தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] முன்பு என்னிடம் எதுவும்[SE][SS] கேளாதவர்கள்[SE][SS] என்னைத் தேடி அடைய இடமளித்தேன்;[SE][SS] என்னை நாடாதவர்கள்[SE][SS] என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்;[SE][SS] என் பெயரை வழிபடாத[SE][SS] மக்களினத்தை நோக்கி,[SE][SS] “இதோ நான், இதோ நான்” என்றேன். [* உரோ 10:20. ] [SE][QE]
2. [QS][SS] தங்கள் எண்ணங்களின்படி நடந்து[SE][SS] பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்[SE][SS] கலகக்கார மக்களினத்தின்[SE][SS] மீது நாள் முழுவதும்[SE][SS] என் கைகளை விரித்து நீட்டினேன். [* உரோ 10:21. ] [SE][QE]
3. [QS][SS] அந்த மக்களினத்தார் என் கண் எதிரே[SE][SS] இவற்றைச் செய்து இடையறாது[SE][SS] எனக்குச் சினமூட்டுகின்றனர்;[SE][SS] தோட்டங்களில் பலியிட்டு,[SE][SS] செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.[SE][QE]
4. [QS][SS] கல்லறைகளிடையே அமர்ந்து[SE][SS] மறைவிடங்களில்[SE][SS] இரவைக் கழிக்கின்றனர்;[SE][SS] பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்;[SE][SS] தீட்டான கறிக்குழம்பைத்[SE][SS] தம் கலங்களில் வைத்துள்ளனர்.[SE][QE]
5. [QS][SS] இவ்வாறிருந்தும், “எட்டி நில்,[SE][SS] என் அருகில் வராதே,[SE][SS] நான் உன்னைவிடத்[SE][SS] தூய்மையானவன்” என்கின்றனர்.[SE][SS] என் சினத்தால்[SE][SS] மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும்[SE][SS] நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும்[SE][SS] இவர்கள் இருக்கின்றனர்.[SE][QE]
6. [QS][SS] அவர்களுக்குரியது என்முன்[SE][SS] எழுதப்பட்டாயிற்று;[SE][SS] நான் அமைதியாய் இருப்பதில்லை;[SE][SS] அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை[SE][SS] அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் தீச்செயலுக்கும்[SE][SS] அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும்[SE][SS] சேர்த்துக் கொட்டுவேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] ஏனெனில் அவர்கள்[SE][SS] மலைமேல் தூபம் காட்டினார்கள்;[SE][SS] குன்றுகளின்மேல்[SE][SS] என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்;[SE][SS] அவர்களுடைய முன்னைய[SE][SS] செயல்களுக்குரிய கைம்மாறை[SE][SS] அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] திராட்சைக்குலையில்[SE][SS] புது இரசம் கிடைக்கும்போது,[SE][SS] ‘அதை அழிக்காதே,[SE][SS] அதில் ஆசி உள்ளது’ என்பார்கள்.[SE][SS] அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும்[SE][SS] நான் செயலாற்றுவேன்;[SE][SS] அவர்கள் அனைவரையும்[SE][SS] அழிந்துவிட மாட்டேன்.[SE][QE]
9. [QS][SS] யாக்கோபினின்று வழிமரபினரையும்,[SE][SS] யூதாவினின்று என் மலைகளை[SE][SS] உடைமையாக்குவோரையும்[SE][SS] தோன்றச் செய்வேன்.[SE][SS] நான் தேர்ந்துகொண்டோர்[SE][SS] நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;[SE][SS] என் ஊழியர் அங்கே வாழ்வர்.[SE][QE]
10. [QS][SS] என்னை வழிபடும் என் மக்களுக்குச்[SE][SS] சாரோன் சமவெளி[SE][SS] ஆடுகளுக்கு மேய்நிலமாகவும்[SE][SS] ஆக்கோர் பள்ளத்தாக்கு[SE][SS] மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும். [* யோசு 7:24-26. ] [SE][QE]
11. [QS][SS] ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு,[SE][SS] என் திருமலையை மறந்தவர்களே![SE][SS] கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து,[SE][SS] மெனீ** தெய்வத்திற்கு[SE][SS] நறுமணத்திராட்சை இரசத்தைக்[SE][SS] கிண்ணங்களில் வார்ப்பவர்களே! [* எபிரேயத்தில், ‘செல்வம்’ என்பது பொருள். ; எபிரேயத்தில், ‘விதி’ என்பது பொருள்.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] உங்களை வாளுக்கு[SE][SS] இரையெனக் குறிப்பேன்;[SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்;[SE][SS] ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்;[SE][SS] நீங்கள் மறுமொழி தரவில்லை;[SE][SS] நான் பேசினேன்,[SE][SS] நீங்கள் கவனிக்கவில்லை;[SE][SS] என் பார்வைக்குத்[SE][SS] தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்;[SE][SS] எனக்கு விருப்பமில்லாததைத்[SE][SS] தேர்ந்து கொண்டீர்கள்.[SE][QE]
13. [QS][SS] ஆதலால் என் தலைவராகிய[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] என் ஊழியர்கள் உண்பார்கள்;[SE][SS] நீங்களோ பசியால் வாடுவீர்கள்.[SE][SS] என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்;[SE][SS] நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்;[SE][SS] என் அடியார்கள் அக்களிப்பார்கள்;[SE][SS] நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.[SE][QE]
14. [QS][SS] என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து[SE][SS] ஆர்ப்பரிப்பார்கள்;[SE][SS] நீங்களோ நெஞ்சம் உடைந்து[SE][SS] கூக்குரலிடுவீர்கள்;[SE][SS] ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.[SE][QE]
15. [QS][SS] நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு[SE][SS] உங்கள் பெயரைச்[SE][SS] சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்;[SE][SS] என் தலைவராகிய ஆண்டவர்[SE][SS] உங்களைக் கொன்றொழிப்பார்;[SE][SS] தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.[SE][QE]
16. [QS][SS] மண்ணுலகில் ஆசி பெற விழைபவன்[SE][SS] உண்மைக் கடவுளின் பெயரால்[SE][SS] ஆசிபெறுவான்;[SE][SS] பூவுலகில் ஆணையிடுபவன்[SE][SS] மெய்க் கடவுளின் பெயரால்[SE][SS] ஆணையிடுவான்;[SE][SS] ஏனெனில், முந்நாளைய துன்பங்கள்[SE][SS] மறந்து போயின;[SE][SS] அவை என் பார்வையிலிருந்து[SE][SS] மறைந்து போயின.[SE][PE][QE]
17. {புதிய படைப்பு} [PS] [QS][SS] இதோ! புதிய விண்ணுலகையும்[SE][SS] புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்;[SE][SS] முந்தியவை[SE][SS] நினைத்துப் பார்க்கப்படுவதில்லை;[SE][SS] மனத்தில் எழுதுவதுமில்லை. [* எசா 66:22; 2 பேது 3:13; திவெ 21:1. ] [SE][QE]
18. [QS][SS] நான் படைப்பனவற்றில் நீங்கள்[SE][SS] என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.[SE][SS] இதோ நான் எருசலேமை[SE][SS] மகிழ்ச்சிக்குரியதாகவும்[SE][SS] அதன் மக்களைப்[SE][SS] பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.[SE][QE]
19. [QS][SS] நானும் எருசலேமை முன்னிட்டு[SE][SS] மகிழ்ச்சியடைவேன்;[SE][SS] என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்;[SE][SS] இனி அங்கே அழுகையும் கூக்குரலும்[SE][SS] ஒருபோதும் கேட்கப்படா. [* திவெ 21:4. ] [SE][QE]
20. [QS][SS] இனி அங்கே[SE][SS] சில நாள்களுக்குள் இறக்கும்[SE][SS] பச்சிளங்குழந்தையே இராது;[SE][SS] தம் வாழ்நாளை நிறைவு செய்யாத[SE][SS] முதியவர் இரார்;[SE][SS] ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்[SE][SS] இளைஞனாகக் கருதப்படுவான்.[SE][SS] பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்[SE][SS] சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.[SE][QE]
21. [QS][SS] அவர்கள் வீடு கட்டி[SE][SS] அங்குக் குடியிருப்பார்கள்;[SE][SS] திராட்சை நட்டு[SE][SS] அதன் கனிகளை உண்பார்கள்.[SE][QE]
22. [QS][SS] வேறொருவர் குடியிருக்க[SE][SS] அவர்கள் கட்டுவதில்லை;[SE][SS] மற்றொருவர் உண்ண[SE][SS] அவர்கள் நடுவதில்லை;[SE][SS] மரங்களின் வாழ்நாள் போன்றே[SE][SS] என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்;[SE][SS] நான் தேர்ந்து கொண்டவர்கள்[SE][SS] தங்கள் உழைப்பின் பயனை[SE][SS] நெடுநாள் துய்ப்பார்கள்.[SE][QE]
23. [QS][SS] வீணாக அவர்கள் உழைப்பதில்லை;[SE][SS] தங்கள் பிள்ளைகளை[SE][SS] அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின்[SE][SS] வழிமரபினர்![SE][SS] அவர்களின் தலைமுறையினர்[SE][SS] அவர்களுடன் இருப்பார்கள்.[SE][QE]
24. [QS][SS] அவர்கள் வேண்டுவதற்கு முன்னே[SE][SS] நான் மறுமொழி தருவேன்;[SE][SS] அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே[SE][SS] பதிலளிப்பேன்.[SE][QE]
25. [QS][SS] ஓநாயும் ஆட்டுக்குட்டியும்[SE][SS] ஒருமித்து மேயும்;[SE][SS] சிங்கம் மாட்டைப்போல்[SE][SS] வைக்கோல் தின்னும்;[SE][SS] பாம்பு புழுதியைத் தின்னும்;[SE][SS] என் திருமலை முழுவதிலும்[SE][SS] தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும்[SE][SS] எவருமில்லை, என்கிறார் ஆண்டவர். [* எசா 11:6-9. ] [SE][PE]

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 66
கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு 1 முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்; என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்; என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, “இதோ நான், இதோ நான்” என்றேன். * உரோ 10: 20. 2 தங்கள் எண்ணங்களின்படி நடந்து பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும் கலகக்கார மக்களினத்தின் மீது நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன். * உரோ 10: 21. 3 அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்; தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர். 4 கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்றனர்; பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்; தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர். 5 இவ்வாறிருந்தும், “எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் தூய்மையானவன்” என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர். 6 அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று; நான் அமைதியாய் இருப்பதில்லை; அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன். 7 அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் அவர்கள் மலைமேல் தூபம் காட்டினார்கள்; குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன். 8 ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, ‘அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது’ என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்; அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன். 9 யாக்கோபினின்று வழிமரபினரையும், யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும் தோன்றச் செய்வேன். நான் தேர்ந்துகொண்டோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் ஊழியர் அங்கே வாழ்வர். 10 என்னை வழிபடும் என் மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும் ஆக்கோர் பள்ளத்தாக்கு மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும். * யோசு 7:24- 26. 11 ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு, என் திருமலையை மறந்தவர்களே! கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து, மெனீ** தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே! [* எபிரேயத்தில், ‘செல்வம்’ என்பது பொருள். ; எபிரேயத்தில், ‘விதி’ என்பது பொருள்.. ] 12 உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்; ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்; நீங்கள் மறுமொழி தரவில்லை; நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை; என் பார்வைக்குத் தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்; எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள். 13 ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியர்கள் உண்பார்கள்; நீங்களோ பசியால் வாடுவீர்கள். என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்; நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்; என் அடியார்கள் அக்களிப்பார்கள்; நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள். 14 என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்; நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்; ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள். 15 நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்; என் தலைவராகிய ஆண்டவர் உங்களைக் கொன்றொழிப்பார்; தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார். 16 மண்ணுலகில் ஆசி பெற விழைபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்; பூவுலகில் ஆணையிடுபவன் மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின; அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின. புதிய படைப்பு 17 இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. * எசா 66:22; 2 பேது 3:13; திவெ 21: 1. 18 நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். 19 நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. * திவெ 21: 4. 20 இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். 21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள். 22 வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை; மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை; மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்; நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள். 23 வீணாக அவர்கள் உழைப்பதில்லை; தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை; ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள். 24 அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன். 25 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பாம்பு புழுதியைத் தின்னும்; என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர். * எசா 11:6- 9.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References