1. [PS] [QS][SS] நீர் வானங்களைப் பிளந்து[SE][SS] இறங்கி வரமாட்டீரா?[SE][SS] மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே![SE][QE]
2. [QS][SS] விறகின்மேல் தீ[SE][SS] கொழுந்துவிட்டு எரிவது போலும்,[SE][SS] தண்ணீரை நெருப்பு[SE][SS] கொதிக்கச் செய்வது போலும்,[SE][SS] அவற்றின் நிலைமை இருக்கும்.[SE][SS] இவற்றால் உம் பெயர்[SE][SS] உம் பகைவருக்குத் தெரியவரும்;[SE][SS] வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.[SE][QE]
3. [QS][SS] நாங்கள் எதிர்பாராத[SE][SS] அச்சம் தரும் செயல்களை[SE][SS] நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்;[SE][SS] மலைகள் உம் முன்னே உருகி ஓடின![SE][QE]
4. [QS][SS] தம்மை நம்பியிருப்போருக்காகச்[SE][SS] செயலாற்றும் கடவுள்[SE][SS] உம்மையன்றி வேறு யார்?[SE][SS] முற்காலம் முதல் இதுபற்றி[SE][SS] எவரும் கேள்வியுற்றதில்லை;[SE][SS] செவியுற்றதுமில்லை,[SE][SS] கண்ணால் பார்த்ததுமில்லை. [* 1 கொரி 2:9.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] மகிழ்ச்சியுடன்[SE][SS] நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும்[SE][SS] உம்மையும் உம் வழிகளையும்[SE][SS] நினைவில் கொள்வோர்க்கும்[SE][SS] நீர் துணை செய்ய விரைகிறீர்;[SE][SS] இதோ, நீர் சினமடைந்தீர்;[SE][SS] நாங்கள் பாவம் செய்தோம்;[SE][SS] நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க,[SE][SS] நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?[SE][QE]
6. [QS][SS] நாங்கள் அனைவரும்[SE][SS] தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்;[SE][SS] எங்கள் நேரிய செயல்கள் எல்லாம்[SE][SS] அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின;[SE][SS] நாங்கள் யாவரும் இலைபோல்[SE][SS] கருகிப் போகின்றோம்;[SE][SS] எங்கள் தீச்செயல்கள்[SE][SS] காற்றைப் போல்[SE][SS] எங்களை அடித்துச் சென்றன.[SE][QE]
7. [QS][SS] உம் பெயரைப் போற்றுவார்[SE][SS] எவரும் இல்லை;[SE][SS] உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர்[SE][SS] எவரும் இல்லை;[SE][SS] நீர் உம் முகத்தை[SE][SS] எங்களுக்கு மறைத்துள்ளீர்;[SE][SS] எங்கள் தீச்செயல்களின் பிடியில்[SE][SS] எங்களை அழியவிட்டீர்.[SE][QE]
8. [QS][SS] ஆயினும், ஆண்டவரே[SE][SS] நீரே எங்கள் தந்தை;[SE][SS] நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;[SE][SS] நாங்கள் அனைவரும்[SE][SS] உம் கைவேலைப்பாடுகளே.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்;[SE][SS] குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்;[SE][SS] உம் மக்களாகிய எங்கள் அனைவரையும்[SE][SS] கண்ணோக்கும்.[SE][QE]
10. [QS][SS] உம் புனித நகர்கள் பாலை நிலமாயின;[SE][SS] சீயோன் பாழ் நிலமாயிற்று;[SE][SS] எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.[SE][QE]
11. [QS][SS] எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய[SE][SS] தூய்மையும் மாட்சியும் மிக்க[SE][SS] எங்கள் திருக்கோவில்[SE][SS] நெருப்புக்கு இரையாயிற்று;[SE][SS] எங்களுக்கு அருமையானவை[SE][SS] அனைத்தும் அழிந்து போயின.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவரே, இவற்றைக் கண்டும்[SE][SS] நீர் வாளாவிருப்பீரோ?[SE][SS] மவுனமாயிருந்து[SE][SS] எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?[SE][PE]