தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோசுவா
1. {அடைக்கல நகர்கள்} [PS] ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
2. “இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, ‛அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கூறுவாய். [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
3. அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும். [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
4. கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார். அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர். [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
5. இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார். இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை. [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
6. கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார். அதன்பின் கொலையாளி தம் நகருக்கு – எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு – தம் வீட்டுக்குச் செல்வார்.” [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
7. தேர்ந்துகொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம் மலைநாட்டில் செக்கேம்; யூதா மலைநாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா; [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
8. யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்; காத்து குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து; மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்; [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ]
9. இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. ] [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 24
யோசுவா 20:13
அடைக்கல நகர்கள் 1 ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 2 “இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, ‛அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கூறுவாய். * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. 3 அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும். [* எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13 ] 4 கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார். அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர். * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. 5 இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார். இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை. * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. 6 கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார். அதன்பின் கொலையாளி தம் நகருக்கு – எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு – தம் வீட்டுக்குச் செல்வார்.” * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. 7 தேர்ந்துகொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம் மலைநாட்டில் செக்கேம்; யூதா மலைநாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா; * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. 8 யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்; காத்து குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து; மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்; * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13. 9 இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை * எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References