1. {யோபினுடைய துன்பங்களின் உட்பொருள்} [PS] எலிகூ தொடர்ந்து பேசலானான்:
2. [QS][SS] சற்றுப் பொறும்;[SE][SS] காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்[SE][SS] நான் கூற வேண்டியவற்றை.[SE][QE]
3. [QS][SS] தொலையிலிருந்து[SE][SS] என் அறிவைக் கொணர்வேன்;[SE][SS] எனை உண்டாக்கியவர்க்கு[SE][SS] நேர்மையை உரித்தாக்குவேன்.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், மெய்யாகவே[SE][SS] பொய்யன்று என் சொற்கள்;[SE][SS] அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.[SE][QE]
5. [QS][SS] இதோ! இறைவன் வல்லவர்;[SE][SS] எவரையும் புறக்கணியார்;[SE][SS] அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.[SE][QE]
6. [QS][SS] கொடியவரை அவர் வாழவிடார்;[SE][SS] ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;[SE][QE]
7. [QS][SS] நேர்மையாளர்மீது கொண்ட[SE][SS] பார்வையை அகற்றார்;[SE][SS] அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;[SE][SS] என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர். [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
8. [QS][SS] ஆனால் அவர்கள்[SE][SS] சங்கிலியால் கட்டுண்டாரெனில்,[SE][SS] வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில், [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
9. [QS][SS] அவர்கள் செய்ததையும் மீறியதையும்,[SE][SS] இறுமாப்புடன் நடந்ததையும்[SE][SS] எடுத்து இயம்புவார். [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
10. [QS][SS] அறிவுரைகளுக்கு[SE][SS] அவர்கள் செவியைத் திறப்பார்;[SE][SS] தீச்செயலிலிருந்து திரும்புமாறு[SE][SS] ஆணையிடுவார்.[SE][QE]
11. [QS][SS] அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,[SE][SS] வளமாய்த் தங்கள் நாள்களையும்[SE][SS] இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.[SE][QE]
12. [QS][SS] செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.[SE][SS] அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.[SE][QE]
13. [QS][SS] தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;[SE][SS] அவர்களை அவர் கட்டிப்போடுகையில்[SE][SS] உதவிக்காகக் கதறமாட்டார்.[SE][QE]
14. [QS][SS] அவர்கள் இளமையில் மடிவர்;[SE][SS] காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.[SE][QE]
15. [QS][SS] துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;[SE][SS] வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.[SE][QE]
16. [QS][SS] இடுக்கண் வாயினின்று[SE][SS] உங்களை இழுத்துக் காத்தார்;[SE][SS] ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.[SE][SS] உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.[SE][QE]
17. [QS][SS] பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;[SE][SS] தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.[SE][QE]
18. [QS][SS] வளமையால் வழிபிறழாமல்[SE][SS] பார்த்துக்கொள்ளும்;[SE][SS] நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.[SE][QE]
19. [QS][SS] உம் நிறைந்த செல்வமும்[SE][SS] வல்லமையின் முழு ஆற்றலும்[SE][SS] இன்னலில் உமக்கு உதவுமா?[SE][QE]
20. [QS][SS] இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்[SE][SS] இரவுக்காக ஏங்காதீர்.[SE][QE]
21. [QS][SS] துன்பத்தைவிட தீச்செயலையே[SE][SS] நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே[SE][SS] அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.[SE][PE][QE]
22. {கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்} [PS] [QS][SS] இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;[SE][SS] அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?[SE][QE]
23. [QS][SS] அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?[SE][SS] அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்[SE][SS] சொல்ல வல்லவர் யார்?[SE][QE]
24. [QS][SS] அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.[SE][SS] மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.[SE][QE]
25. [QS][SS] மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;[SE][SS] மனிதன் தொலையிலிருந்தே[SE][SS] அதை நோக்குவான்.[SE][QE]
26. [QS][SS] இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;[SE][SS] நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;[SE][SS] அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;[SE][SS] கணக்கிட முடியாதவை.[SE][QE]
27. [QS][SS] நீர்த்துளிகளை அவர்[SE][SS] ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை[SE][SS] மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.[SE][QE]
28. [QS][SS] முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;[SE][SS] மாந்தர்மேல் அவற்றை[SE][SS] மிகுதியாகப் பெய்கின்றன.[SE][QE]
29. [QS][SS] பரவும் முகில்களையும்[SE][SS] அவர்தம் மணிப்பந்தலின்[SE][SS] ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?[SE][QE]
30. [QS][SS] இதோ! தம்மைச் சுற்றி[SE][SS] மின்னல் ஒளிரச் செய்கின்றார்.[SE][SS] கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.[SE][QE]
31. [QS][SS] இவற்றால், மக்களினங்கள்மீது[SE][SS] தீர்ப்பளிக்கின்றார்;[SE][SS] அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.[SE][QE]
32. [QS][SS] மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;[SE][SS] இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.[SE][QE]
33. [QS][SS] இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;[SE][SS] புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.[SE][PE][QE]