1. [PS] [QS][SS] மண்ணில் வாழ்வது[SE][SS] மனிதருக்குப் போரட்டந்தானே?[SE][SS] அவர்களின் நாள்கள் கூலியாள்களின்[SE][SS] நாள்களைப் போன்றவைதாமே?[SE][QE]
2. [QS][SS] நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும்,[SE][SS] கூலிக்குக் காத்திருக்கும்[SE][SS] வேலையாள் போலவும்,[SE][QE]
3. [QS][SS] வெறுமையான திங்கள்கள்[SE][SS] எனக்கு வாய்த்தன;[SE][SS] இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.[SE][QE]
4. [QS][SS] படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்![SE][SS] இரவோ நீண்டிருக்கும்;[SE][SS] விடியும்வரை புரண்டு உழல்வேன்,[SE][QE]
5. [QS][SS] புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின[SE][SS] என் உடலை; வெடித்தது என் தோல்;[SE][SS] வடிந்தது சீழ்.[SE][QE]
6. [QS][SS] என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும்[SE][SS] விரைந்தோடுகின்றன; அவை[SE][SS] நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.[SE][QE]
7. [QS][SS] என் உயிர் வெறுங்காற்றே என்பதை[SE][SS] நினைவுகூர்வீர்; என் கண்கள்[SE][SS] மீண்டும் நன்மையைக் காணா.[SE][QE]
8. [QS][SS] என்னைக் காணும் கண்[SE][SS] இனி என்னைப் பார்க்காது.[SE][SS] என் மேல் உம் கண்கள் இருக்கும்;[SE][SS] நானோ இரேன்.[SE][QE]
9. [QS][SS] கார்முகில் கலைந்து மறைவதுபோல்[SE][SS] பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.[SE][QE]
10. [QS][SS] இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார்;[SE][SS] அவர்களது இருப்பிடம்[SE][SS] அவர்களை அறியாது.[SE][QE]
11. [QS][SS] ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்;[SE][SS] என் மனத்தின் வேதனையை[SE][SS] எடுத்துரைப்பேன்;[SE][SS] உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.[SE][QE]
12. [QS][SS] கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா?[SE][SS] காவல் என்மீது வைக்கலானீர்![SE][QE]
13. [QS][SS] “என் படுக்கை ஆறுதல் அளிக்கும்;[SE][SS] என் மெத்தை முறையீட்டைத்[SE][SS] தணிக்கும்” என்பேனாகில்,[SE][QE]
14. [QS][SS] கனவுகளால் என்னைக்[SE][SS] கலங்க வைக்கின்றீர்;[SE][SS] காட்சிகளால் என்னைத்[SE][SS] திகிலடையச் செய்கின்றீர்.[SE][QE]
15. [QS][SS] ஆதலால் நான் குரல்வளை[SE][SS] நெரிக்கப்படுவதையும்[SE][SS] வேதனையைவிடச் சாவதையும்[SE][SS] விரும்புகின்றேன்.[SE][QE]
16. [QS][SS] வெறுத்துப்போயிற்று; என்றென்றும்[SE][SS] நான் வாழப்போவதில்லை;[SE][SS] என்னைவிட்டுவிடும். ஏனெனில்[SE][SS] என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.[SE][QE]
17. [QS][SS] மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை[SE][SS] ஒரு பொருட்டாய் எண்ண?[SE][SS] உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க? [* திபா 8:4; 144:3.[QE]. ] [SE][QE]
18. [QS][SS] காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய?[SE][SS] மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?[SE][QE]
19. [QS][SS] எவ்வளவு காலம் என்மேல்[SE][SS] வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்?[SE][SS] என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட[SE][SS] என்னை விடமாட்டீரா?[SE][QE]
20. [QS][SS] மானிடரின் காவலரே![SE][SS] நான் பாவம் இழைத்துவிட்டேனா?[SE][SS] உமக்கு நான் செய்ததென்னவோ?[SE][SS] என்னை உம் இலக்காக ஆக்கியதேன்?[SE][SS] உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?[SE][QE]
21. [QS][SS] என் மீறலை மன்னியாதது ஏன்?[SE][SS] என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்?[SE][SS] இப்பொழுதோ நான் மண்ணுக்குள்[SE][SS] உறங்கப் போகின்றேன்;[SE][SS] நீர் என்னைத் தேடுவீர்; நான் இல்லாதுபோவேன்.[SE][PE]