1. [PS] [QS][SS] இதோ! இவை என் கண்களே கண்டவை;[SE][SS] என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.[SE][QE]
2. [QS][SS] நீங்கள் அறிந்திருப்பதை[SE][SS] நானும் அறிந்திருக்கின்றேன்;[SE][SS] நான் உங்களுக்கு[SE][SS] எதிலும் இளைத்தவன் இல்லை.[SE][QE]
3. [QS][SS] ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு[SE][SS] சொல்லாடுவேன்;[SE][SS] கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,[SE][QE]
4. [QS][SS] நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;[SE][SS] நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.[SE][QE]
5. [QS][SS] ஐயோ! பேசாது[SE][SS] அனைவரும் அமைதியாக இருங்கள்;[SE][SS] அதுவே உங்களுக்கு ஞானமாகும்.[SE][QE]
6. [QS][SS] இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;[SE][SS] என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.[SE][QE]
7. [QS][SS] இறைவன் பொருட்டு[SE][SS] முறைகேடாய்ப் பேசுவீர்களா?[SE][SS] அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?[SE][QE]
8. [QS][SS] கடவுள் பொருட்டு[SE][SS] ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது[SE][SS] அவர்க்காக வாதாடுவீர்களா?[SE][QE]
9. [QS][SS] அவர் உங்களை ஆராய்ந்தால்[SE][SS] உங்களில் நல்லதைக் காண்பாரா?[SE][SS] அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல,[SE][SS] அவரையும் வஞ்சிப்பீர்களா?[SE][QE]
10. [QS][SS] நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்[SE][SS] உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.[SE][QE]
11. [QS][SS] அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?[SE][SS] அவருடைய அச்சுறுத்தல்[SE][SS] உங்கள் மீது விழாதா?[SE][QE]
12. [QS][SS] உங்களுடைய மூதுரைகள்[SE][SS] சாம்பலையொத்த முதுமொழிகள்;[SE][SS] உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்[SE][SS] களிமண்ணையொத்த வாதங்கள்.[SE][QE]
13. [QS][SS] பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;[SE][SS] எனக்கு எது வந்தாலும் வரட்டும்.[SE][QE]
14. [QS][SS] என் சதையை என் பற்களிடையே[SE][SS] ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?[SE][SS] என் உயிரை என் கைகளால்[SE][SS] ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?[SE][QE]
15. [QS][SS] அவர் என்னைக்[SE][SS] கொன்றாலும் கொல்லட்டும்;[SE][SS] இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என[SE][SS] எடுத்துரைப்பதில் நான் தளரேன்.[SE][QE]
16. [QS][SS] இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;[SE][SS] ஏனெனில், இறைப்பற்றில்லாதார்[SE][SS] அவர்முன் வர முடியாது.[SE][QE]
17. [QS][SS] என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;[SE][SS] என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.[SE][QE]
18. [QS][SS] இதோ! இப்பொழுது என் வழக்கை[SE][SS] வகைப்படுத்தி வைத்தேன்;[SE][SS] குற்றமற்றவன் என[SE][SS] மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.[SE][QE]
19. [QS][SS] இறைவா! நீர்தாமோ[SE][SS] எனக்கெதிராய் வழக்காடுவது?[SE][SS] அவ்வாறாயின், இப்போதே[SE][SS] வாய்பொத்தி உயிர் நீப்பேன்.[SE][QE]
20. [QS][SS] எனக்கு இரண்டு[SE][SS] செயல்களை மட்டும் செய்யும்;[SE][SS] அப்போது உமது முகத்திலிருந்து[SE][SS] ஒளியமாட்டேன்.[SE][QE]
21. [QS][SS] உமது கையை[SE][SS] என்னிடமிருந்து எடுத்துவிடும்;[SE][SS] உம்மைப்பற்றிய திகில்[SE][SS] என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.[SE][QE]
22. [QS][SS] பின்னர் என்னைக் கூப்பிடும்;[SE][SS] நான் விடையளிப்பேன்;[SE][SS] அல்லது என்னைப் பேசவிடும்;[SE][SS] பின் நீர் மறுமொழி அருளும்.[SE][QE]
23. [QS][SS] என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?[SE][SS] என் மீறுதலையும் தீமையையும்[SE][SS] எனக்குணர்த்தும்.[SE][QE]
24. [QS][SS] உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?[SE][SS] பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?[SE][QE]
25. [QS][SS] காற்றடித்த சருகைப்[SE][SS] பறக்கடிப்பீரோ?[SE][SS] காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?[SE][QE]
26. [QS][SS] கசப்பானவற்றை[SE][SS] எனக்கெதிராய் எழுதுகின்றீர்;[SE][SS] என் இளமையின் குற்றங்களை[SE][SS] எனக்கு உடைமையாக்குகின்றீர்.[SE][QE]
27. [QS][SS] என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;[SE][SS] கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;[SE][SS] காலடிக்கு எல்லை குறித்துக்[SE][SS] குழிதோண்டினீர். [* யோபு 33:11.[QE]. ] [SE][QE]
28. [QS][SS] மனிதர் உளுத்தமரம்போல்[SE][SS] விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி[SE][SS] அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.[SE][PE]