1. [PS] [QS][SS] பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு[SE][SS] வாழ்நாளோ குறைவு;[SE][SS] வருத்தமோ மிகுதி.[SE][QE]
2. [QS][SS] மலர்போல் பூத்து[SE][SS] அவர்கள் உலர்ந்து போகின்றனர்[SE][SS] ; நிழல்போல் ஓடி[SE][SS] அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.[SE][QE]
3. [QS][SS] இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?[SE][SS] தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?[SE][QE]
4. [QS][SS] அழுக்குற்றதினின்று[SE][SS] அழுக்கற்றதைக் கொணர முடியுமா?[SE][SS] யாராலும் முடியவே முடியாது.[SE][QE]
5. [QS][SS] அவர்களுடைய நாள்கள்[SE][SS] உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.[SE][SS] அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை[SE][SS] உம்மிடம் உள்ளது;[SE][SS] அவர்கள் கடக்க இயலாத[SE][SS] எல்லையைக் குறித்தீர்.[SE][QE]
6. [QS][SS] எனவே அவர்களிடமிருந்து[SE][SS] உம் பார்வையைத் திருப்பும்;[SE][SS] அப்பொழுது, கூலியாள்கள்[SE][SS] தம் நாள் முடிவில் இருப்பது போல்,[SE][SS] அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.[SE][QE]
7. [QS][SS] மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;[SE][SS] அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;[SE][SS] அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.[SE][QE]
8. [QS][SS] அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,[SE][SS] அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,[SE][QE]
9. [QS][SS] தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;[SE][SS] இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.[SE][QE]
10. [QS][SS] ஆனால், மனிதர் மடிகின்றனர்;[SE][SS] மண்ணில் மறைகின்றனர்;[SE][SS] உயிர் போனபின் எங்கே அவர்கள்?[SE][QE]
11. [QS][SS] ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;[SE][SS] ஆறும் வறண்டு காய்ந்துபோம்.[SE][QE]
12. [QS][SS] மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;[SE][SS] வானங்கள் அழியும்வரை[SE][SS] அவர்கள் எழுவதில்லை;[SE][SS] அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.[SE][QE]
13. [QS][SS] ஓ! என்னைப் பாதாளத்தில்[SE][SS] ஒளித்து வைக்கமாட்டீரா?[SE][SS] உமது சீற்றம் தணியும்வரை[SE][SS] மறைத்து வைக்கமாட்டீரா?[SE][SS] என்னை நினைக்க ஒருநேரம்[SE][SS] குறிக்கமாட்டீரா?[SE][QE]
14. [QS][SS] மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?[SE][SS] எனக்கு விடிவு வரும்வரை,[SE][SS] என் போராட்ட நாள்களெல்லாம்[SE][SS] பொறுத்திருப்பேன்.[SE][QE]
15. [QS][SS] நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;[SE][SS] உம் கைவினையாம் என்னைக்[SE][SS] காண விழைவீர்.[SE][QE]
16. [QS][SS] அப்பொழுது, என் காலடிகளைக்[SE][SS] கணக்கிடுவீர்;[SE][SS] என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.[SE][QE]
17. [QS][SS] என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;[SE][SS] என் குற்றத்தை மூடி மறைத்தீர்.[SE][QE]
18. [QS][SS] ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்[SE][SS] பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.[SE][QE]
19. [QS][SS] கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;[SE][SS] நிலத்தின் மண்ணை வெள்ளம்[SE][SS] அடித்துப்போகும்; இவ்வாறே[SE][SS] ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.[SE][QE]
20. [QS][SS] ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;[SE][SS] ஒழிந்துபோவான் அவனும்;[SE][SS] அவனது முகத்தை உருக்குலைத்து,[SE][SS] விரட்டியடிப்பீர்.[SE][QE]
21. [QS][SS] புதல்வர்கள் புகழ்பெறினும்[SE][SS] அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்[SE][SS] அதை அவன் கண்டான் இல்லை.[SE][QE]
22. [QS][SS] அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;[SE][SS] அவன் புலம்புவது தன் பொருட்டே.[SE][PE][QE]