தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோசுவா
1. லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி,
2. கானான் நாட்டில் சீலோவில் கூறியது; "நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார். "
3. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளைப்படி தங்கள் பங்கிலிருந்து லேவியருக்குப் பின்வருமாறு நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர்.
4. கோகாத்தியரின் குடும்பங்களுக்காகச் சீட்டுப் போட்டனர். லேவியருள் குரு ஆரோனின் மக்களுக்கு, யூதா குலத்திலிருந்தும் சிமியோன் குலத்திலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.
5. கோகாத்தியரில் ஏனைய மக்களுக்கு, எப்ராயிம் குலத்தின் குடும்பத்திலிருந்தும், தாண் குலத்திலிருந்தும் மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பத்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.
6. கேர்சோன் மக்களுக்கு இசக்கார் குலத்தின் குடும்பங்களிலிருந்தும், ஆசேர் குலத்திலிருந்தும், நப்தலி குலத்திலிருந்தும், பாசானிலிருந்த மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.
7. மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும், காத்துக் குலத்திலிருந்தும், செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன.
8. ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர்.
9. யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்;
10. லேவியரின் மக்கள் கோகாத்தியரின் குடும்பத்தைச் சார்ந்த ஆரோனின் மக்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் அவர்களுக்குப் பின்வருமாறு நகர்கள் கிடைத்தன.
11. யூதா மலைநாட்டில் உள்ள எபிரோன் என்னும் கிரியத்து அர்பாவைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுக்குக் கிடைத்தது. அர்பா ஆனாக்கின் தந்தை.
12. நகரின் விளைநிலமும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு உடைமையாகக் கிடைத்தன.
13. குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
14. யாத்திர், அதன் மேய்ச்சல் நிலம்; எசுத்தமோவா, அதன் மேய்ச்சல் நிலம்;
15. கோலோன், அதன் மேய்ச்சல் நிலம்; தெபீர், அதன் மேய்ச்சல் நிலம்;
16. அயின், அதன் மேய்ச்சல் நிலம்; யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்; பெத்ச்மேசு அதன் மேய்ச்சல் நிலம் ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள்.
17. பென்யமின் குலத்திலிருந்து கொடுக்கப்பட்டவை; கிபயோன், அதன் மேய்ச்சல் நிலம்; கேபா, அதன் மேய்ச்சல் நிலம்;
18. அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; அல்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
19. குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை மொத்தம் பதின் மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
20. லேவியரைச் சார்ந்த கோகாத்தின் ஏனைய குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் உடைமைகளிலிருந்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கொடுக்கப்பட்டன.
21. அவர்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்; மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்; கேசேர், அதன் மேய்ச்சல் நிலம்
22. கிபட்சயிம், அதன் மேய்ச்சல் நிலம், பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
23. தாணின் குலத்திலிருந்து கிடைத்தவை; எல்தக்கே, அதன் மேய்ச்சல் நிலம்; கிபத்தோன், அதன் மேய்ச்சல் நிலம்;
24. அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
25. மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
26. இவ்வாறு கோகாத்தின் எஞ்சிய குடும்பங்களுக்குப் பத்து நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.
27. லேவியரின் குடும்பத்தைச் சார்ந்த கேர்சோனின் குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான பாசானில் கோலான், அதன் மேய்ச்சல் நிலம்; பெயசுதரா, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
28. இசக்காரின் குலத்திலிருந்து கிடைத்தவை; கிசியோன், அதன் மேய்ச்சல் நிலம்; தாபராத்து, அதன் மேய்ச்சல் நிலம்;
29. யார்முத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஏன்கன்னிம், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
30. ஆசேரின் குலத்திலிருந்து கிடைத்தவை; மிசால், அதன் மேய்ச்சல் நிலம்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலம்,
31. எல்காத்து, அதன் மேய்ச்சல் நிலம்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
32. நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கலிலேயாவின் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலம்; அம்மோத்தோர், அதன் மேய்ச்சல் நிலம்; காத்தான், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக மூன்று நகர்கள்.
33. இவ்வாறு கேர்சோனின் குடும்பங்களுக்குக் கிடைத்தவை இப் பதின்மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
34. எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்; கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம்.
35. திம்னா, அதன் மேய்ச்சல் நிலம்; நகலால், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
36. ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்; யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்;
37. கெதமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
38. காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்;
39. எஸ்போன், அதன் மேய்ச்சல் நிலம்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
40. இவ்வாறு எஞ்சிய லேவியருள் மெராரி குடும்பங்களுக்குச் சீட்டு விழுந்ததன்படி கிடைத்த மொத்த நகர்கள் பன்னிரண்டு.
41. இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
42. எல்லா நகர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன.
43. இவ்வாறு ஆண்டவர் அவர்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாடு முழுவதையும் இஸ்ரயேலுக்குக் கொடுத்தார். அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்தார்கள்.
44. அவர்கள் மூதாதையருக்கு வாக்களித்தபடி ஆண்டவர் அவர்களுக்கு நாட்டின் எல்லை எங்கும் அமைதி நிலவச் செய்தார். பகைவர்களில் எவனாலும் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. கடவுள் அவர்களுடைய பகைவர்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார்.
45. ஆண்டவர் இஸ்ரயேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 21 of Total Chapters 24
யோசுவா 21:14

×

Alert

×

tamil Letters Keypad References