1. [PS] [QS][SS] வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?[SE][SS] மான்குட்டியை ஈனுதலைப்[SE][SS] பார்த்தது உண்டா?[SE][QE]
2. [QS][SS] எண்ணமுடியுமா[SE][SS] அவை சினையாயிருக்கும் மாதத்தை?[SE][SS] கணிக்க முடியுமா[SE][SS] அவை ஈனுகின்ற காலத்தை?,[SE][QE]
3. [QS][SS] குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;[SE][SS] வேதனையில் அவற்றை வெளியேற்றும்.[SE][QE]
4. [QS][SS] வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து[SE][SS] வலிமைபெறும்; விட்டுப் பிரியும்;[SE][SS] அவைகளிடம் மீண்டும் வராது.[SE][QE]
5. [QS][SS] காட்டுக் கழுதையைக்[SE][SS] கட்டற்று திரியச் செய்தவர் யார்?[SE][SS] கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?[SE][QE]
6. [QS][SS] பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;[SE][SS] உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.[SE][QE]
7. [QS][SS] நகர அமளியை அது நகைக்கும்;[SE][SS] ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.[SE][QE]
8. [QS][SS] குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;[SE][SS] பசுமை அனைத்தையும் நாடி அலையும்.[SE][QE]
9. [QS][SS] காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?[SE][SS] உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?[SE][QE]
10. [QS][SS] காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி[SE][SS] உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க[SE][SS] அது உன் பின்னே வருமோ?[SE][QE]
11. [QS][SS] அது மிகுந்த வலிமை கொண்டதால்[SE][SS] அதனை நம்பியிருப்பாயோ?[SE][SS] எனவே, உன் வேலையை[SE][SS] அதனிடம் விடுவாயோ?[SE][QE]
12. [QS][SS] அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?[SE][SS] உன் களத்திலிருந்து[SE][SS] தானியத்தைக் கொணருமோ?[SE][QE]
13. [QS][SS] தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;[SE][SS] ஆனால், அதன் இறக்கையிலும்[SE][SS] சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?[SE][QE]
14. [QS][SS] ஏனெனில், மண்மேலே[SE][SS] அது தன் முட்டையை இடும்;[SE][SS] புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.[SE][QE]
15. [QS][SS] காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ[SE][SS] காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ[SE][SS] அது நினைக்கவில்லை.[SE][QE]
16. [QS][SS] தன்னுடையவை அல்லாதன போன்று[SE][SS] தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;[SE][SS] தன் வேதனை வீணாயிற்று[SE][SS] என்று கூடப் பதறாமல்போம்.[SE][QE]
17. [QS][SS] கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;[SE][SS] அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.[SE][QE]
18. [QS][SS] விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,[SE][SS] பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே![SE][QE]
19. [QS][SS] குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?[SE][SS] அதன் கழுத்தைப் பிடரியால்[SE][SS] உடுத்தியது நீயோ?[SE][QE]
20. [QS][SS] அதனைத் தத்துக்கிளிபோல்[SE][SS] தாவச் செய்வது நீயோ?[SE][SS] அதன் செருக்குமிகு கனைப்பு[SE][SS] நடுங்க வைத்திடுமே?[SE][QE]
21. [QS][SS] அது மண்ணைப் பறிக்கும்;[SE][SS] தன் வலிமையில் மகிழும்[SE][SS] போர்க்களத்தைச் சந்திக்கப்[SE][SS] புறப்பட்டுச் செல்லும்.[SE][QE]
22. [QS][SS] அது அச்சத்தை எள்ளி நகையாடும்;[SE][SS] அசையாது;[SE][SS] வாள் முனைக்கண்டு பின்வாங்காது.[SE][QE]
23. [QS][SS] அதன்மேல்[SE][SS] அம்பறாத் தூணி கலகலக்கும்;[SE][SS] ஈட்டியும் வேலும் பளபளக்கும்;[SE][QE]
24. [QS][SS] அது துள்ளும்; பொங்கி எழும்;[SE][SS] மண்ணை விழுங்கும்;[SE][SS] ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;[SE][QE]
25. [QS][SS] எக்காளம் முழங்கும்போதெல்லாம்[SE][SS] “ஐஇ” என்னும்; தளபதிகளின்[SE][SS] இடி முழக்கத்தையும் இரைச்சலையும்[SE][SS] அப்பால் போரினையும்[SE][SS] இப்பாலே மோப்பம் பிடிக்கும்.[SE][QE]
26. [QS][SS] உன் அறிவினாலா வல்லூறு[SE][SS] பாய்ந்து இறங்குகின்றது?[SE][SS] தெற்கு நோக்கி[SE][SS] இறக்கையை விரிக்கின்றது?[SE][QE]
27. [QS][SS] உனது கட்டளையாலா[SE][SS] கழுகு பறந்து ஏறுகின்றது?[SE][SS] உயர்ந்த இடத்தில்[SE][SS] தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?[SE][QE]
28. [QS][SS] பாறை உச்சியில்[SE][SS] கூடுகட்டித் தங்குகின்றது;[SE][SS] செங்குத்துப் பாறையை[SE][SS] அரணாகக் கொண்டுள்ளது.[SE][QE]
29. [QS][SS] அங்கிருந்தே அது கூர்ந்து[SE][SS] இரையைப் பார்க்கும்;[SE][SS] தொலையிலிருந்தே அதன் கண்கள்[SE][SS] அதைக் காணும்.[SE][QE]
30. [QS][SS] குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;[SE][SS] எங்கே பிணமுண்டோ[SE][SS] அங்கே அது இருக்கும். [* மத் 24:28; லூக் 17;37.[QE]. ] [SE][PE]