1. {மோவாபுக்கு எதிராக} [PS] மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: [QS][SS]நெபோவுக்கு ஐயோ கேடு![SE][SS] அது பாழடைந்து கிடக்கிறது.[SE][SS] கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்[SE][SS] கைப்பற்றப்பட்டுள்ளது.[SE][SS] அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,[SE][SS] தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
2. [QS][SS] போவாபின் புகழ் மங்கிவிட்டது;[SE][SS] எஸ்போனில் அதற்குத்[SE][SS] தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:[SE][SS] ‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்[SE][SS] இல்லாதவாறு சிதைப்போம்’.[SE][SS] மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;[SE][SS] வாள் உன்னைத் துரத்தி வரும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
3. [QS][SS] ஓரொனாயிமினின்று[SE][SS] கூக்குரல் ஒலிக்கிறது.[SE][SS] ‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
4. [QS][SS] மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;[SE][SS] அதன் குழந்தைகளின்[SE][SS] அழுகுரல் கேட்கின்றது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
5. [QS][SS] லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்[SE][SS] அவர்கள் அழுதுகொண்டே[SE][SS] போகிறார்கள்;[SE][SS] ஓரொனாயிமுக்கு[SE][SS] இறங்கிச் செல்லும் வழியில்[SE][SS] அழிவின் புலம்பல்* கேட்கிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ; ‘புலம்பலின் துயரம்’ என்பது எபிரேய பாடம். ] [SE][QE]
6. [QS][SS] தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்[SE][SS] பாதுகாத்துக்கொள்ளுங்கள்;[SE][SS] பாலை நிலத்துக்[SE][SS] காட்டுக்கழுதைபோல் மாறுங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
7. [QS][SS] உன் கோட்டைகளையும்*[SE][SS] கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;[SE][SS] நீயும் கைப்பற்றப்படுவாய்.[SE][SS] கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;[SE][SS] அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்[SE][SS] அதனோடு செல்வார்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ; ‘செயல்கள்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] ‘அழிப்போன்’[SE][SS] ஒவ்வொரு நகருக்கும் வருவான்.[SE][SS] எந்த நகரும் தப்பாது.[SE][SS] ஆண்டவர் சொல்லியிருப்பது போல்[SE][SS] பள்ளத்தாக்குகள் பாழாகும்;[SE][SS] சமவெளிகள் அழிக்கப்படும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
9. [QS][SS] மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;[SE][SS] அது பறந்தோடட்டும்;[SE][SS] அதன் நகர்கள் பாழாக்கப்படும்;[SE][SS] அவை குடியிருப்போர் அற்றுப் போகும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
10. [QS][SS] ஆண்டவர்தம் அலுவலை[SE][SS] அக்கறையின்றிச் செய்பவன்[SE][SS] சபிக்கப்பட்டவன்;[SE][SS] குருதி சிந்தாமல்[SE][SS] தன் வாளை வைத்திருப்பவனும்[SE][SS] சபிக்கப்பட்டவனே. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
11. [QS][SS] மோவாபு இளமைமுதல்[SE][SS] அமைதியில் வாழ்ந்துவருகிறது;[SE][SS] மண்டியை அடியில் கொண்ட[SE][SS] பழந் திராட்சை இரசம் அது[SE][SS] . அது கலத்தினின்று கலத்திற்கு[SE][SS] மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;[SE][SS] அதன் சுவை குன்றவில்லை;[SE][SS] அதன் நறுமணம் மாறவில்லை. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][PE][QE]
12. [PS] எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
13. இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
14. [PS] [QS][SS] ‘நாங்கள் படைவீரர்கள்;[SE][SS] போரில் வல்லவர்கள்’ என்று[SE][SS] நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்? [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
15. [QS][SS] “மோவாபையும் அதன் நகர்களையும்[SE][SS] அழிப்பவன் வந்துவிட்டான்;[SE][SS] அதன் சிறந்த இளைஞர்கள்[SE][SS] கொலைக் களத்திற்குப்[SE][SS] போய் விட்டார்கள்,” என்கிறார்[SE][SS] படைகளின் ஆண்டவர் என்னும்[SE][SS] பெயருடைய மன்னர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
16. [QS][SS] மோவாபின் அழிவு[SE][SS] அண்மையில் உள்ளது;[SE][SS] தீங்கு அதை நோக்கி[SE][SS] விரைந்து வருகிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
17. [QS][SS] அதைச் சுற்றியிருப்போரே,[SE][SS] நீங்கள் அனைவரும் அதற்காகத்[SE][SS] துக்கம் கொண்டாடுங்கள்.[SE][SS] அதன் புகழை அறிந்திருப்போரே,[SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] ‘வலிமைமிக்க செங்கோல்[SE][SS] முறிந்தது எங்ஙனம்?[SE][SS] மேன்மைமிக்க கோல்[SE][SS] உடைந்தது எவ்வாறு?’[SE][SS] என்று கேளுங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
18. [QS][SS] மகள் தீபோனின் குடிமகனே,[SE][SS] உன் மேன்மையை விட்டு இறங்கி வா;[SE][SS] வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.[BR]மோவாபை அழிப்பவன்[SE][SS] உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;[SE][SS] உன் கோட்டைகளை[SE][SS] அவன் தகர்த்து விட்டான். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
19. [QS][SS] அரோயேரின் குடிமகனே![SE][SS] நீ சாலை ஓரமாய் நின்று கவனி;[SE][SS] ஓட்டம்பிடிக்கிறவனையும்[SE][SS] தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,[SE][SS] ‘என்ன நடந்தது?’ என்று கேள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
20. [QS][SS] மோவாபு அழிக்கப்பட்டுச்[SE][SS] சிறுமைக்குள்ளானது;[SE][SS] அழுது புலம்புங்கள்;[SE][SS] கூக்குரலிடுங்கள்;[SE][SS] மோவாபு பாழடைந்துவிட்டது என[SE][SS] அர்னோனில் அறிவியுங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][PE][QE]
21. [PS] சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து, [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
22. தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம், [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
23. கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன், [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
24. கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
25. மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
26. [PS] மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
27. இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா? [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
28. [PS] [QS][SS] மோவாபின் குடிமக்களே,[SE][SS] நகர்களை விட்டு வெளியேறுங்கள்;[SE][SS] பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.[SE][SS] பாறையின் இடுக்குகளில்[SE][SS] கூடுகட்டி வாழும்[SE][SS] புறாவைப் போல் இருங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
29. [QS][SS] மோவாபின் செருக்கைப் பற்றி[SE][SS] நாங்கள் கேள்வியுற்றோம்;[SE][SS] பெரிதே அதன் இறுமாப்பு![SE][SS] அதன் ஆணவம், செருக்கு,[SE][SS] அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்[SE][SS] கேள்வியுற்றோம். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
30. [QS][SS] அதன் திமிரை நான் அறிவேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;[SE][SS] அதன் செயல்கள் யாவும் பொய். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
31. [QS][SS] மோவாபை முன்னிட்டு[SE][SS] நான் ஓலமிடுவேன்;[SE][SS] மோவாபு முழுவதையும் குறித்து[SE][SS] அலறியழுவேன்;[SE][SS] கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்[SE][SS] புலம்புவேன். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
32. [QS][SS] சிப்மாவின் திராட்சைக் கொடியே,[SE][SS] யாசேருக்காக அழுவதைவிட[SE][SS] அதிகமாய் உனக்காக அழுவேன்.[SE][SS] உன் கொடிகள்[SE][SS] கடல் வரை படர்ந்துள்ளன;[SE][SS] யாசேர் கடலை எட்டியுள்ளன.[SE][SS] கோடைப் பழங்கள்மீதும்[SE][SS] திராட்சைப் பழங்கள்மீதும்[SE][SS] ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
33. [QS][SS] செழிப்பான மோவாபு நாட்டினின்று[SE][SS] மகிழ்ச்சியும், அக்களிப்பும்[SE][SS] அகற்றப்பட்டுவிட்டன;[SE][SS] திராட்சை ஆலைகளில்[SE][SS] இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;[SE][SS] மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்[SE][SS] எவனும் இலலை;[SE][SS] மகிழ்ச்சியின் ஆரவாரம்[SE][SS] அங்கு எழுவதில்லை. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
34. எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
35. மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
36. எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
37. [PS] அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
38. மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
39. [PS] இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
40. [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] ஒருவன் கழுகைப்போல்[SE][SS] பாய்ந்து வருவான்;[SE][SS] மோவாபின்மீது[SE][SS] தன் இறக்கைகளை விரிப்பான். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
41. [QS][SS] நகர்கள் பிடிபடும்;[SE][SS] கோட்டைகள் கைப்பற்றப்படும்.[SE][SS] அந்நாளில் மோவாபிய[SE][SS] படைவீரர்களின் இதயம்[SE][SS] பேறுகாலப் பெண்ணின்[SE][SS] இதயத்தைப்போல் துடிக்கும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
42. [QS][SS] மோவாபு அழிக்கப்படும்;[SE][SS] இனி அது ஒரு மக்களினமாய் இராது.[SE][SS] அது ஆண்டவருக்கு எதிராகப்[SE][SS] பெருமை அடித்துக் கொண்டது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
43. [QS][SS] மோவாபின் மகனே,[SE][SS] திகிலும் படுகுழியும் கண்ணியுமே[SE][SS] உன்முன் இருக்கின்றன,[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
44. [QS][SS] திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்[SE][SS] படுகுழியில் விழுவான்;[SE][SS] படுகுழியினின்று வெளியே வருபவன்[SE][SS] கண்ணியில் மாட்டிக்கொள்வான்.[SE][SS] அவர்களுடைய தண்டனைக் காலத்தில்[SE][SS] இவற்றை மோவாபின்மீது[SE][SS] வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
45. [QS][SS] தப்பியோடுவோர்[SE][SS] எஸ்போனின் நிழலில்[SE][SS] வலுவிழந்து நிற்கின்றனர்;[SE][SS] எஸ்போனிலிருந்து[SE][SS] நெருப்பு கிளம்பிற்று;[SE][SS] சீகோனிலிருந்து[SE][SS] தீப்பிழம்பு புறப்பட்டது;[SE][SS] மோவாபின் நெற்றியை[SE][SS] அது விழுங்கிற்று;[SE][SS] கலக்காரரின் உச்சந்தலையை[SE][SS] அது பொசுக்கிற்று. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
46. [QS][SS] மோவாபே, உனக்கு ஐயோ கேடு![SE][SS] கெமோசின் மக்கள்[SE][SS] அழிந்துபோயினர்;[SE][SS] உன் புதல்வர்[SE][SS] நாடு கடத்தப்பட்டனர்;[SE][SS] உன் புதல்வியரும்[SE][SS] நாடுகடத்தப்பட்டனர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][QE]
47. [QS][SS] ஆயினும், இறுதி நாள்களில்[SE][SS] அடிமைத்தனத்தினின்று[SE][SS] மோவாபை நான்[SE][SS] திரும்பக் கொணர்வேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு[SE][SS] இத்துடன் முற்றிற்று. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [SE][PE]