2. "நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே; உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.
|
3. இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.
|
5. ஆண்டவர் கூறுவது இதுவே; என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள்; தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்?
|
6. எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லையே!
|
7. செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
|
8. குருக்கள், "ஆண்டவர் எங்கே?" என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.
|
9. ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்" என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.
|
10. சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்; கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்; இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.
|
11. தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.
|
13. ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்; பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
|
15. அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன; அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன; அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
|
17. உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
|
18. நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன?
|
19. உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்; உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
|
20. நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்; உன் தளைகளை அறுத்துவிட்டாய்; "நான் ஊழியம் செய்வேன்" என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே!
|
21. முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்; நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி?
|
22. நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
|
23. "நான் தீட்டுப்படவில்லை; பாகால்களுக்குப்பின் திரியவில்லை" என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்; நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்; இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.
|
24. பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை; புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.
|
25. "கால் தேய ஓடாதே; தொண்டை வறண்டுபோக விடாதே" என்றால், நீயோ, ";பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்; அவர்கள் பின்னே திரிவேன்" .
|
26. திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
|
27. ஒரு மரத்தை நோக்கி, "நீயே என் தந்தை" என்பர்; ஒரு கல்லை நோக்கி, "நீயே என்னைப் பெற்றெடுத்தவள்" என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்; ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், "எழுந்தருளி எங்களை விடுவியும்" என்பர்.
|
28. உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!
|
29. என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.
|
30. நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்; அவர்கள் திருந்தவில்லை; சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.
|
31. இத்தலைமுறையினரே! ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? "நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்; இனி உம்மிடம் வரமாட்டோம்" என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்?
|
32. ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.
|
33. காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்; ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
|
34. மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது; அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?
|
35. இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, "நான் மாசற்றவள்; அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி" என்கிறாய். "பாவம் செய்யவில்லை" என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
|
36. ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய்? அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!
|
37. உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்; ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்; அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை."
|