][SS] மகள் சீயோனே![SE][SS] கன்னிப் பெண்ணே![SE][SS] யாருக்கு உன்னை இணையாக்கித்[SE][SS] தேற்றுவேன் உன்னை?[SE][SS] உன் காயம் கடலைப்போல்[SE][SS] விரிந்துள்ளதே![SE][SS] உன்னைக் குணமாக்க[SE][SS] யாரால் முடியும்?[SE][QE]
14. [QS][SS] உன் இறைவாக்கினர் உனக்காகப்[SE][SS] பொய்யும் புரட்டுமான[SE][SS] காட்சிகளைக் கண்டனர்;[SE][SS] நீ நாடுகடத்தப்பட இருப்பதைத்[SE][SS] தவிர்க்குமாறு,[SE][SS] உன் நெறிகேடுகளை அவர்கள்[SE][SS] உனக்கு எடுத்துச் சொல்லவில்லை;[SE][SS] அவர்கள் பொய்யையும்[SE][SS] அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு,[SE][SS] உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்![SE][QE]
15. [QS][SS] அவ்வழியாய்க் கடந்து செல்வோர்[SE][SS] உன்னைப் பார்த்துக்[SE][SS] கைகொட்டிச் சிரித்தனர்![SE][SS] மகள் எருசலேமை நோக்கித்[SE][SS] தலையை ஆட்டிச்[SE][SS] சீழ்க்கையடித்தனர்![SE][SS] “அழகின் நிறைவும்[SE][SS] மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த[SE][SS] மாநகர் இதுதானா?” என்றனர்.[SE][QE]
16. [QS][SS] உன் எதிரிகள் அனைவரும்[SE][SS] உன்னை நோக்கிக்[SE][SS] கோணல்வாய் காட்டுகின்றனர்;[SE][SS] சீழ்க்கையடித்துப்[SE][SS] பற்களை நறநற வென்று[SE][SS] கடிக்கின்றனர்;[SE][SS] ‘நாம் அவளைப்[SE][SS] பாழாக்கினோம்’ என்றனர்.[SE][SS] ‘இந்நாளுக்காகவே[SE][SS] நாம் காத்திருந்தோம்;[SE][SS] இப்போதுதான் நம்மால்[SE][SS] அதைக் காணமுடிந்தது’ என்றனர்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவர்[SE][SS] தாம் திட்டமிட்டபடியே செய்தார்;[SE][SS] நெடுநாள்களுக்குமுன்[SE][SS] தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு[SE][SS] செயல்பட்டார்;[SE][SS] ஈவிரக்கமின்றி[SE][SS] இடித்துத் தள்ளினார்;[SE][SS] உன் எதிரிகளை[SE][SS] மகிழ்ச்சியடையச் செய்தார்;[SE][SS] பகைவனின் ஆற்றலைப்[SE][SS] பெருகச் செய்தார்.[SE][QE]
18. [QS][SS] அவர்களின் இதயம்[SE][SS] என் தலைவனை நோக்கிக்[SE][SS] கூக்குரலிடுகின்றது;[SE][SS] மகள் சீயோனின் மதிலே![SE][SS] இரவும் பகலும் வெள்ளமெனக்[SE][SS] கண்ணீர் பொழி![SE][SS] உனக்கு ஓய்வு வேண்டாம்![SE][SS] கண்ணீர் விடாமல்[SE][SS] நீ இருக்க வேண்டாம்![SE][QE]
19. [QS][SS] எழு! இரவில் முதற் சாமத்தில்[SE][SS] குரலெழுப்பு![SE][SS] உள்ளத்தில் உள்ளதை[SE][SS] என் தலைவர் திருமுன்[SE][SS] தண்ணீரைப் போல் ஊற்றிவிடு![SE][SS] தெருமுனையில்[SE][SS] பசியால் மயங்கி விழும்[SE][SS] குழந்தைகளின் உயிருக்காக,[SE][SS] அவரை நோக்கி[SE][SS] உன் கைகளை உயர்த்து![SE][QE]
20. [QS][SS] கண்ணோக்கும் ஆண்டவரே![SE][SS] எண்ணிப் பாரும்;[SE][SS] யாருக்கு இப்படிச்[SE][SS] செய்திருக்கின்றீர்?[SE][SS] பெண்கள் தங்கள்[SE][SS] கர்ப்பத்தின் கனிகளையே,[SE][SS] கைக்குழந்தைகளையே,[SE][SS] தின்ன வேண்டுமோ?[SE][SS] குருவும், இறைவாக்கினரும்[SE][SS] என் தலைவரின் திருத்தூயகத்தில்[SE][SS] கொல்லப்படவேண்டுமோ?[SE][QE]
21. [QS][SS] வீதிகளின் புழுதியில்[SE][SS] சிறியோரும் பெரியோரும்[SE][SS] வீழ்ந்து கிடக்கின்றனர்![SE][SS] என் கன்னியரும் காளையரும்[SE][SS] வாளால் வீழ்த்தப்பட்டனர்![SE][SS] உமது சீற்றத்தின் நாளில்[SE][SS] ஈவிரக்கமின்றி[SE][SS] அவர்களைக் கொன்று குவித்தீர்![SE][QE]
22. [QS][SS] திருவிழாவுக்கு அழைப்பது போல,[SE][SS] எப்பக்கமும் எனக்கெதிராகப்[SE][SS] பேரச்சத்தை வரவழைத்தீர்![SE][SS] ஆண்டவரது சீற்றத்தின் நாளில்[SE][SS] உயிர்தப்பிப் பிழைத்தவரோ[SE][SS] எஞ்சியவரோ எவரும் இல்லை![SE][SS] நான் பேணி வளர்த்தவர்களை[SE][SS] என் எதிரி கொன்றழித்தான்![SE][PE][QE]