1. {ஆண்டவரின் முதல் சொற்பொழிவு} [PS] [QS][SS] ஆண்டவர் சூறாவளியினின்று[SE][SS] யோபுக்கு அருளிய பதில்:[SE][QE]
2. [QS][SS] அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை[SE][SS] இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?[SE][QE]
3. [QS][SS] வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;[SE][SS] வினவுவேன் உன்னிடம்,[SE][SS] விடை எனக்களிப்பாய்.[SE][QE]
4. [QS][SS] மண்ணகத்திற்கு நான்[SE][SS] கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?[SE][SS] உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?[SE][QE]
5. [QS][SS] அதற்கு அளவு குறித்தவர் யார்?[SE][SS] உனக்குத்தான் தெரியுமே![SE][SS] அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?[SE][QE]
6. [QS][SS] எதன்மேல் அதன் தூண்கள்[SE][SS] ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன்[SE][SS] மூலைக் கல்லை நாட்டியவர்?[SE][QE]
7. [QS][SS] அப்போது வைகறை விண்மீன்கள்[SE][SS] ஒன்றிணைந்து பாடின![SE][SS] கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்![SE][QE]
8. [QS][SS] கருப்பையினின்று கடல்[SE][SS] உடைப்பெடுத்து ஓடியபொழுது[SE][SS] அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?[SE][QE]
9. [QS][SS] மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,[SE][SS] காரிருளைப் பொதிதுணியாக்கி, [* எரே 5:22 ] [SE][QE]
10. [QS][SS] எல்லைகளை நான் அதற்குக் குறித்து[SE][SS] கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி [* எரே 5:22 ] [SE][QE]
11. [QS][SS] ‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;[SE][SS] உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”[SE][SS] என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ? [* எரே 5:22 ] [SE][QE]
12. [QS][SS] உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்[SE][SS] கட்டளையிட்டதுண்டா?[SE][SS] வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? [* எரே 5:22 ] [SE][QE]
13. [QS][SS] இவ்வாறு, அது வையக விளிம்பைத்[SE][SS] தொட்டிழுத்து, பொல்லாதவரை[SE][SS] அதனுளிருந்து உதறித்தள்ளுமே![SE][QE]
14. [QS][SS] முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்[SE][SS] மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.[SE][QE]
15. [QS][SS] அப்போது, கொடியவரிடமிருந்து[SE][SS] ஒளி பறிக்கப்படும்;[SE][SS] அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.[SE][QE]
16. [QS][SS] கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?[SE][SS] ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?[SE][QE]
17. [QS][SS] சாவின் வாயில்கள்[SE][SS] உனக்குக் காட்டப்பட்டனவோ?[SE][SS] இருள் உலகின் கதவுகளைக்[SE][SS] கண்டதுண்டோ நீ?[SE][QE]
18. [QS][SS] அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?[SE][SS] அறிவிப்பாய் அதிலுள்ள[SE][SS] அனைத்தையும் அறிந்திருந்தால்![SE][QE]
19. [QS][SS] ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ![SE][SS] இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?[SE][QE]
20. [QS][SS] அதன் எல்லைக்கு[SE][SS] அதனை அழைத்துப் போவாயோ?[SE][SS] அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ![SE][QE]
21. [QS][SS] ஆம், அறிவாய்;[SE][SS] அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;[SE][SS] ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ![SE][QE]
22. [QS][SS] உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?[SE][QE]
23. [QS][SS] இடுக்கண் வேளைக்கு எனவும்[SE][SS] கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்[SE][SS] அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.[SE][QE]
24. [QS][SS] ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?[SE][SS] கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?[SE][QE]
25. [QS][SS] வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?[SE][SS] இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?[SE][QE]
26. [QS][SS] மனிதர் வாழா மண்ணிலும்[SE][SS] மாந்தர் குடியிராப் பாலையிலும்[SE][SS] மழை பெய்வித்துப்[SE][QE]
27. [QS][SS] பாழ்வெளிக்கும் வறண்ட[SE][SS] நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்[SE][SS] பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?[SE][QE]
28. [QS][SS] மழைக்குத் தந்தை உண்டோ?[SE][SS] பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?[SE][QE]
29. [QS][SS] பனிக்கட்டி யாருடைய உதரத்தில்[SE][SS] தோன்றுகின்றது? வானின் மூடுபனியை[SE][SS] ஈன்றெடுப்பவர் யார்?[SE][QE]
30. [QS][SS] கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;[SE][SS] ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.[SE][QE]
31. [QS][SS] கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ?[SE][SS] மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?[SE][QE]
32. [QS][SS] குறித்த காலத்தில்[SE][SS] விடிவெள்ளியைக் கொணர்வாயோ?[SE][SS] வடதிசை விண்மீன் குழுவுக்கு[SE][SS] வழி காட்டுவாயோ? [* யோபு 9:9; ஆமோ 5:8.[QE] ] [SE][QE]
33. [QS][SS] வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?[SE][SS] அதன் ஒழுங்கை நானிலத்தில்[SE][SS] நிலைநாட்டிடுவாயோ?[SE][QE]
34. [QS][SS] முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?[SE][SS] தண்ணீர்ப் பெருக்கு[SE][SS] உன்னை மூடச் செய்வாயோ?[SE][QE]
35. [QS][SS] ‘புறப்படுக’ என மின்னலுக்கு[SE][SS] ஆணையிடுவாயோ?[SE][SS] ‘இதோ! உள்ளோம்’ என[SE][SS] அவை உனக்கு இயம்புமோ?[SE][QE]
36. [QS][SS] நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?[SE][SS] சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?[SE][QE]
37. [QS][SS] ஞானத்தால் முகில்களை[SE][SS] எண்ணக் கூடியவர் யார்?[SE][SS] வானத்தின் நீர்க்குடங்களைக்[SE][SS] கவிழ்ப்பவர் யார்?[SE][QE]
38. [QS][SS] துகள்களைச் சேர்த்துக்[SE][SS] கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை[SE][SS] ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?[SE][QE]
39. [QS][SS] பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?[SE][SS] அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?[SE][QE]
40. [QS][SS] குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,[SE][SS] குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.[SE][QE]
41. [QS][SS] காக்கைக் குஞ்சுகள்[SE][SS] இறைவனை நோக்கிக் கரையும் போது,[SE][SS] அவை உணவின்றி ஏங்கும்போது,[SE][SS] காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?[SE][PE]