1. {எருசலேமின் துன்பங்கள்} [PS] [QS][SS] அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர்[SE][SS] தனியளாய் அமர்ந்தனளே![SE][SS] நாடுகளில் மாண்புடையாள்[SE][SS] விதவைபோல் ஆனாளே![SE][SS] மாநிலங்களின் இளவரசி[SE][SS] அடிமைப்பெண் ஆயினளே![SE][QE]
2. [QS][SS] ஆறாத் துயருற்று[SE][SS] இரவில் அவள் அழுகின்றாள்;[SE][SS] அவளின் கன்னங்களில்[SE][SS] கண்ணீர் வடிகின்றது;[SE][SS] அவளின் காதலரில்[SE][SS] தேற்றுவார் எவரும் இல்லை;[SE][SS] அவளின் நண்பர் அனைவரும்[SE][SS] அவளுக்குத் துரோகம் செய்து[SE][SS] பகைவர் ஆயினர்.[SE][QE]
3. [QS][SS] இன்னலுற்ற அடிமையான யூதா[SE][SS] நாடுகடத்தப்பட்டாள்![SE][SS] வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும்[SE][SS] அவள் அமைதி பெறவில்லை![SE][SS] துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே[SE][SS] அவளை வளைத்து பிடித்தனர்![SE][QE]
4. [QS][SS] விழாக்களுக்குச் செல்பவர்[SE][SS] யாருமில்லை;[SE][SS] சீயோனுக்குச் செல்லும் வழிகள்[SE][SS] புலம்புகின்றன;[SE][SS] அவள் நுழைவாயில்கள்[SE][SS] பாழடைந்துள்ளன;[SE][SS] அவள் குருக்கள்[SE][SS] பெருமூச்சு விடுகின்றனர்;[SE][SS] அவளின் கன்னிப் பெண்கள்[SE][SS] ஏங்கித் தவிக்கின்றனர்;[SE][SS] அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.[SE][QE]
5. [QS][SS] உயர் தலைவர் ஆயினர்[SE][SS] அவளின் எதிரிகள்![SE][SS] வளமுடன் வாழ்கின்றனர்[SE][SS] அவளின் பகைவர்![SE][SS] அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக[SE][SS] ஆண்டவர் அவளைத்[SE][SS] துன்பத்திற்கு உட்படுத்தினார்![SE][SS] அவள் குழந்தைகளை எதிரிகள்[SE][SS] கைதியாக்கிக்கொண்டு போயினர்.[SE][QE]
6. [QS][SS] அனைத்து மேன்மையும்[SE][SS] மகள் சீயோனை விட்டு அகன்றது;[SE][SS] அவள் தலைவர்கள்[SE][SS] பசும்புல் காணா[SE][SS] மான்கள்போல் ஆயினர்.[SE][SS] துரத்தி வருவோர் முன் அவர்கள்[SE][SS] ஆற்றல் அற்றவர் ஆயினர்.[SE][QE]
7. [QS][SS] எருசலேம், தன் துன்ப நாள்களிலும்,[SE][SS] அகதியாய் வாழ்ந்தபோதும்,[SE][SS] முன்னாள்களில் தனக்கிருந்த[SE][SS] நலன்கள் அனைத்தையும்[SE][SS] நினைவுகூர்ந்தாள்;[SE][SS] அவளின் மக்கள்[SE][SS] எதிரிகளின் கைகளில்[SE][SS] சிக்கினார்கள்;[SE][SS] அவளுக்கு உதவி செய்வார்[SE][SS] யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள்[SE][SS] அவளை ஏளனம் செய்தனர்.[SE][QE]
8. [QS][SS] ஏராளமாய்ப் பாவம் செய்தாள்[SE][SS] எருசலேம்;[SE][SS] அதனால் அவள்[SE][SS] கறைப்பட்டவள் ஆனாள்;[SE][SS] அவளை முன்பு மதித்த அனைவரும்[SE][SS] அவமதித்தனர்;[SE][SS] அவளுடைய திறந்த[SE][SS] மேனியைக் கண்டனர்;[SE][SS] அவளும் பெருமூச்சுவிட்டுப்[SE][SS] பின்னோக்கித் திரும்பினாள்.[SE][QE]
9. [QS][SS] ஐயகோ! அவள் தீட்டு[SE][SS] அவள் ஆடையில் தெரிகின்றதே![SE][SS] அவள் தனக்கு வரவிருப்பதை[SE][SS] நினைவில் கொள்ள வில்லை![SE][SS] அவளது வீழ்ச்சி[SE][SS] அதிர்ச்சியைத் தருகின்றது![SE][SS] அவளைத் தேற்றுவார்[SE][SS] யாரும் இல்லை![SE][SS] “ஆண்டவரே[SE][SS] என் துன்பத்தைப் பாரும்![SE][SS] பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!”[SE][QE]
10. [QS][SS] ஒப்பற்ற அவளது விருப்பமான[SE][SS] பொருளனைத்தின்மீதும்[SE][SS] கைவைத்தான் பகைவன்![SE][SS] வேற்றினத்தார்[SE][SS] உம் சபைக்கு வருவதைத்[SE][SS] தடை செய்தீர்![SE][SS] அன்னார் அவளது[SE][SS] திருத்தலத்தில் நுழைவதை[SE][SS] அவள் பார்த்து நின்றாள்![SE][QE]
11. [QS][SS] உணவைத் தேடி[SE][SS] அவளின் மக்கள் அனைவரும்[SE][SS] ஓலமிடுகின்றனர்![SE][SS] உயிரைக் காத்திடத்[SE][SS] தம் ஒப்பற்ற பொருள்களை[SE][SS] உணவுக்காகத் தந்தனர்![SE][SS] “ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்![SE][SS] நான் எத்தகு இழிநிலைக்கு[SE][SS] உள்ளானேன் என்று பாரும்!”[SE][QE]
12. [QS][SS] இவ்வழியாய்க் கடந்து செல்வோரே![SE][SS] உங்களுக்குக் கவலை இல்லையா?[SE][SS] அனைவரும் உற்றுப் பாருங்கள்![SE][SS] எனக்கு வந்துற்ற துயர்போல[SE][SS] வேறேதும் துயர் உண்டோ?[SE][SS] ஆண்டவர் தம் வெஞ்சின நாளில்[SE][SS] என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.[SE][QE]
13. [QS][SS] மேலிருந்து அவர் நெருப்பினை[SE][SS] என் எலும்புகளுக்குள்[SE][SS] இறங்கச் செய்தார்![SE][SS] என் கால்களுக்கு வலை விரித்தார்![SE][SS] அவர் என்னைப்[SE][SS] பின்னடையச் செய்தார்![SE][SS] அவர் என்னைப் பாழாக்கினார்![SE][SS] நாள் முழுவதும்[SE][SS] நான் சோர்ந்து போகிறேன்.[SE][QE]
14. [QS][SS] என் குற்றங்கள் என்னும் நுகம்[SE][SS] அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது;[SE][SS] அவை பிணைக்கப்பட்டு,[SE][SS] என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன;[SE][SS] அவர் என் வலிமையைக்[SE][SS] குன்றச் செய்தார்;[SE][SS] நான் எழ இயலாதவாறு[SE][SS] என் தலைவர் என்னை[SE][SS] அவர்கள் கையில் ஒப்புவித்தார்.[SE][QE]
15. [QS][SS] என் தலைவர் என்னிடமுள்ள[SE][SS] வலியோர் அனைவரையும்[SE][SS] அவமதித்தார்;[SE][SS] என் இளைஞரை அடித்து நொறுக்க[SE][SS] அவர் எனக்கு எதிராக[SE][SS] ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;[SE][SS] மகள் யூதாவாகிய கன்னியை,[SE][SS] ஆலையில் திராட்சைப் பழத்தைப்[SE][SS] பிழிவதுபோல,[SE][SS] என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.[SE][QE]
16. [QS][SS] இவற்றின் பொருட்டு[SE][SS] நான் புலம்புகின்றேன்;[SE][SS] என் இரு கண்களும்[SE][SS] கண்ணீரைப் பொழிகின்றன;[SE][SS] என் உயிரைக் காத்து[SE][SS] ஆறுதல் அளிப்பவர்[SE][SS] எனக்கு வெகு தொலையில் உள்ளார்;[SE][SS] பகைவன் வெற்றி கொண்டதால்[SE][SS] என் பிள்ளைகள்[SE][SS] பாழாய்ப் போயினர்.[SE][QE]
17. [QS][SS] சீயோன் தன் கைகளை[SE][SS] உயர்த்துகின்றாள்;[SE][SS] அவளைத் தேற்றுவார்[SE][SS] யாருமில்லை;[SE][SS] சூழ்ந்து வாழ்வோர்[SE][SS] யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு[SE][SS] ஆண்டவர் கட்டளையிட்டார்;[SE][SS] எருசலேம் அவர்களிடையே[SE][SS] தீட்டுப்பொருள் ஆயிற்று.[SE][QE]
18. [QS][SS] ஆண்டவரோ நீதியுள்ளவர்;[SE][SS] நான் அவரது வாக்குக்கு எதிராகக்[SE][SS] கிளர்ச்சி செய்தேன்;[SE][SS] அனைத்து மக்களினங்களே,[SE][SS] செவிகொடுங்கள்;[SE][SS] என் துயரத்தைப் பாருங்கள்;[SE][SS] என் கன்னிப்பெண்களும்[SE][SS] இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.[SE][QE]
19. [QS][SS] என் காதலர்களை அழைத்தேன்;[SE][SS] அவர்களோ என்னை ஏமாற்றினர்;[SE][SS] என் குருக்களும் பெரியோரும்[SE][SS] தங்கள் உயிரைக் காத்திட[SE][SS] உணவு தேடுகையில்,[SE][SS] நகரில் பசியால் மாண்டனர்.[SE][QE]
20. [QS][SS] ஆண்டவரே,[SE][SS] என்னைக் கண்ணோக்கும்![SE][SS] துயரில் நான் மூழ்கியுள்ளேன்![SE][SS] நான் பெருங் கலகம் செய்துள்ளேன்![SE][SS] என் குலை நடுங்குகின்றது![SE][SS] என் இதயம் வெடிக்கின்றது![SE][SS] வெளியே வாளுக்கு இரையாகினர்[SE][SS] என் பிள்ளைகள்![SE][SS] வீட்டினுள்ளும் சாவு மயம்![SE][QE]
21. [QS][SS] நான் விடும் பெருமூச்சை[SE][SS] அவர்கள் கேட்டார்கள்;[SE][SS] என்னைத் தேற்றுவார்[SE][SS] யாரும் இல்லை;[SE][SS] என் எதிரிகள் அனைவரும்[SE][SS] எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக்[SE][SS] கேள்வியுற்றனர்;[SE][SS] நீரே அதைச் செய்தீர் என[SE][SS] மகிழ்ச்சி அடைகின்றனர்![SE][SS] நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்![SE][SS] அவர்களும் என்னைப்போல்[SE][SS] ஆகட்டும்![SE][QE]
22. [QS][SS] அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும்[SE][SS] உம் திருமுன் வருவதாக![SE][SS] என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு,[SE][SS] நீர் என்னைத் தண்டித்தது போல்,[SE][SS] அவர்களையும் தண்டியும்![SE][SS] விம்மல்கள் மிகப் பல![SE][SS] என் இதயம் சோர்ந்துபோயிற்று![SE][PE][QE]