தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எரேமியா
1. {விடுதலைபற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும்} [PS] ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:
2. “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
3. ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.”[PE]
4. [PS] இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
5. [QS][SS] ஆண்டவர் கூறுகின்றார்;[SE][SS] திடுக்கிடச் செய்யும் ஒலியை[SE][SS] நான் கேட்கின்றேன்;[SE][SS] அது அச்சத்தின் ஒலி;[SE][SS] சமாதானத்தின் ஒலி அன்று.[SE][QE]
6. [QS][SS] ‘ஆண்மகன் எவனாவது[SE][SS] பிள்ளை பெற்றதுண்டா?’ என்று[SE][SS] கேட்டுப் பாருங்கள்.[SE][SS] அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்[SE][SS] பேறுகாலப் பெண்ணைப்போலத்[SE][SS] தன் இடுப்பில் கையை[SE][SS] வைத்துக் கொண்டிருப்பதை[SE][SS] நான் ஏன் காண்கிறேன்?[SE][SS] எல்லா முகங்களும் மாறிவிட்டன;[SE][SS] அவை வெளிறிப்போய்விட்டன![SE][QE]
7. [QS][SS] அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;[SE][SS] மற்றெந்த நாளும்[SE][SS] அதைப் போன்றில்லை.[SE][SS] யாக்கோபுக்கு அது[SE][SS] வேதனையின் காலம்;[SE][SS] ஆனால் அதனின்று[SE][SS] அவன் விடுவிக்கப்பெறுவான்.[SE][QE]
8. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.
9. அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!
10. [QS][SS] என் ஊழியன் யாக்கோபே,[SE][SS] அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] தொலை நாட்டினின்று[SE][SS] உன்னை நான் மீட்பேன்;[SE][SS] அடிமைத்தன நாட்டினின்று[SE][SS] உன் வழிமரபினரை விடுவிப்பேன்.[SE][SS] யாக்கோபு திரும்பிவந்து[SE][SS] அமைதியில் இளைப்பாறுவான்;[SE][SS] அவனை அச்சுறுத்துவார் எவருமிலர். [* எரே 46:27-28.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] நான் உன்னோடு இருக்கின்றேன்;[SE][SS] உன்னை மீட்பதற்காக உள்ளேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] எந்த மக்களினத்தார் இடையே[SE][SS] நான் உன்னைச் சிதறடித்தேனோ[SE][SS] அவர்கள் அனைவரையும்[SE][SS] முற்றிலும் அழித்தொழிப்பேன்;[SE][SS] உன்னையோ முற்றிலும்[SE][SS] அழிக்கமாட்டேன்;[SE][SS] உன்னை நீதியான முறையில்[SE][SS] தண்டிப்பேன்;[SE][SS] உன்னைத் தண்டிக்காமல்[SE][SS] விட்டுவிடமாட்டேன்;[SE][SS] உன்னை எவ்வகையிலேனும்[SE][SS] தண்டியாதுவிடேன். [* எரே 46:27-28.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;[SE][SS] உனது காயத்தைக்[SE][SS] குணப்படுத்த முடியாது;[SE][SS] உனது புண் புரையோடிப்போனது.[SE][QE]
13. [QS][SS] உனக்காக வாதிட எவனும் இல்லை;[SE][SS] உனது காயத்தை ஆற்ற[SE][SS] மருந்தே இல்லை;[SE][SS] உன்னைக் குணப்படுத்தவே முடியாது.[SE][QE]
14. [QS][SS] உன் காதலர் அனைவரும்[SE][SS] உன்னை மறந்துவிட்டனர்;[SE][SS] உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;[SE][SS] மாற்றான் தாக்குவது போல[SE][SS] நான் உன்னைத் தாக்கினேன்;[SE][SS] கொடியோன் தண்டிப்பதுபோல[SE][SS] நான் உன்னைத் தண்டித்தேன்;[SE][SS] ஏனெனில் உனது குற்றம் பெரிது;[SE][SS] உன் பாவங்களோ எண்ணற்றவை.[SE][QE]
15. [QS][SS] நீ நொறுக்கப்பட்டதை எண்ணி[SE][SS] ஏன் அழுகின்றாய்?[SE][SS] உனது வேதனையைத் தணிக்கமுடியாது;[SE][SS] ஏனெனில் உனது குற்றமோ பெரிது;[SE][SS] உன் பாவங்களோ எண்ணற்றவை;[SE][SS] எனவே இவற்றை எல்லாம்[SE][SS] நான் உனக்குச் செய்தேன்.[SE][QE]
16. [QS][SS] ஆயினும், உன்னை விழுங்குவோர்[SE][SS] எல்லாரும் விழுங்கப்படுவர்;[SE][SS] உன் பகைவர் எல்லாரும்[SE][SS] ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;[SE][SS] உன்னைக் கொள்ளையடிப்போர்[SE][SS] அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;[SE][SS] உன்னைச் சூறையாடுவோர்[SE][SS] அனைவரும், நான் கையளிக்க,[SE][SS] சூறையாடப்படுவர்.[SE][QE]
17. [QS][SS] நான் உனக்கு நலம் அளிப்பேன்;[SE][SS] உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று[SE][SS] உன்னை அழைத்தார்கள்;[SE][SS] ‘இந்தச் சீயோனைப் பற்றிக்[SE][SS] கவலைப்படுவார் யாருமிலர்’,[SE][SS] என்றார்கள்.[SE][QE]
18. [QS][SS] ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;[SE][SS] அடிமைத் தனத்தினின்று[SE][SS] நான் யாக்கோபின் கூடாரங்களை[SE][SS] திரும்பக் கொணர்வேன்;[SE][SS] அவனுடைய உறைவிடங்கள்மீது[SE][SS] நான் இரக்கம் காட்டுவேன்;[SE][SS] அவற்றின் இடிபாடுகள்மேலேயே[SE][SS] நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;[SE][SS] அரண்மனையும் அதற்குரிய[SE][SS] இடத்திலேயே அமைக்கப்படும்.[SE][QE]
19. [QS][SS] அவர்களிடமிருந்து[SE][SS] நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;[SE][SS] மகிழ்ச்சியுறுவோரின்[SE][SS] ஆரவாரம் கேட்கும்.[SE][SS] அவர்களை நான்[SE][SS] பல்கிப் பெருகச் செய்வேன்;[SE][SS] அவர்கள் எண்ணிக்கையில்[SE][SS] குறைய மாட்டார்கள்.[SE][SS] நான் அவர்களைப்[SE][SS] பெருமைப் படுத்துவேன்;[SE][SS] இனி அவர்கள்[SE][SS] சிறுமையுற மாட்டார்கள்.[SE][QE]
20. [QS][SS] அவர்களுடைய பிள்ளைகள்[SE][SS] முன்புபோல் இருப்பர்;[SE][SS] அவர்களது கூட்டமைப்பு[SE][SS] என் திருமுன் நிலை நாட்டப்படும்;[SE][SS] அவர்களை ஒடுக்குவோர்[SE][SS] அனைவரையும் தண்டிப்பேன்.[SE][QE]
21. [QS][SS] அவர்களின் தலைவன்[SE][SS] அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;[SE][SS] அவர்களை ஆள்பவன்[SE][SS] அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;[SE][SS] அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;[SE][SS] அவனும் என்னை அணுகிவருவான்;[SE][SS] ஏனெனில், என்னை அணுகிவர[SE][SS] வேறு யாருக்குத் துணிவு உண்டு?,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
22. [QS][SS] நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;[SE][SS] நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.[SE][QE]
23. [QS][SS] இதோ ஆண்டவரின் புயல்![SE][SS] அவரது சினம்[SE][SS] சூறாவளிபோல் சுழன்றெழும்.[SE][SS] அது தீயோரின் தலையைத் தாக்கிச்[SE][SS] சுழன்றடிக்கும்.[SE][QE]
24. [QS][SS] ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள[SE][SS] திட்டங்கள் அனைத்தையும்[SE][SS] செயல்படுத்தி நிறைவேற்றாமல்[SE][SS] அவரது வெஞ்சினம் திரும்பிவராது;[SE][SS] வரவிருக்கும் நாள்களில்[SE][SS] அதை நீங்கள் உணர்வீர்கள்.[SE][PE]
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 30 / 52
விடுதலைபற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும் 1 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: 2 “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை. 3 ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.” 4 இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே: 5 ஆண்டவர் கூறுகின்றார்; திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்; அது அச்சத்தின் ஒலி; சமாதானத்தின் ஒலி அன்று. 6 ‘ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா?’ என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்? எல்லா முகங்களும் மாறிவிட்டன; அவை வெளிறிப்போய்விட்டன! 7 அந்தோ! அந்த நாள் பெரிய நாள்; மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்; ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான். 8 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன். 9 அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்! 10 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலை நாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர். [* எரே 46:27-28.. ] 11 நான் உன்னோடு இருக்கின்றேன்; உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்; உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்; உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன். [* எரே 46:27-28.. ] 12 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. 13 உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. 14 உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. 15 நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்கமுடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன். 16 ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்; உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்; உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்; உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர். 17 நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று உன்னை அழைத்தார்கள்; ‘இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர்’, என்றார்கள். 18 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; அடிமைத் தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். 19 அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப் படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள். 20 அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். 21 அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகிவருவான்; ஏனெனில், என்னை அணுகிவர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். 22 நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். 23 இதோ ஆண்டவரின் புயல்! அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும். 24 ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது; வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 30 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References