1. {யோபின் சொற்களே அவர்க்குத் தீர்ப்பிடல்[BR](15:1-21:34)} [PS] [QS][SS] அதற்குத் தேமானியனான எலிப்பாசு[SE][SS] சொன்னான்:[SE][QE]
2. [QS][SS] வெற்று அறிவினால் ஞானி[SE][SS] விடையளிக்கக்கூடுமோ?[SE][SS] வறண்ட கீழ்க்காற்றினால்[SE][SS] வயிற்றை அவன் நிரப்பவோ?[SE][QE]
3. [QS][SS] பயனிலாச் சொற்களாலோ,[SE][SS] பொருளிலாப் பொழிவினாலோ[SE][SS] அவன் வழக்காடத் தகுமோ?[SE][QE]
4. [QS][SS] ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;[SE][SS] இறைச்சிந்தனை இல்லாது போனீர்.[SE][QE]
5. [QS][SS] உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;[SE][SS] வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.[SE][QE]
6. [QS][SS] கண்டனம் செய்தது உம் வாயே;[SE][SS] நானல்ல; உம் உதடே[SE][SS] உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.[SE][QE]
7. [QS][SS] மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?[SE][SS] மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?[SE][QE]
8. [QS][SS] கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?[SE][SS] ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?[SE][QE]
9. [QS][SS] எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?[SE][SS] எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?[SE][QE]
10. [QS][SS] நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,[SE][SS] நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்[SE][SS] எங்களிடை உள்ளனர்.[SE][QE]
11. [QS][SS] கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்[SE][SS] உமக்கு அற்பமாயினவோ?[SE][QE]
12. [QS][SS] மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?[SE][SS] உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?[SE][QE]
13. [QS][SS] அதனால், இறைவனுக்கு எதிராய்[SE][SS] உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;[SE][SS] வாயில் வந்தபடி[SE][SS] வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.[SE][QE]
14. [QS][SS] மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?[SE][SS] நேர்மையாளராய் இருக்கப்[SE][SS] பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்? [* யோபு 25:4-6. ] [SE][QE]
15. [QS][SS] வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;[SE][SS] வானங்களும் அவர்தம் கண்முன்[SE][SS] தூயவையல்ல; [* யோபு 25:4-6. ] [SE][QE]
16. [QS][SS] தீமையை தண்ணீர் போல் குடிக்கும்[SE][SS] அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்[SE][SS] எத்துணை இழிந்தோர் ஆவர்? [* யோபு 25:4-6. ] [SE][QE]
17. [QS][SS] கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;[SE][SS] நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;[SE][QE]
18. [QS][SS] ஞானிகள் உரைத்தவை அவை![SE][SS] அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை![SE][QE]
19. [QS][SS] அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;[SE][SS] அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.[SE][QE]
20. [QS][SS] துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்[SE][SS] தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்[SE][SS] கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.[SE][QE]
21. [QS][SS] திகிலளிக்கும் ஒலி[SE][SS] அவர்களின் செவிகளில் கேட்கும்;[SE][SS] நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.[SE][QE]
22. [QS][SS] அவர்கள் இருளினின்று தப்பிக்கும்[SE][SS] நம்பிக்கை இழப்பர்;[SE][SS] வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.[SE][QE]
23. [QS][SS] எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;[SE][SS] இருள்சூழ்நாள்[SE][SS] அண்மையில் உள்ளதென்று அறிவர்.[SE][QE]
24. [QS][SS] இன்னலும் இடுக்கணும்[SE][SS] அவர்களை நடுங்க வைக்கும்;[SE][SS] போருக்குப் புறப்படும் அரசன்போல்[SE][SS] அவை அவர்களை மேற்கொள்ளும்.[SE][QE]
25. [QS][SS] ஏனெனில், இறைவனுக்கு எதிராக[SE][SS] அவர்கள் கையை ஓங்கினர்;[SE][SS] எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.[SE][QE]
26. [QS][SS] வணங்காக் கழுத்தோடும்[SE][SS] வலுவான பெரிய கேடயத்தோடும்,[SE][SS] அவரை எதிர்த்து வந்தனர்.[SE][QE]
27. [QS][SS] ஏனெனில், அவர்களின் முகத்தைக்[SE][SS] கொழுப்பு மூடியுள்ளது;[SE][SS] அவர்களின் தொந்தி பருத்துள்ளது.[SE][QE]
28. [QS][SS] பாழான பட்டணங்களிலும்,[SE][SS] எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,[SE][SS] இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்[SE][SS] அவர்கள் குடியிருப்பர்.[SE][QE]
29. [QS][SS] அவர்கள் செல்வர் ஆகார்;[SE][SS] அவர்களின் சொத்தும் நில்லாது;[SE][SS] அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.[SE][QE]
30. [QS][SS] இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;[SE][SS] அவர்களது தளிரை அனல் வாட்டும்.[SE][SS] அவர்களது மலர்[SE][SS] காற்றில் அடித்துப்போகப்படும். [* ‘அவர்தம் வாயின் ஊதுதலால் வாரிப்போகப்படுவான்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
31. [QS][SS] வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;[SE][SS] ஏனெனில், வெறுமையே[SE][SS] அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.[SE][QE]
32. [QS][SS] அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே[SE][SS] அது நடக்கும்;[SE][SS] அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;[SE][QE]
33. [QS][SS] பிஞ்சுகளை உதிர்க்கும்[SE][SS] திராட்சைச் செடிபோன்றும்[SE][SS] பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்[SE][SS] அவர்கள் இருப்பர்.[SE][QE]
34. [QS][SS] ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்[SE][SS] கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்[SE][SS] கூடாரம் எரியுண்ணும்.[SE][QE]
35. [QS][SS] இன்னலைக் கருவுற்று அவர்கள்[SE][SS] இடுக்கண் ஈன்றெடுப்பர்;[SE][SS] வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.[SE][PE]