1. {கடவுள் மீது நம்பிக்கை[BR](4:1-14:22)} [PS] அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:
2. [QS][SS] “ஒன்று சொன்னால்[SE][SS] உமக்குப் பொறுக்குமோ?[SE][SS] சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?[SE][QE]
3. [QS][SS] பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்![SE][SS] தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்![SE][QE]
4. [QS][SS] உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத்[SE][SS] தாங்கியுள்ளன; தள்ளாடும்[SE][SS] கால்களை உறுதியாக்கியுள்ளன.[SE][QE]
5. [QS][SS] ஆனால் இப்பொழுதோ,[SE][SS] ஒன்று உமக்கு வந்துற்றதும்[SE][SS] வருந்துகின்றீர்; அது உம்மைத்[SE][SS] தாக்கியதும் கலங்குகின்றீர்.[SE][QE]
6. [QS][SS] இறையச்சம் அல்லவா உமது உறுதி?[SE][SS] நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?[SE][QE]
7. [QS][SS] நினைத்துப்பாரும்! குற்றமற்றவர்[SE][SS] எவராவது அழிந்ததுண்டா?[SE][SS] நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?[SE][QE]
8. [QS][SS] நான் பார்த்த அளவில், தீவினையை உழுது,[SE][SS] தீங்கினை விதைத்தவர்[SE][SS] அறுப்பது அதையே![SE][QE]
9. [QS][SS] கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்;[SE][SS] அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.[SE][QE]
10. [QS][SS] அரியின் முழக்கமும்[SE][SS] கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்;[SE][SS] குருளையின் பற்களும் உடைபடும்.[SE][QE]
11. [QS][SS] இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்;[SE][SS] குலைந்துபோம்[SE][SS] பெண்சிங்கத்தின் குட்டிகள்.[SE][QE]
12. [QS][SS] எனக்கொரு வார்த்தை[SE][SS] மறைவாய் வந்தது;[SE][SS] அதன் மெல்லிய ஓசை[SE][SS] என் செவிக்கு எட்டியது.[SE][QE]
13. [QS][SS] ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில்,[SE][SS] இரவுக் காட்சியின் சிந்தனைகளில், [* யோபு 33:15.[QE]. ] [SE][QE]
14. [QS][SS] அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள,[SE][SS] என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.[SE][QE]
15. [QS][SS] ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது;[SE][SS] என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.[SE][QE]
16. [QS][SS] ஆவி நின்றது; ஆனால்,[SE][SS] அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை;[SE][SS] உருவொன்று என் கண்முன் நின்றது;[SE][SS] அமைதி நிலவிற்று; குரலொன்றைக் கேட்டேன்.[SE][QE]
17. [QS][SS] கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?[SE][SS] படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?[SE][QE]
18. [QS][SS] அவர் தம் தொண்டர்களிலே[SE][SS] நம்பிக்கை வைக்கவில்லையெனில்,[SE][SS] அவருடைய வான தூதரிடமே[SE][SS] அவர் குறைகாண்கின்றாரெனில்,[SE][QE]
19. [QS][SS] புழுதியைக் கால்கோளாகக்கொண்டு,[SE][SS] மண் குடிசையில் வாழ்ந்து,[SE][SS] அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும்[SE][SS] மனிதர் எம்மாத்திரம்?[SE][QE]
20. [QS][SS] காலைமுதல் மாலைவரையில்[SE][SS] அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி[SE][SS] என்றென்றும் அழிக்கப்படுவர்.[SE][QE]
21. [QS][SS] அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,[SE][SS] அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?[SE][PE]