1. {பற்றுறுதியின் வெற்றி} [PS] [QS][SS] பின் யோபு உரைத்த மறுமொழி:[SE][QE]
2. [QS][SS] என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்?[SE][SS] என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?[SE][QE]
3. [QS][SS] பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்;[SE][SS] வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.[SE][QE]
4. [QS][SS] உண்மையாகவே[SE][SS] நான் பிழை செய்திருந்தாலும்[SE][SS] என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?[SE][QE]
5. [QS][SS] எனக்கு எதிராய் நீங்களே உங்களைப்[SE][SS] பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில்,[SE][SS] என் இழிநிலையை[SE][SS] எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில், [* யோபு 21:17.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] கடவுள்தான் என்னை[SE][SS] நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும்,[SE][SS] வலைவீசி என்னை வளைத்தார் என்றும்[SE][SS] அறிந்துகொள்க! [* யோபு 21:17.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] இதோ! ‘கொடுமை’ எனக்[SE][SS] கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை;[SE][SS] நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.[SE][QE]
8. [QS][SS] நான் கடந்துபோகாவண்ணம்,[SE][SS] கடவுள் என் வழியை அடைத்தார்;[SE][SS] என் பாதையை இருளாக்கினார்.[SE][QE]
9. [QS][SS] என் மாண்பினை அவர் களைந்தார்;[SE][SS] மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.[SE][QE]
10. [QS][SS] எல்லாப் பக்கமும் என்னை[SE][SS] இடித்துக் தகர்த்தார்;[SE][SS] நான் தொலைந்தேன்;[SE][SS] மரம்போலும் என் நம்பிக்கையை[SE][SS] வேரோடு பிடுங்கினார்.[SE][QE]
11. [QS][SS] அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த்[SE][SS] தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய்[SE][SS] என்னையும் எண்ணுகின்றார்.[SE][QE]
12. [QS][SS] அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன;[SE][SS] அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்;[SE][SS] என் கூடாரத்தைச் சுற்றிப்[SE][SS] பாசறை அமைத்தனர்.[SE][QE]
13. [QS][SS] என் உடன் பிறந்தவரை[SE][SS] என்னிடமிருந்து அகற்றினார்;[SE][SS] எனக்கு அறிமுகமானவரை[SE][SS] முற்றிலும் விலக்கினார்;[SE][QE]
14. [QS][SS] என் உற்றார் என்னை ஒதுக்கினர்;[SE][SS] என் நண்பர்கள் என்னை மறந்தனர்.[SE][QE]
15. [QS][SS] என் வீட்டு விருந்தினரும்[SE][SS] என் பணிப்பெண்களும்[SE][SS] என்னை அன்னியனாகக் கருதினர்;[SE][SS] அவர்கள் கண்களுக்குமுன்[SE][SS] நான் அயலானானேன்.[SE][QE]
16. [QS][SS] என் அடிமையை அழைப்பேன்;[SE][SS] மறுமொழி கொடான்; என் வாயால்[SE][SS] அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.[SE][QE]
17. [QS][SS] என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று;[SE][SS] என் தாயின் பிள்ளைகளுக்கு[SE][SS] நாற்றம் ஆனேன்.[SE][QE]
18. [QS][SS] குழந்தைகளும் என்னைக்[SE][SS] கேலி செய்கின்றனர்;[SE][SS] நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.[SE][QE]
19. [QS][SS] என் உயிர் நண்பர் எல்லாரும்[SE][SS] என்னை வெறுத்தனர்;[SE][SS] என் அன்புக்குரியவராய் இருந்தோரும்[SE][SS] எனக்கெதிராக மாறினர்.[SE][QE]
20. [QS][SS] நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்;[SE][SS] நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.[SE][QE]
21. [QS][SS] என் மேல் இரங்குங்கள்;[SE][SS] என் நண்பர்காள்! என் மேல்[SE][SS] இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில்[SE][SS] கடவுளின் கை என்னைத் தண்டித்தது.[SE][QE]
22. [QS][SS] இறைவனைப் போல்[SE][SS] நீங்களும் என்னை விரட்டுவது ஏன்?[SE][SS] என் சதையை நீங்கள் குதறியது போதாதா?[SE][QE]
23. [QS][SS] ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது[SE][SS] வரையப்படலாகாதா? ஓ! அவை[SE][SS] ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?[SE][QE]
24. [QS][SS] இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும்[SE][SS] என்றென்றும் அவை[SE][SS] பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.[SE][QE]
25. [QS][SS] ஏனெனில், என் மீட்பர்[SE][SS] வாழ்கின்றார் என்றும்[SE][SS] இறுதியில் மண்மேல் எழுவார் என்றும்[SE][SS] நான் அறிவேன்.[SE][QE]
26. [QS][SS] என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின்,[SE][SS] நான் சதையோடு இருக்கும் போதே[SE][SS] கடவுளைக் காண்பேன்.[SE][QE]
27. [QS][SS] நானே, அவர் என் பக்கத்தில்[SE][SS] நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்;[SE][SS] வேறு கண்கள் அல்ல;[SE][SS] என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.[SE][QE]
28. [QS][SS] ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்;[SE][SS] ‘அவனை எப்படி நாம் வதைப்பது?[SE][SS] அவனிடம் அடிப்படைக் காரணத்தை[SE][SS] எவ்வாறு கண்டுபிடிப்பது?’[SE][QE]
29. [QS][SS] மாறாக — வாளுக்கு நீங்களே[SE][SS] அஞ்சவேண்டும்; ஏனெனில்,[SE][SS] சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்;[SE][SS] அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை[SE][SS] அறிந்துகொள்வீர்கள்.[SE][PE][QE]