தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {கடவுளது நீதியின் மேன்மை} [PS] யோபு அதற்கு உரைத்த பதில்:
2. [QS][SS] உண்மையில் இது இவ்வாறு[SE][SS] என்று அறிவேன்; ஆனால், மனிதர்[SE][SS] இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?[SE][QE]
3. [QS][SS] ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,[SE][SS] ஆயிரத்தில் ஒன்றுக்கேனும்[SE][SS] அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? [* யோபு 4:17 ] [SE][QE]
4. [QS][SS] இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;[SE][SS] ஆற்றலில் வல்லவர்;[SE][SS] அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,[SE][SS] வளமுடன் வாழ்ந்தவர் யார்?[SE][QE]
5. [QS][SS] அவர் மலைகளை அகற்றுவார்;[SE][SS] அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்[SE][SS] அவைகளைத் தலைகீழாக்குவார்.[SE][QE]
6. [QS][SS] அசைப்பார் அவர் நிலத்தை[SE][SS] அதனிடத்தினின்று;[SE][SS] அதிரும் அதனுடைய தூண்கள்.[SE][QE]
7. [QS][SS] அவர் கட்டளையிடுவார்;[SE][SS] கதிரவன் தோன்றான்;[SE][SS] அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.[SE][QE]
8. [QS][SS] தாமே தனியாய் வானை விரித்தவர்,[SE][SS] ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.[SE][QE]
9. [QS][SS] வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,[SE][SS] கார்த்திகை விண்மீன்களையும்,[SE][SS] தென்திசை விண்மீன் குழுக்களையும்[SE][SS] அமைத்தவர் அவரே.[SE][QE]
10. [QS][SS] உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,[SE][SS] கணக்கிட முடியா அருஞ்செயல்களையும்[SE][SS] ஆற்றுநர் அவரே. [* யோபு 38:31; ஆமோ 5:8 ] [SE][QE]
11. [QS][SS] இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்[SE][SS] நான் பார்க்க முடியவில்லை; நழுவிச்[SE][SS] செல்கையில் நான் உணர முடியவில்லை.[SE][QE]
12. [QS][SS] இதோ! அவர் பறிப்பாரானால்,[SE][SS] அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர்[SE][SS] என அவரைத் கேட்பார் யார்?[SE][QE]
13. [QS][SS] கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்;[SE][SS] அவரடி பணிந்தனர்[SE][SS] இராகாபின் துணைவர்கள்.[SE][QE]
14. [QS][SS] இப்படியிருக்க, எப்படி அவருக்குப்[SE][SS] பதிலுரைப்பேன்? எதிர்நின்று[SE][SS] அவரோடு எச்சொல் தொடுப்பேன்?[SE][QE]
15. [QS][SS] நான் நேர்மையாக இருந்தாலும்[SE][SS] அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;[SE][SS] என் நீதிபதியிடம் நான்[SE][SS] இரக்கத்தையே கெஞ்சுவேன்.[SE][QE]
16. [QS][SS] நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,[SE][SS] என் வேண்டுதலுக்கு அவர்[SE][SS] செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.[SE][QE]
17. [QS][SS] புயலினால் என்னை நொறுக்குவார்;[SE][SS] காரணமின்றி என் காயங்களைப்[SE][SS] பெருக்குவார்.[SE][QE]
18. [QS][SS] அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது,[SE][SS] கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.[SE][QE]
19. [QS][SS] வலிமையில் அவருக்கு நிகர் அவரே![SE][SS] அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?[SE][QE]
20. [QS][SS] நான் நேர்மையாக இருந்தாலும்,[SE][SS] என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;[SE][SS] நான் குற்றமற்றவனாக இருந்தாலும்,[SE][SS] மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.[SE][QE]
21. [QS][SS] குற்றமற்றவன் நான்;[SE][SS] என்னைப்பற்றிக் கவலையில்லை;[SE][SS] என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.[SE][QE]
22. [QS][SS] எல்லாம் ஒன்றுதான்; எனவேதான்[SE][SS] சொல்கின்றேன்; “அவர் நல்லாரையும்[SE][SS] பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்’.[SE][QE]
23. [QS][SS] பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,[SE][SS] அவர் மாசற்றவரின்[SE][SS] நெருக்கடி கண்டு நகைப்பார்.[SE][QE]
24. [QS][SS] வையகம் கொடியோர் கையில்[SE][SS] கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின்[SE][SS] கண்களை அவர் கட்டுகின்றார்.[SE][SS] அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?[SE][QE]
25. [QS][SS] ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன[SE][SS] என் வாழ்நாள்கள்;[SE][SS] அவை பறந்து செல்கின்றன;[SE][SS] நன்மையொன்றும் அவை காண்பதில்லை.[SE][QE]
26. [QS][SS] நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;[SE][SS] இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.[SE][QE]
27. [QS][SS] ‘நான் துயர் மறப்பேன்;[SE][SS] முகமலர்ச்சி கொள்வேன்;[SE][SS] d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,[SE][QE]
28. [QS][SS] என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன்,[SE][SS] ஏனெனில், அவர் என்னைக்[SE][SS] குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.[SE][QE]
29. [QS][SS] நான்தான் குற்றவாளி எனில்,[SE][SS] வீணே ஏன் நான் போராடவேண்டும்?[SE][QE]
30. [QS][SS] பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,[SE][SS] சவர்க்காரத்தினால்[SE][SS] என் கைகளைத் தூய்மையாக்கினும்,[SE][QE]
31. [QS][SS] குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்;[SE][SS] என் உடையே என்னை வெறுத்திடுமே![SE][QE]
32. [QS][SS] ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும்,[SE][SS] வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும்[SE][SS] என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.[SE][QE]
33. [QS][SS] இருவர்மீதும் தம் கையை வைக்க,[SE][SS] ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.[SE][QE]
34. [QS][SS] அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து![SE][SS] அப்போது மிரட்டாது என்னை[SE][SS] அவரைப்பற்றிய அச்சம்![SE][QE]
35. [QS][SS] அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;[SE][SS] அப்படிப் பேசும் நிலையில்[SE][SS] நான் இல்லையே இப்போது.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 42
யோபு 9:41
கடவுளது நீதியின் மேன்மை 1 யோபு அதற்கு உரைத்த பதில்: 2 உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி? 3 ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? * யோபு 4:17 4 இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? 5 அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். 6 அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள். 7 அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. 8 தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். 9 வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. 10 உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே. * யோபு 38:31; ஆமோ 5:8 11 இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை; நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. 12 இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்? 13 கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்; அவரடி பணிந்தனர் இராகாபின் துணைவர்கள். 14 இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? 15 நான் நேர்மையாக இருந்தாலும் அவருக்குப் பதிலுரைக்க இயலேன்; என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன். 16 நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை. 17 புயலினால் என்னை நொறுக்குவார்; காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார். 18 அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது, கசப்பினால் என்னை நிரப்புகின்றார். 19 வலிமையில் அவருக்கு நிகர் அவரே! அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்? 20 நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் குற்றமற்றவனாக இருந்தாலும், மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும். 21 குற்றமற்றவன் நான்; என்னைப்பற்றிக் கவலையில்லை; என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன். 22 எல்லாம் ஒன்றுதான்; எனவேதான் சொல்கின்றேன்; “அவர் நல்லாரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்’. 23 பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது, அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார். 24 வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின் கண்களை அவர் கட்டுகின்றார். அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்? 25 ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன என் வாழ்நாள்கள்; அவை பறந்து செல்கின்றன; நன்மையொன்றும் அவை காண்பதில்லை. 26 நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்; இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும். 27 ‘நான் துயர் மறப்பேன்; முகமலர்ச்சி கொள்வேன்; d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும், 28 என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன், ஏனெனில், அவர் என்னைக் குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன். 29 நான்தான் குற்றவாளி எனில், வீணே ஏன் நான் போராடவேண்டும்? 30 பனிநீரில் நான் என்னைக் கழுவினும், சவர்க்காரத்தினால் என் கைகளைத் தூய்மையாக்கினும், 31 குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்; என் உடையே என்னை வெறுத்திடுமே! 32 ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும், வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும் என்னைப்போல் அவர் மனிதர் இல்லை. 33 இருவர்மீதும் தம் கையை வைக்க, ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே. 34 அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து! அப்போது மிரட்டாது என்னை அவரைப்பற்றிய அச்சம்! 35 அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது; அப்படிப் பேசும் நிலையில் நான் இல்லையே இப்போது.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References