தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. [PS] [QS][SS] என் உள்ளம் என் வாழ்வை[SE][SS] அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத்[SE][SS] தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;[SE][SS] உள்ளத்தில் கசப்பினை[SE][SS] நான் உரைத்திடுவேன்.[SE][QE]
2. [QS][SS] நான் கடவுளிடம் சொல்வேன்;[SE][SS] என்னைக் கண்டனம் செய்யாதீர்;[SE][SS] என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்[SE][SS] என்னவெனச் சாற்றுவீர்.[SE][QE]
3. [QS][SS] என்னை ஒடுக்குவதும்[SE][SS] உமது கையின் படைப்பை இகழ்வதும்[SE][SS] உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும்[SE][SS] உமக்கு அழகாமோ?[SE][QE]
4. [QS][SS] ஊனக் கண்களா உமக்கு உள்ளன?[SE][SS] உண்மையில்,[SE][SS] மானிடப்பார்வையா உமது பார்வை?[SE][QE]
5. [QS][SS] மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்?[SE][SS] மனிதரின் வாழ்நாள் அனையவோ[SE][SS] உம் ஆண்டுகள்?[SE][QE]
6. [QS][SS] பின், ஏன் என் குற்றங்களைத்[SE][SS] துருவிப் பார்க்கிறீர்? ஏன்[SE][SS] என் பாவங்களைக் கிளறுகின்றீர்?[SE][QE]
7. [QS][SS] நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,[SE][SS] உம் கையினின்று என்னைத்[SE][SS] தப்புவிப்பவர் ஒருவருமில்லை.[SE][QE]
8. [QS][SS] என்னை வனைந்து வடிவமைத்து[SE][SS] உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும்,[SE][SS] நீரே என்னை அழிக்கின்றீர்.[SE][QE]
9. [QS][SS] தயைகூர்ந்து நினைத்துப் பாரும்![SE][SS] களிமண்போல் என்னை வனைந்தீர்;[SE][SS] அந்த மண்ணுக்கே என்னைத்[SE][SS] திரும்பச் செய்வீரோ?[SE][QE]
10. [QS][SS] பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?[SE][SS] தயிர்போல் என்னை நீர்[SE][SS] உறைவிக்கவில்லையா? [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] எலும்பும் தசைநாரும் கொண்டு[SE][SS] என்னைப் பின்னினீர்;[SE][SS] தோலும் சதையும் கொண்டு[SE][SS] என்னை உடுத்தினீர்.[SE][QE]
12. [QS][SS] வாழ்வையும் இரக்கத்தையும்[SE][SS] எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை[SE][SS] உம் கரிசனை காத்தது.[SE][QE]
13. [QS][SS] எனினும், இவற்றை உம் உள்ளத்தில்[SE][SS] ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்[SE][SS] இருந்ததென நான் அறிவேன்.[SE][QE]
14. [QS][SS] நான் பாவம் செய்தால்,[SE][SS] என்னைக் கவனிக்கிறீர்;[SE][SS] என் குற்றத்தை எனக்குச்[SE][SS] சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;[SE][SS] நான் குற்றம் புரிந்தால்[SE][SS] அதை என்மீது சுமத்தாது விடீர்.[SE][QE]
15. [QS][SS] நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்![SE][SS] நான் நேர்மையாக இருந்தாலும்[SE][SS] தலைதூக்க முடியவில்லை; ஏனெனில்,[SE][SS] வெட்கம் நிறைந்தாலும்[SE][SS] வேதனையில் உள்ளேன்.[SE][QE]
16. [QS][SS] தலைநிமிர்ந்தால் அரிமாபோல்[SE][SS] என்னை வேட்டையாடுவீர்;[SE][SS] உம் வியத்தகு செயல்களை[SE][SS] எனக்கெதிராய்க் காட்டுவீர்;[SE][QE]
17. [QS][SS] எனக்கெதிராய்ச் சான்றுகளைப்[SE][SS] புதுப்பிக்கிறீர்; என்மீது[SE][SS] உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்;[SE][SS] எனக்கெதிராய்ப் போராட்டத்தைப்[SE][SS] புதிதாக எழுப்புகிறீர்.[SE][QE]
18. [QS][SS] கருப்பையிலிருந்து என்னை[SE][SS] ஏன் வெளிக் கொணர்ந்தீர்?[SE][SS] கண் ஏதும் என்னைக் காணுமுன்பே[SE][SS] நான் இறந்திருக்கலாகாதா?[SE][QE]
19. [QS][SS] உருவாகாதவன் போலவே[SE][SS] இருந்திருக்கக்கூடாதா?[SE][SS] கருவறையிலிருந்தே[SE][SS] கல்லறைக்குப் போயிருப்பேனே;[SE][QE]
20. [QS][SS] என்னுடைய நாள்கள் சிலமட்டுமே;[SE][SS] என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால்,[SE][SS] மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;[SE][QE]
21. [QS][SS] பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த[SE][SS] திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.[SE][QE]
22. [QS][SS] அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த[SE][SS] இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;[SE][SS] ஒளியும் இருள்போல் இருக்கும்.[SE][PE]
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 42
1 என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத் தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்; உள்ளத்தில் கசப்பினை நான் உரைத்திடுவேன். 2 நான் கடவுளிடம் சொல்வேன்; என்னைக் கண்டனம் செய்யாதீர்; என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம் என்னவெனச் சாற்றுவீர். 3 என்னை ஒடுக்குவதும் உமது கையின் படைப்பை இகழ்வதும் உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும் உமக்கு அழகாமோ? 4 ஊனக் கண்களா உமக்கு உள்ளன? உண்மையில், மானிடப்பார்வையா உமது பார்வை? 5 மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்? மனிதரின் வாழ்நாள் அனையவோ உம் ஆண்டுகள்? 6 பின், ஏன் என் குற்றங்களைத் துருவிப் பார்க்கிறீர்? ஏன் என் பாவங்களைக் கிளறுகின்றீர்? 7 நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும், உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை. 8 என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர். 9 தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ? 10 பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைவிக்கவில்லையா? [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.. ] 11 எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்; தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர். 12 வாழ்வையும் இரக்கத்தையும் எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை உம் கரிசனை காத்தது. 13 எனினும், இவற்றை உம் உள்ளத்தில் ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள் இருந்ததென நான் அறிவேன். 14 நான் பாவம் செய்தால், என்னைக் கவனிக்கிறீர்; என் குற்றத்தை எனக்குச் சுட்டிக்காட்டாது விடமாட்டீர்; நான் குற்றம் புரிந்தால் அதை என்மீது சுமத்தாது விடீர். 15 நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்! நான் நேர்மையாக இருந்தாலும் தலைதூக்க முடியவில்லை; ஏனெனில், வெட்கம் நிறைந்தாலும் வேதனையில் உள்ளேன். 16 தலைநிமிர்ந்தால் அரிமாபோல் என்னை வேட்டையாடுவீர்; உம் வியத்தகு செயல்களை எனக்கெதிராய்க் காட்டுவீர்; 17 எனக்கெதிராய்ச் சான்றுகளைப் புதுப்பிக்கிறீர்; என்மீது உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்; எனக்கெதிராய்ப் போராட்டத்தைப் புதிதாக எழுப்புகிறீர். 18 கருப்பையிலிருந்து என்னை ஏன் வெளிக் கொணர்ந்தீர்? கண் ஏதும் என்னைக் காணுமுன்பே நான் இறந்திருக்கலாகாதா? 19 உருவாகாதவன் போலவே இருந்திருக்கக்கூடாதா? கருவறையிலிருந்தே கல்லறைக்குப் போயிருப்பேனே; 20 என்னுடைய நாள்கள் சிலமட்டுமே; என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்; 21 பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன். 22 அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை; ஒளியும் இருள்போல் இருக்கும்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References