1. {நிகழ்வன எதிர்மாறாய் இருத்தல்} [PS] அதற்கு யோபு கூறிய மறுமொழி:
2. [QS][SS] நான் கூறுவதைக் கவனமாய்க்[SE][SS] கேளுங்கள்; இதுவே நீங்கள்[SE][SS] எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.[SE][QE]
3. [QS][SS] பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்;[SE][SS] நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.[SE][QE]
4. [QS][SS] என்னைப் பொறுத்த மட்டில்,[SE][SS] நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?[SE][SS] இல்லையேல் நான் ஏன்[SE][SS] பொறுமை இழக்கக்கூடாது?[SE][QE]
5. [QS][SS] என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்;[SE][SS] கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.[SE][QE]
6. [QS][SS] இதை நான் நினைக்கும்பொழுது[SE][SS] திகிலடைகிறேன்;[SE][SS] நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது. [* யோபு 21:17.[QE] ] [SE][QE]
7. [QS][SS] தீயோர் வாழ்வதேன்?[SE][SS] நீண்ட ஆயுள் பெறுவதேன்?[SE][SS] . வலியோராய் வளர்வதேன்? [* யோபு 21:17.[QE] ] [SE][QE]
8. [QS][SS] அவர்களின் வழிமரபினர்[SE][SS] அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்;[SE][SS] அவர்களின் வழித்தோன்றல்கள்[SE][SS] அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.[SE][QE]
9. [QS][SS] அவர்களின் இல்லங்களில்[SE][SS] அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.[SE][SS] கடவுளின் தண்டனை[SE][SS] அவர்கள்மேல் விழவில்லை.[SE][QE]
10. [QS][SS] அவர்களின் காளைகள் பொலிகின்றன.[SE][SS] ஆனால் பிசகுவதில்லை;[SE][SS] அவர்களின் பசுக்கள் கருவுறும்;[SE][SS] ஆனால் கரு கலைவதில்லை.[SE][QE]
11. [QS][SS] மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை[SE][SS] வெளியனுப்புகின்றனர்; அவர்களின்[SE][SS] குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.[SE][QE]
12. [QS][SS] அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப்[SE][SS] பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.[SE][QE]
13. [QS][SS] அவர்கள் மகிழ்வில்[SE][SS] தம் நாள்களைக் கழிக்கின்றனர்;[SE][SS] அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.[SE][QE]
14. [QS][SS] அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்;[SE][SS] ‘எம்மை விட்டு அகலும்; ஏனெனில்,[SE][SS] உமது வழிகளை அறிந்து கொள்ள[SE][SS] நாங்கள் விரும்பவில்லை;’[SE][QE]
15. [QS][SS] எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய?[SE][SS] அவரை நோக்கி நாங்கள்[SE][SS] மன்றாடுவதால் என்ன பயன்?[SE][QE]
16. [QS][SS] இதோ! அவர்களின் வளமை[SE][SS] அவர்களின் கையில் இல்லை;[SE][SS] எனவே, தீயோரின் ஆலோசனை[SE][SS] எனக்குத் தொலையிலிருப்பதாக![SE][QE]
17. [QS][SS] எத்தனைமுறை தீயோரின் ஒளி[SE][SS] அணைகின்றது? அழிவு[SE][SS] அவர்கள்மேல் வருகின்றது?[SE][SS] கடவுள் தம் சீற்றத்தில்[SE][SS] வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.[SE][QE]
18. [QS][SS] அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்;[SE][SS] சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.[SE][QE]
19. [QS][SS] அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின்[SE][SS] பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்?[SE][SS] அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்;[SE][SS] அவர்களும் அதை உணர்வர்.[SE][QE]
20. [QS][SS] அவர்களின் அழிவை அவர்களின்[SE][SS] கண்களே காணட்டும்;[SE][SS] எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை[SE][SS] அவர்கள் குடிக்கட்டும்.[SE][QE]
21. [QS][SS] அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,[SE][SS] அவர்களது இல்லத்தில்[SE][SS] அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?[SE][QE]
22. [QS][SS] இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்?[SE][SS] ஏனெனில், அவரே[SE][SS] உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.[SE][QE]
23. [QS][SS] சிலர் வளமையோடும் வலிமையோடும்[SE][SS] நிறைவோடும் முழு அமைதியோடும்[SE][SS] சாகின்றனர்.[SE][QE]
24. [QS][SS] அவர்களின் தொடைகள்[SE][SS] கொழுப்பேறி உள்ளன; அவர்களின்[SE][SS] எலும்புகளின் சோறு உலரவில்லை.[SE][QE]
25. [QS][SS] வேறு சிலர், கசந்த உள்ளத்துடன்[SE][SS] இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;[SE][QE]
26. [QS][SS] புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்;[SE][SS] புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.[SE][QE]
27. [QS][SS] இதோ! உம் எண்ணங்களையும்[SE][SS] எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும்[SE][SS] நான் அறிவேன்.[SE][QE]
28. [QS][SS] ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்;[SE][SS] ‘கொடுங்கோலனின் இல்லம் எங்கே?[SE][SS] கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?’[SE][QE]
29. [QS][SS] வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா?[SE][SS] அவர்கள் அறிவித்ததை[SE][SS] நீங்கள் கேட்கவில்லையா?[SE][QE]
30. [QS][SS] தீயோர் அழிவின் நாளுக்கென[SE][SS] விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில்[SE][SS] அவர்கள் விடுவிக்கப்படுவாரா?[SE][QE]
31. [QS][SS] யார் அவர்களின் முகத்துக்கு எதிரே[SE][SS] அவர்களின் போக்கை உரைப்பார்?[SE][SS] யார் அவர்களின் செயலுக்கேற்ப கொடுப்பார்?[SE][QE]
32. [QS][SS] இருப்பினும், கல்லறைக்கு[SE][SS] அவர்கள் கொண்டுவரப்படுவர்;[SE][SS] அவர்களின் சமாதிக்குக்[SE][SS] காவல் வைக்கப்படும்.[SE][QE]
33. [QS][SS] பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு[SE][SS] இனிமையாய் இருக்கும்;[SE][SS] மாந்தர் அனைவரும் அவர்களைப்[SE][SS] பின்தொடர்வர்; அவர்களின்[SE][SS] முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.[SE][QE]
34. [QS][SS] அப்படியிருக்க, வெற்றுமொழியால்[SE][SS] நீர் என்னைத் தேற்றுவதெப்படி?[SE][SS] உமது மறுமொழி முற்றிலும் பொய்யே![SE][PE][QE]