1. [PS] [QS][SS] பின்பு யோபைப் பார்த்து[SE][SS] ஆண்டவர் கூறினார்:[SE][QE]
2. [QS][SS] குற்றம் காண்பவன்,[SE][SS] எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?[SE][SS] கடவுளோடுவாதாடுபவன்[SE][SS] விடையளிக்கட்டும்.[SE][QE]
3. [QS][SS] யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:[SE][QE]
4. [QS][SS] இதோ! எளியேன் யான்[SE][SS] இயம்புதற்குண்டோ? என் வாயைக்[SE][SS] கையால் பொத்திக் கொள்வேன்.[SE][QE]
5. [QS][SS] ஒருமுறை பேசினேன்;[SE][SS] மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;[SE][SS] இனிப் பேசவேமாட்டேன்.[SE][PE][QE]
6. {கடவுளின் இரண்டாம் சொற்பொழிவு} [PS] [QS][SS] ஆண்டவர் சூறாவளியினின்று[SE][SS] யோபுக்கு அருளிய பதில்:[SE][QE]
7. [QS][SS] வீரனைப்போல்[SE][SS] இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;[SE][SS] வினவுவேன் உன்னிடம்;[SE][SS] விடையெனக்கு அளிப்பாய்.[SE][QE]
8. [QS][SS] என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?[SE][SS] உன்னைச் சரியெனக் காட்ட[SE][SS] என்மீது குற்றம் சாட்டுவாயா?[SE][QE]
9. [QS][SS] இறைவனுக்கு உள்ளதுபோல்[SE][SS] உனக்குக் கையுண்டோ?[SE][SS] அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?[SE][QE]
10. [QS][SS] சீர் சிறப்பினால்[SE][SS] உன்னை அணி செய்துகொள்;[SE][SS] மேன்மையையும், மாண்பினையும்[SE][SS] உடுத்திக்கொள்.[SE][QE]
11. [QS][SS] கொட்டு உன் கோபப் பெருக்கை![SE][SS] செருக்குற்ற ஒவ்வொருவரையும்[SE][SS] நோக்கிடு; தாழ்த்திடு![SE][QE]
12. [QS][SS] செருக்குற்ற எல்லாரையும்[SE][SS] நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை[SE][SS] அவர்கள் இடத்திலேயே மிதித்திடு![SE][QE]
13. [QS][SS] புழுதியில் அவர்களை[SE][SS] ஒன்றாய்ப் புதைத்திடு![SE][SS] காரிருளில் அவர் முகங்களை மூடிடு.[SE][QE]
14. [QS][SS] அப்பொழுது, உனது வலக்கை[SE][SS] உன்னைக் காக்குமென்று[SE][SS] நானே ஒத்துக்கொள்வேன்.[SE][PE][QE]
15. {பெகிமோத்து} [PS] [QS][SS] இதோ பார், உன்னைப் படைத்ததுபோல்[SE][SS] நான் உண்டாக்கிய பெகிமோத்து[SE][SS] காளைபோல் புல்லைத் தின்கின்றது.[SE][QE]
16. [QS][SS] இதோ காண்,[SE][SS] அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;[SE][SS] அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.[SE][QE]
17. [QS][SS] அது தன் வாலைக்[SE][SS] கேதுருமரம்போல் விரைக்கும்;[SE][SS] அதன் தொடை நரம்புகள்[SE][SS] கயிறுபோல் இறுகியிருக்கும்;[SE][QE]
18. [QS][SS] அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;[SE][SS] அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.[SE][QE]
19. [QS][SS] இறைவனின் படைப்புகளில்[SE][SS] தலையாயது அதுவே! படைத்தவரே[SE][SS] அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.[SE][QE]
20. [QS][SS] மலைகள் அதற்குப்[SE][SS] புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;[SE][SS] விலங்குகள் எல்லாம்[SE][SS] விளையாடுவதும் அங்கேதான்.[SE][QE]
21. [QS][SS] அது நிழற்செடிக்கு அடியிலும்[SE][SS] நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும்[SE][SS] படுத்துக் கிடக்கும்.[SE][QE]
22. [QS][SS] அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;[SE][SS] ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.[SE][QE]
23. [QS][SS] ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;[SE][SS] அதன் முகத்தே யோர்தான் மோதினும்[SE][SS] அசைவுறாது.[SE][QE]
24. [QS][SS] அதன் கண்காண அதனைக்[SE][SS] கட்டமுடியுமோ? கொக்கியால்[SE][SS] அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?[SE][PE][QE]