1. [PS] ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.[PE]
2. {வரவிருக்கும் அரசர்} [PS] [QS][SS] காரிருளில் நடந்துவந்த மக்கள்[SE][SS] பேரொளியைக் கண்டார்கள்;[SE][SS] சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்[SE][SS] குடியிருப்போர்மேல்[SE][SS] சுடர் ஒளி உதித்துள்ளது. [* மத் 4:15 ] [SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே! அந்த இனத்தாரைப்[SE][SS] பல்கிப் பெருகச் செய்தீர்;[SE][SS] அவர்கள் மகிழ்ச்சியை[SE][SS] மிகுதிப்படுத்தினீர்;[SE][SS] அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்[SE][SS] உம் திருமுன் அவர்கள்[SE][SS] அகமகிழ்கிறார்கள்;[SE][SS] கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது[SE][SS] அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். [* மத் 4:16; லூக் 1:79 ] [SE][QE]
4. [QS][SS] மிதியான் நாட்டுக்குச் செய்தது போல[SE][SS] அவர்களுக்குச் சுமையாக இருந்த[SE][SS] நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;[SE][SS] அவர்கள் தோளைப் புண்ணாக்கிய[SE][SS] தடியைத் தகர்த்துப் போட்டீர்;[SE][SS] அவர்களை ஒடுக்குவோரின்[SE][SS] கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.[SE][QE]
5. [QS][SS] அமளியுற்ற போர்க்களத்தில்[SE][SS] போர்வீரன் அணிந்திருந்த[SE][SS] காலணிகளும், இரத்தக் கறைபடிந்த[SE][SS] ஆடைகள் அனைத்தும்[SE][SS] நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.[SE][QE]
6. [QS][SS] ஏனெனில், ஒரு குழந்தை[SE][SS] நமக்குப் பிறந்துள்ளார்;[SE][SS] ஓர் ஆண்மகவு நமக்குத்[SE][SS] தரப்பட்டுள்ளார்;[SE][SS] ஆட்சிப்பொறுப்பு[SE][SS] அவர் தோள்மேல் இருக்கும்;[SE][SS] அவர் திருப்பெயரோ[SE][SS] ‘வியத்தகு ஆலோசகர்,[SE][SS] வலிமைமிகு இறைவன்,[SE][SS] என்றுமுள தந்தை,[SE][SS] அமைதியின் அரசர்’[SE][SS] என்று அழைக்கப்படும்.[SE][QE]
7. [QS][SS] அவரது ஆட்சியின் உயர்வுக்கும்[SE][SS] அமைதி நிலவும் அவரது அரசின்[SE][SS] வளர்ச்சிக்கும் முடிவு இராது;[SE][SS] தாவீதின் அரியணையில் அமர்ந்து[SE][SS] தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;[SE][SS] இன்றுமுதல் என்றென்றும்[SE][SS] நீதியோடும் நேர்மையோடும்[SE][SS] ஆட்சிபுரிந்து அதை[SE][SS] நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;[SE][SS] படைகளின் ஆண்டவரது பேரார்வம்[SE][SS] இதைச் செய்து நிறைவேற்றும்.[SE][QE]
8. [QS][SS] யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை[SE][SS] ஆண்டவர் அனுப்பியுள்ளார்;[SE][SS] அது இஸ்ரயேல்மேல் இறங்கித்[SE][SS] தன் செயலைச் செய்யும். [* லூக் 1:32-33.[QE] ] [SE][PE][QE]
9. {இஸ்ரயேலுக்குத் தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள்[SE][SS] ஆகிய அனைத்து மக்களும்[SE][SS] இதை அறிந்து கொள்வார்கள்.[SE][QE]
10. [QS][SS] செருக்கினாலும் இதயத்தில் எழும்[SE][SS] இறுமாப்பினாலும்[SE][SS] அவர்கள் சொல்லுவதாவது:[SE][SS] “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது:[SE][SS] எனினும், செதுக்கிய கற்களால்[SE][SS] நாங்கள் கட்டியெழுப்புவோம்.[SE][SS] காட்டத்தி மரங்கள்[SE][SS] வெட்டி வீழ்த்தப்பட்டன;[SE][SS] எனினும், அவற்றிற்குப் பதிலாகக்[SE][SS] கேதுரு மரங்களை வைப்போம்”.[SE][QE]
11. [QS][SS] ஆதலால் ஆண்டவர்[SE][SS] இரட்சீனின் அதிகாரிகளை[SE][SS] அவர்களுக்கு எதிராய்க்[SE][SS] கிளர்ந்தெழச் செய்தார்;[SE][SS] அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.[SE][QE]
12. [QS][SS] கிழக்கிலிருந்து சிரியரும்,[SE][SS] மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்[SE][SS] வந்தார்கள்;[SE][SS] தங்கள் வாயை விரிவாய்த்திறந்து[SE][SS] இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;[SE][SS] இவையெல்லாம் நடந்தும்,[SE][SS] அவரது சீற்றம் தணியவிலலை;[SE][SS] ஓங்கிய அவரது சினக் கை[SE][SS] இன்னும் மடங்கவில்லை.[SE][QE]
13. [QS][SS] தங்களை நொறுக்க வைத்தவரிடம்[SE][SS] மக்கள் திரும்பவில்லை;[SE][SS] படைகளின் ஆண்டவரைத்[SE][SS] தேடவுமில்லை.[SE][QE]
14. [QS][SS] ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்[SE][SS] உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை[SE][SS] அனைவரையும்,[SE][SS] ஒலிவமரக்கிளையையும் நாணலையும்[SE][SS] ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;[SE][QE]
15. [QS][SS] முதியவரும், மதிப்புமிக்கவருமே[SE][SS] உயர்ந்தோர்;[SE][SS] பொய்யைப் போதிக்கும்[SE][SS] இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.[SE][QE]
16. [QS][SS] இந்த மக்களை வழிநடத்தியோர்[SE][SS] அவர்களை நெறிபிறழச் செய்தனர்;[SE][SS] அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ[SE][SS] அழிந்துபோயினர்.[SE][QE]
17. [QS][SS] ஆதலால், அவர்களுடைய[SE][SS] இளைஞரைக் குறித்து[SE][SS] என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;[SE][SS] அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,[SE][SS] கைம்பெண்கள்மேல்[SE][SS] இரக்கம் காட்டவில்லை;[SE][SS] அவர்கள் அனைவரும்[SE][SS] இறைப்பற்று இல்லாதவர்கள்;[SE][SS] தீச்செயல் புரிபவர்கள்;[SE][SS] எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;[SE][SS] இவையெல்லாம் நடந்தும்[SE][SS] அவர் சீற்றம் தணியவில்லை;[SE][SS] ஓங்கிய அவரது சினக் கை[SE][SS] இன்னும் மடங்கவில்லை.[SE][QE]
18. [QS][SS] கொடுமை தீயைப்போல்[SE][SS] கொழுந்து விட்டு எரிந்தது;[SE][SS] அது முட்புதர்களையும்[SE][SS] நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;[SE][SS] காட்டின் அடர்ந்த பகுதிகளை[SE][SS] அது கொளுத்திவிட்டது;[SE][SS] அதனால் புகைமண்டலம் சுழன்று[SE][SS] மேலே எழுந்தது.[SE][QE]
19. [QS][SS] படைகளின் ஆண்டவரது சினத்தால்[SE][SS] நாடு நெருப்புக்கு இரையானது;[SE][SS] மக்கள் நெருப்புக்கு[SE][SS] விறகைப் போல் ஆனார்கள்;[SE][SS] ஒருவரும் தம் அடுத்திருப்பாரை[SE][SS] விட்டு வைக்கவில்லை.[SE][QE]
20. [QS][SS] அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்[SE][SS] பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;[SE][SS] இடப்புறம் இருப்பனவற்றை[SE][SS] எடுத்து விழுங்கியும்[SE][SS] மனம் நிறைவடையவில்லை;[SE][SS] ஒவ்வொருவரும் தம் குழந்தையின்[SE][SS] சதையைக் கூடத் தின்றனர்;[SE][QE]
21. [QS][SS] மனாசே குடும்பத்தார்[SE][SS] எப்ராயிம் குடும்பத்தாரையும்[SE][SS] எப்ராயிம் குடும்பத்தார்[SE][SS] மனாசே குடும்பத்தாரையும்[SE][SS] கொன்று தின்றனர்;[SE][SS] இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து[SE][SS] யூதாவின் மேல் பாய்ந்தனர்;[SE][SS] இவையெல்லாம் நடந்தும்[SE][SS] அவரது சீற்றம் தணியவில்லை;[SE][SS] ஓங்கிய அவரது சினக் கை[SE][SS] இன்னும் மடங்கவில்லை;[SE][PE]