1. [PS] [QS][SS] இதைக்கண்டு நடுங்குகிறது[SE][SS] என் இதயம்;[SE][SS] தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.[SE][QE]
2. [QS][SS] அவரது குரலின் இடியோசையையும்[SE][SS] அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும்[SE][SS] கவனமுடன் கேளுங்கள்.[SE][QE]
3. [QS][SS] விசும்பின்கீழ் மின்னலை[SE][SS] மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின்[SE][SS] எல்லைவரை செல்ல வைக்கின்றார்.[SE][QE]
4. [QS][SS] அதனை அடுத்து அதிரும் அவர் குரல்;[SE][SS] பேரொலியில் அவர் முழங்கிடுவாரே;[SE][SS] மின்னலை நிறுத்தார்[SE][SS] அவர்தம் குரல் ஒலிக்கையிலே.[SE][QE]
5. [QS][SS] கடவுள் வியத்தகு முறையில்[SE][SS] தம் குரலால் முழங்குகின்றார்;[SE][SS] நம் அறிவுக்கு எட்டாத[SE][SS] பெரியனவற்றைச் செய்கின்றார்.[SE][QE]
6. [QS][SS] ஏனெனில், உறைபனியை[SE][SS] ‘மண்மிசை விழு” என்பார்;[SE][SS] மாரியையும் பெருமழையையும்[SE][SS] ‘உரத்துப் பெய்க” என்பார்.[SE][QE]
7. [QS][SS] எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய,[SE][SS] எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார். [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
8. [QS][SS] பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்;[SE][SS] தம் குகைக்குள் அது தங்கும். [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
9. [QS][SS] அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும்[SE][SS] வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும். [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
10. [QS][SS] கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்;[SE][SS] பரந்த நீர்நிலை உறைந்து போகும்.[SE][QE]
11. [QS][SS] அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்;[SE][SS] கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.[SE][QE]
12. [QS][SS] மேகம் அவரது ஆணைப்படியே[SE][SS] சுழன்று ஆடும்;[SE][SS] அவர் ஆணையிடுவதை எல்லாம்[SE][SS] மண்மிசை செய்யும்.[SE][QE]
13. [QS][SS] கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ[SE][SS] இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.[SE][QE]
14. [QS][SS] யோபே! செவிகொடும்;[SE][SS] இறைவனின் வியத்தகு செயல்களை[SE][SS] நின்று நிதானித்துக் கவனியும்.[SE][QE]
15. [QS][SS] கடவுள் எவ்வாறு அவற்றை[SE][SS] ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,[SE][SS] அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத்[SE][SS] தெறிக்கின்றன என்றோ அறிவீரா?[SE][QE]
16. [QS][SS] முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என[SE][SS] உமக்குத் தெரியுமா?[SE][SS] அவை நிறை அறிவுள்ளவரின்[SE][SS] வியத்தகு செயல்கள் அல்லவா![SE][QE]
17. [QS][SS] தென்திசைக் காற்றினால்[SE][SS] நிலம் இறுக்கப்படுகையில்[SE][SS] உம் உடையின் வெப்பத்தால்[SE][SS] நீவிர் புழுங்குகின்றீர்.[SE][QE]
18. [QS][SS] வார்ப்படக் கண்ணாடியை ஒத்த[SE][SS] திண்ணிய விசும்பை[SE][SS] அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?[SE][QE]
19. [QS][SS] நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும்[SE][SS] என்று கற்பியும்; இருளின் முகத்தே[SE][SS] வகைதெரியாது உழல்கின்றோம்.[SE][QE]
20. [QS][SS] ‘நான் பேசுவேன்” என்று[SE][SS] எவர் அவரிடம் சொல்வார்?[SE][SS] அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?[SE][QE]
21. [QS][SS] காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின்[SE][SS] வானில் கதிரவன் ஒளிரும்போது,[SE][SS] மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே![SE][QE]
22. [QS][SS] பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்;[SE][SS] அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.[SE][QE]
23. [QS][SS] எல்லாம் வல்லவரை[SE][SS] நாம் கண்டுபிடிக்க முடியாது;[SE][SS] ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே![SE][SS] நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.[SE][QE]
24. [QS][SS] ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்;[SE][SS] எல்லாம் தெரியும் என்போரை[SE][SS] அவர் திரும்பியும் பாரார்.[SE][PE][QE]