தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {கடவுளின் ஆற்றலும் யோபின் மாசின்மையும்} [PS] [QS][SS] யோபு தமது உரையைத்[SE][SS] தொடர்ந்து கூறியது:[SE][QE]
2. [QS][SS] என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை![SE][SS] அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்;[SE][SS] எல்லாம் வல்லவர் எனக்கு[SE][SS] வாழ்வைக் கசப்பாக்கினார். [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] என் உடலில் உயிர் இருக்கும்வரை,[SE][SS] என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,[SE][QE]
4. [QS][SS] என் உதடுகள் வஞ்சகம் உரையா;[SE][SS] என் நாவும் பொய்யைப் புகலாது.[SE][QE]
5. [QS][SS] நீங்கள் சொல்வது சரியென[SE][SS] ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.[SE][SS] சாகும்வரையில்[SE][SS] என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.[SE][QE]
6. [QS][SS] என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;[SE][SS] விடவே மாட்டேன்; என் வாழ்நாளில்[SE][SS] எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.[SE][QE]
7. [QS][SS] என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;[SE][SS] என் எதிரிகள்[SE][SS] நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.[SE][QE]
8. [QS][SS] கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,[SE][SS] அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,[SE][SS] அவர்களுக்கு என்ன நம்பிக்கை?[SE][QE]
9. [QS][SS] அவர்கள்மேல் கேடுவிழும்போது[SE][SS] இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?[SE][QE]
10. [QS][SS] எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை[SE][SS] அவர்கள் நாடுவார்களா?[SE][SS] கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?[SE][QE]
11. [QS][SS] இறைவனின் கைத்திறனை[SE][SS] நான் உங்களுக்குக் கற்பிப்பேன்;[SE][SS] எல்லாம் வல்லவரின் திட்டங்களை[SE][SS] மறைக்கமாட்டேன்.[SE][QE]
12. [QS][SS] இதோ! நீங்கள் யாவருமே[SE][SS] இதைக் கண்டிருக்கின்றீர்கள்;[SE][SS] பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?[SE][QE]
13. [QS][SS] இதுவே கொடிய மனிதர்[SE][SS] இறைவனிடமிருந்து பெறும் பங்கு;[SE][SS] பொல்லாதவர்[SE][SS] எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.[SE][QE]
14. [QS][SS] அவர்களின் பிள்ளைகள் பெருகினும்[SE][SS] வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர்[SE][SS] உண்டு நிறைவடையார்.[SE][QE]
15. [QS][SS] அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்;[SE][SS] அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.[SE][QE]
16. [QS][SS] மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்;[SE][SS] அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.[SE][QE]
17. [QS][SS] ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்;[SE][SS] மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.[SE][QE]
18. [QS][SS] சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,[SE][SS] காவற்காரன் குடில் போடுவதுபோலும்[SE][SS] அவர்கள் வீடு கட்டுகின்றனர்.[SE][QE]
19. [QS][SS] படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்;[SE][SS] ஆனால் இனி அவ்வாறு இராது;[SE][SS] கண் திறந்து பார்க்கின்றனர்;[SE][SS] செல்வம் காணாமற் போயிற்று.[SE][QE]
20. [QS][SS] திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்;[SE][SS] சுழற்காற்று இரவில்[SE][SS] அவர்களைத் தூக்கிச் செல்லும்.[SE][QE]
21. [QS][SS] கீழைக் காற்று[SE][SS] அவர்களை அடித்துச் செல்லும்;[SE][SS] அவர்களின் இடத்திலிருந்து[SE][SS] அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;[SE][QE]
22. [QS][SS] ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்;[SE][SS] அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.[SE][QE]
23. [QS][SS] அவர்களைப் பார்த்து[SE][SS] அது கைகொட்டி நகைக்கும்;[SE][SS] அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.[SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 42
கடவுளின் ஆற்றலும் யோபின் மாசின்மையும் 1 யோபு தமது உரையைத் தொடர்ந்து கூறியது: 2 என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்; எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார். [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.. ] 3 என் உடலில் உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை, 4 என் உதடுகள் வஞ்சகம் உரையா; என் நாவும் பொய்யைப் புகலாது. 5 நீங்கள் சொல்வது சரியென ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். சாகும்வரையில் என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன். 6 என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்; விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை. 7 என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்; என் எதிரிகள் நேர்மையற்றோராகக் கருதப்படட்டும். 8 கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து, அவர்களின் உயிரைப் பறிக்கும்போது, அவர்களுக்கு என்ன நம்பிக்கை? 9 அவர்கள்மேல் கேடுவிழும்போது இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா? 10 எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை அவர்கள் நாடுவார்களா? கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா? 11 இறைவனின் கைத்திறனை நான் உங்களுக்குக் கற்பிப்பேன்; எல்லாம் வல்லவரின் திட்டங்களை மறைக்கமாட்டேன். 12 இதோ! நீங்கள் யாவருமே இதைக் கண்டிருக்கின்றீர்கள்; பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்? 13 இதுவே கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு; பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து. 14 அவர்களின் பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார். 15 அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்; அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார். 16 மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்; அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர். 17 ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்; மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர். 18 சிலந்தி கூடு கட்டுவதுபோலும், காவற்காரன் குடில் போடுவதுபோலும் அவர்கள் வீடு கட்டுகின்றனர். 19 படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்; ஆனால் இனி அவ்வாறு இராது; கண் திறந்து பார்க்கின்றனர்; செல்வம் காணாமற் போயிற்று. 20 திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்; சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும். 21 கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்; அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்; 22 ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்; அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர். 23 அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்; அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References