1. {நீதிக்கு விதிவிலக்கு இல்லை} [PS] [QS][SS] அதற்கு நாமாயனான சோப்பார்[SE][SS] கூறின பதில்:[SE][QE]
2. [QS][SS] என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு,[SE][SS] என் எண்ணங்கள்[SE][SS] பதில் சொல்ல வைக்கின்றன.[SE][QE]
3. [QS][SS] என்னை வெட்கமடையச் செய்யும்[SE][SS] குத்தல்மொழி கேட்டேன்;[SE][SS] நான் புரிந்து கொண்டதிலிருந்து[SE][SS] விடை அளிக்க[SE][SS] மனம் என்னை உந்துகிறது.[SE][QE]
4. [QS][SS] மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து,[SE][SS] தொன்றுதொட்டு நடக்குமிது[SE][SS] உமக்குத் தெரியாதா?[SE][QE]
5. [QS][SS] கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே![SE][SS] கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு[SE][SS] கணப்பொழுதே![SE][QE]
6. [QS][SS] அவர்களின் பெருமை[SE][SS] விசும்பு மட்டும் உயர்ந்தாலும்,[SE][SS] அவர்களின் தலை[SE][SS] முகிலை முட்டுமளவு இருந்தாலும், [* யோபு 21:17.[QE] ] [SE][QE]
7. [QS][SS] அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று[SE][SS] என்றைக்கும் ஒழிந்திடுவர்;[SE][SS] அவர்களைக் கண்டவர்,[SE][SS] எங்கே அவர்கள்? என்பர். [* யோபு 21:17.[QE] ] [SE][QE]
8. [QS][SS] கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்;[SE][SS] இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.[SE][QE]
9. [QS][SS] பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது;[SE][SS] வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.[SE][QE]
10. [QS][SS] ஏழைகளின் தயவை[SE][SS] அவர்களின் குழந்தைகள் நாடுவர்;[SE][SS] அவர்களின் கைகளே[SE][SS] அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.[SE][QE]
11. [QS][SS] எலும்புகளை நிரப்பிய[SE][SS] அவர்களின் இளமைத் துடிப்பு,[SE][SS] மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.[SE][QE]
12. [QS][SS] தீங்கு அவர்களின் வாயில்[SE][SS] இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில்[SE][SS] அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,[SE][QE]
13. [QS][SS] இழந்து போகாமல்[SE][SS] அதை அவர்கள் இருத்தி வைத்தாலும்,[SE][SS] அண்ணத்தின் நடுவே[SE][SS] அதை அடைத்து வைத்தாலும்,[SE][QE]
14. [QS][SS] வயிற்றிலே அவர்களின் உணவு[SE][SS] மாற்றமடைந்து, அவர்களுக்கு[SE][SS] விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;[SE][QE]
15. [QS][SS] செல்வத்தை விழுங்கினர்;[SE][SS] அதை அவர்களே கக்குவர்;[SE][SS] இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து[SE][SS] அதை வெளியேற்றுவார்.[SE][QE]
16. [QS][SS] விரியன் பாம்பின் நஞ்சை[SE][SS] அவர்கள் உறிஞ்சுவர்;[SE][SS] கட்டு விரியனின் நாக்கு[SE][SS] அவர்களைக் கொன்றுபோடும்.[SE][QE]
17. [QS][SS] ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும்[SE][SS] , தேன், வெண்ணெய் ஆறுகளிலும்[SE][SS] அவர்கள் இன்பம் காணார்.[SE][QE]
18. [QS][SS] தங்களின் உழைப்பின் பயனை[SE][SS] அவர்கள் திரும்ப அளிப்பர்;[SE][SS] அதை அவர்கள் உண்ணமாட்டார்;[SE][SS] வணிகத்தின் வருவாயில் இன்புறார்.[SE][QE]
19. [QS][SS] ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி,[SE][SS] இல்லாதவராக்கினர்;[SE][SS] தாங்கள் கட்டாத வீட்டை[SE][SS] அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.[SE][QE]
20. [QS][SS] அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை;[SE][SS] ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில்[SE][SS] மிச்சத்தைக் காணார்.[SE][QE]
21. [QS][SS] அவர்கள் தின்றபின்[SE][SS] எஞ்சியது எதுவும் இல்லை; எனவே[SE][SS] அவர்களது செழுமை நின்று நிலைக்காது.[SE][QE]
22. [QS][SS] நிறைந்த செல்வத்திடை[SE][SS] அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;[SE][SS] அவலத்தின் பளுவெல்லாம்[SE][SS] அவர்கள்மேல் விழும்.[SE][QE]
23. [QS][SS] அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது,[SE][SS] இறைவன் தம் கோபக்கனலை[SE][SS] அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே[SE][SS] அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.[SE][QE]
24. [QS][SS] அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு[SE][SS] அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில்[SE][SS] அவர்களை வீழ்த்திடுமே![SE][QE]
25. [QS][SS] அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்;[SE][SS] மின்னும் அம்புமுனை பிச்சியிலிருந்து வெளிவரும்;[SE][SS] அச்சம் அவர்கள் மேல் விழும்.[SE][QE]
26. [QS][SS] காரிருள் அவர்களது கருவூலத்திற்குக்[SE][SS] காத்திருக்கும்; மூட்டாத தீ[SE][SS] அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின்[SE][SS] கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.[SE][QE]
27. [QS][SS] விண்ணகம் அவர்களின் பழியை[SE][SS] வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை[SE][SS] மறுத்திட எழுந்து நிற்கும்.[SE][QE]
28. [QS][SS] அவர்களது இல்லத்தின் செல்வம்[SE][SS] சூறையாடப்படும்; இறைவனின்[SE][SS] வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.[SE][QE]
29. [QS][SS] இதுவே பொல்லார்க்குக்[SE][SS] கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு[SE][SS] இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.[SE][PE][QE]