1. {லிவியத்தான்} [PS] [QS][SS] தூண்டிலால் லிவியத்தனைத்[SE][SS] தூக்கிடுவாயோ? கயிற்றினால்[SE][SS] அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ? [* திபா 74:14; 104:26; எசா 27:1.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] அதன் மூக்கிற்குச் கயிறு இட[SE][SS] உன்னால் முடியுமோ? அதன் தாடையில்[SE][SS] கொக்கியினால் குத்த முடியுமோ?[SE][QE]
3. [QS][SS] வேண்டுகோள் பல[SE][SS] அது உன்னிடம் விடுக்குமோ?[SE][SS] கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?[SE][QE]
4. [QS][SS] என்றும் உனக்கு ஏவல்புரிய[SE][SS] உன்னுடன் அது[SE][SS] உடன்படிக்கை செய்யுமோ?[SE][QE]
5. [QS][SS] பறவைபோல் துள்ளி அதனுடன்[SE][SS] ஆடுவாயா? உம் மகளிர்க்கென[SE][SS] அதனைக் கட்டிவைப்பாயா?[SE][QE]
6. [QS][SS] மீனவர் குழுவினர்[SE][SS] அதன்மேல் பேரம் பேசுவார்களோ?[SE][SS] அவர்கள் வணிகரிடையே[SE][SS] அதைக் கூறுபோடுவார்களோ?[SE][QE]
7. [QS][SS] கூரிய முட்களால் அதன் தோலையும்[SE][SS] மீன் எறி வேல்களால் அதன் தலையையும்[SE][SS] குத்தி நிரப்புவாயோ?[SE][QE]
8. [QS][SS] உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;[SE][SS] எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.[SE][SS] மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.[SE][QE]
9. [QS][SS] இதோ! தொடுவோர் நம்பிக்கை[SE][SS] தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே[SE][SS] ஒருவர் கதிகலங்குவார்.[SE][QE]
10. [QS][SS] அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;[SE][SS] பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?[SE][QE]
11. [QS][SS] அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர்[SE][SS] எவராவது உண்டோ?[SE][SS] விண்ணகத்தின்கீழ்[SE][SS] அப்படிப்பட்டவர் யாருமில்லை![SE][QE]
12. [QS][SS] அதன் உறுப்புகள், அதன் ஆற்றல்[SE][SS] அதன் அமைப்பின் அழகு[SE][SS] அனைத்தையும் பற்றி[SE][SS] அறிவிக்காது விடேன்.[SE][QE]
13. [QS][SS] அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?[SE][SS] அதன் தாடை இரண்டுக்குமிடையே[SE][SS] நுழைபவர் யார்?[SE][QE]
14. [QS][SS] அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?[SE][SS] அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.[SE][QE]
15. [QS][SS] அதன் முதுகு கேடய வரிசையாம்;[SE][SS] நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.[SE][QE]
16. [QS][SS] ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.[SE][SS] காற்றும் அதனிடையே கடந்திடாது;[SE][QE]
17. [QS][SS] ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;[SE][SS] பிரிக்கமுடியாதவாறு[SE][SS] ஒன்றாய்ப் பிடித்துள்ளன.[SE][QE]
18. [QS][SS] துலங்கும் மின்னல் அதன் தும்மல்;[SE][SS] வைகறை இமைகள் அதன் கண்கள்.[SE][QE]
19. [QS][SS] அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;[SE][SS] அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.[SE][QE]
20. [QS][SS] நாணல் நெருப்புக்[SE][SS] கொதிகலனின்று வருவதுபோல்[SE][SS] அதன் நாசியினின்று புகை கிளம்பும்.[SE][QE]
21. [QS][SS] அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;[SE][SS] அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.[SE][QE]
22. [QS][SS] அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;[SE][SS] நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.[SE][QE]
23. [QS][SS] அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;[SE][SS] கெட்டியாயிருக்கும் அவற்றை[SE][SS] அசைக்க ஒண்ணாது.[SE][QE]
24. [QS][SS] அதன் நெஞ்சம் கல்லைப்போல்[SE][SS] கடினமானது;[SE][SS] திரிகையின் அடிக்கல்போல்[SE][SS] திண்மையானது.[SE][QE]
25. [QS][SS] அது எழும்பொழுதே[SE][SS] தெய்வங்கள் அஞ்சுகின்றன;[SE][SS] அது அறையவரும்போதே[SE][SS] நிலைகுலைகின்றன.[SE][QE]
26. [QS][SS] வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;[SE][SS] ஈட்டியோ அம்போ, எறிவேலோ[SE][SS] உட்செல்லாது.[SE][QE]
27. [QS][SS] இரும்பை அது துரும்பெனக் கருதும்;[SE][SS] வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்[SE][SS] கொள்ளும்.[SE][QE]
28. [QS][SS] வில்வீரன் அதை விரட்ட முடியாது;[SE][SS] கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.[SE][QE]
29. [QS][SS] பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;[SE][SS] எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.[SE][QE]
30. [QS][SS] அதன் வயிற்றுப்புறம்[SE][SS] ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;[SE][SS] அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்[SE][SS] பரம்புக் கட்டை.[SE][QE]
31. [QS][SS] கொதிகலமென அது[SE][SS] கடலைப் பொங்கச் செய்யும்;[SE][SS] தைலச் சட்டியென அது[SE][SS] ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.[SE][QE]
32. [QS][SS] அது போனபிறகு பாதை பளபளக்கும்;[SE][SS] கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.[SE][QE]
33. [QS][SS] அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;[SE][SS] அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.[SE][QE]
34. [QS][SS] செருக்குற்ற படைப்பு[SE][SS] அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;[SE][SS] வீறுகொண்ட விலங்குகட்கு[SE][SS] வேந்தனும் அதுவே.[SE][PE]