1. {யோபின் மட்டுமீறிய நம்பிக்கை} [PS] [QS][SS] ஆனால் இப்பொழுது,[SE][SS] யோபே! எனக்குச் செவிகொடும்;[SE][SS] என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.[SE][QE]
2. [QS][SS] இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்;[SE][SS] என் நாவினால் பேசுகிறேன்.[SE][QE]
3. [QS][SS] என் உள்ளத்தின் நேர்மையை[SE][SS] என் சொற்கள் விளம்பும்;[SE][SS] அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.[SE][QE]
4. [QS][SS] இறைவனின் ஆவி என்னைப் படைத்தது;[SE][SS] எல்லாம் வல்லவரின் மூச்சு[SE][SS] என்னை வாழ்விக்கின்றது.[SE][QE]
5. [QS][SS] உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்;[SE][SS] என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.[SE][QE]
6. [QS][SS] இதோ! இறைவன் முன்னிலையில்[SE][SS] நானும் நீவிரும் ஒன்றே;[SE][SS] உம்மைப்போல் நானும்[SE][SS] களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே![SE][QE]
7. [QS][SS] இதோ! நீர் எனக்கு[SE][SS] அஞ்சி நடுங்க வேண்டியதில்லை;[SE][SS] நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.[SE][QE]
8. [QS][SS] உண்மையாகவே என் காதுகளில் விழ[SE][SS] நீர் கூறினீர்; நானும்[SE][SS] அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;[SE][QE]
9. [QS][SS] ‘குற்றமில்லாத் தூயவன் நான்;[SE][SS] மாசற்ற வெண் மனத்தான் யான்.[SE][QE]
10. [QS][SS] இதோ! அவர் என்னில்[SE][SS] குற்றம்காணப் பார்க்கின்றார்;[SE][SS] அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.[SE][QE]
11. [QS][SS] மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்;[SE][SS] என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்’. [* யோபு 13:27. ] [SE][QE]
12. [QS][SS] இதோ! இது சரியென்று;[SE][SS] பதில் உமக்குக் கூறுகிறேன்;[SE][SS] கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.[SE][QE]
13. [QS][SS] ‘என் சொல் எதற்கும்[SE][SS] அவர் பதில் கூறுவதில்லை’ என[SE][SS] ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?[SE][QE]
14. [QS][SS] ஏனெனில், இறைவன் முதலில்[SE][SS] ஒருவகையில் இயம்புகின்றார்;[SE][SS] இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்;[SE][SS] அதை யாரும் உணர்வதில்லை.[SE][QE]
15. [QS][SS] கனவில், இரவின் காட்சியில்[SE][SS] ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;[SE][SS] படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில், [* யோபு 4:13.[QE]. ] [SE][QE]
16. [QS][SS] அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்;[SE][SS] எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.[SE][QE]
17. [QS][SS] இவ்வாறு மாந்தரிடமிருந்து[SE][SS] தீவினையை நீக்குகின்றார்;[SE][SS] மனிதரிடமிருந்து[SE][SS] ஆணவத்தை அகற்றுகின்றார்.[SE][QE]
18. [QS][SS] அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும்,[SE][SS] உயிரை வாளின் அழிவிலிருந்தும்[SE][SS] காக்கின்றார்.[SE][QE]
19. [QS][SS] படுக்கையில் படும் வேதனையினாலும்[SE][SS] எலும்பில் வரும் தீரா வலியினாலும்[SE][SS] அவர்கள் கண்டித்துத்[SE][SS] திருத்தப்படுகின்றார்கள்.[SE][QE]
20. [QS][SS] அப்போது அவர்களின் உயிர் உணவையும்,[SE][SS] அவர்களின் ஆன்மா அறுசுவை[SE][SS] உண்டியையும் அருவருக்கும்.[SE][QE]
21. [QS][SS] அவர்களின் சதை கரைந்து மறையும்;[SE][SS] காணப்படா அவர்களின் எலும்புகள்[SE][SS] வெளியே தெரியும்.[SE][QE]
22. [QS][SS] அவர்களின் ஆன்மா குழியினையும்[SE][SS] அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.[SE][QE]
23. [QS][SS] மனிதர் சார்பாக இருந்து,[SE][SS] அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும்[SE][SS] ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்[SE][QE]
24. [QS][SS] அவர்களின் மீது இரங்கி, “குழியில் விழாமல்[SE][SS] இவர்களைக் காப்பாற்றும்;[SE][SS] ஏனெனில், இவர்களுக்கான[SE][SS] மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;[SE][QE]
25. [QS][SS] இவர்களின் மேனி[SE][SS] இளைஞனதைப்போல் ஆகட்டும்;[SE][SS] இவர்கள் இளமையின்[SE][SS] நாள்களுக்குத் திரும்பட்டும்”[SE][QE]
26. [QS][SS] என்று கடவுளிடம் மன்றாடினால்,[SE][SS] அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்;[SE][SS] அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு[SE][SS] அவர்கள் காணச் செய்வார்;[SE][SS] அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.[SE][QE]
27. [QS][SS] அவர்கள் மனிதர் முன்[SE][SS] இவ்வாறு அறிக்கையிடுவர்;[SE][SS] ‘நாங்கள் பாவம் செய்தோம்;[SE][SS] நேரியதைக் கோணலாக்கினோம்;[SE][SS] இருப்பினும் அதற்கேற்ப[SE][SS] நாங்கள் தண்டிக்கப்படவில்லை;[SE][QE]
28. [QS][SS] எங்கள் ஆன்மாவைக்[SE][SS] குழியில் விழாது அவர் காத்தார்;[SE][SS] எங்கள் உயிர் ஒளியைக் காணும்.’[SE][QE]
29. [QS][SS] இதோ இறைவன் இவற்றையெல்லாம்[SE][SS] மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.[SE][QE]
30. [QS][SS] இவ்வாறு குழியிலிருந்து[SE][SS] அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்;[SE][SS] வாழ்வோரின் ஒளியை[SE][SS] அவர்கள் காணச் செய்கின்றார்.[SE][QE]
31. [QS][SS] யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்;[SE][SS] பேசாதிரும்; நான் பேசுவேன்.[SE][QE]
32. [QS][SS] சொல்வதற்கு இருந்தால்,[SE][SS] எனக்குப் பதில் சொல்லும்; பேசுக![SE][SS] உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே[SE][SS] நான் விழைகின்றேன்.[SE][QE]
33. [QS][SS] இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்;[SE][SS] பேசாதிரும்; நான் உமக்கு[SE][SS] ஞானத்தைக் கற்பிப்பேன்.[SE][PE]