1. {மக்களினத்தார் மீது ஆண்டவரின் வெற்றி} [PS] [QS][SS] ஏதோமிலிருந்து வருகின்ற[SE][SS] இவர் யார்?[SE][SS] கருஞ்சிவப்பு உடை உடுத்திப்[SE][SS] பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்?[SE][SS] அழகுமிகு ஆடை அணிந்து[SE][SS] பேராற்றலுடன் பீடுநடைபோடும்[SE][SS] இவர் யார்?[SE][SS] நானேதான் அவர்![SE][SS] வெற்றியை பறைசாற்றுபவர்;[SE][SS] விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர். [* எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. ] [SE][QE]
2. [QS][SS] உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்?[SE][SS] உம் உடைகள்[SE][SS] திராட்சை பிழியும் ஆலையில்[SE][SS] மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்? [* எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. ] [SE][QE]
3. [QS][SS] தனியாளாய் நான் திராட்சை பிழியும்[SE][SS] ஆலையில் மிதித்தேன்;[SE][SS] மக்களினத்தவருள் எவனும்[SE][SS] என்னுடன் இருக்கவில்லை;[SE][SS] என் கோபத்தில் நான்[SE][SS] அவர்களை மிதித்தேன்;[SE][SS] என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்;[SE][SS] அவர்கள் செந்நீர்[SE][SS] என் உடைகள் மேல் தெறித்தது;[SE][SS] என் ஆடைகள் அனைத்தையும்[SE][SS] கறையாக்கினேன். [* எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. ; திவெ 14:20; 19:13-15. ] [SE][QE]
4. [QS][SS] நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள்[SE][SS] என் நெஞ்சத்தில் இருந்தது;[SE][SS] மீட்பின் ஆண்டு வந்துவிட்டது. [* எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. ] [SE][QE]
5. [QS][SS] சுற்றுமுற்றும் பார்த்தேன்;[SE][SS] துணைபுரிவோர் எவருமில்லை;[SE][SS] திகைப்புற்று நின்றேன்;[SE][SS] தாங்குவார் யாருமில்லை;[SE][SS] என் புயமே[SE][SS] எனக்கு வெற்றி கொணர்ந்தது;[SE][SS] என் சினமே எனக்கு ஊக்கமளித்தது. [* எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. ; எசா 59:16. ] [SE][QE]
6. [QS][SS] சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்;[SE][SS] சீற்றமடைந்து அவர்களைக்[SE][SS] குடிவெறி கொள்ளச்செய்தேன்;[SE][SS] அவர்கள் குருதியைத்[SE][SS] தரையில் கொட்டினேன். [* எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. ] [SE][PE][QE]
7. {இஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்டுள்ள இரக்கம்} [PS] [QS][SS] ஆண்டவரின் பேரன்புச் செயல்களை[SE][SS] எடுத்துரைத்து[SE][SS] அவருக்குப் புகழ்சாற்றுவேன்;[SE][SS] ஏனெனில், ஆண்டவர் நமக்கு[SE][SS] நன்மைகள் செய்துள்ளார்;[SE][SS] தம் இரக்கத்தையும்[SE][SS] பேரன்பையும் முன்னிட்டு[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு[SE][SS] மாபெரும் நன்மை செய்துள்ளார்.[SE][QE]
8. [QS][SS] ஏனெனில், “மெய்யாகவே[SE][SS] அவர்கள் என் மக்கள்,[SE][SS] வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று[SE][SS] அவர் கூறியுள்ளார்; மேலும்[SE][SS] அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.[SE][QE]
9. [QS][SS] துன்பங்கள் அனைத்திலும்[SE][SS] அவர்களின் மீட்பர் ஆனார்;[SE][SS] தூதரோ வானதூதரோ அல்ல,[SE][SS] அவரே நேரடியாக[SE][SS] அவர்களை விடுவித்தார்;[SE][SS] தம் அன்பினாலும் இரக்கத்தினாலும்[SE][SS] அவர்களை மீட்டார்;[SE][SS] பண்டைய நாள்கள் அனைத்திலும்[SE][SS] அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.[SE][QE]
10. [QS][SS] அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி,[SE][SS] அவரது தூய ஆவியைத்[SE][SS] துயருறச் செய்தனர்;[SE][SS] ஆதலால் அவரும்[SE][SS] அவர்களின் பகைவராய் மாறினார்;[SE][SS] அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.[SE][QE]
11. [QS][SS] அப்பொழுது அவர் மக்கள்[SE][SS] மோசேயின் காலமாகிய[SE][SS] பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்;[SE][SS] தம் மந்தையை மேய்ப்பரோடு[SE][SS] கடலினின்று கரையேற்றியவர் எங்கே?[SE][SS] அவருக்குத் தம் தூய ஆவியை[SE][SS] அருளியவர் எங்கே?[SE][QE]
12. [QS][SS] தம் மாட்சிமிகு புயத்தால்[SE][SS] மோசேயின் வலக்கையை[SE][SS] நடத்தி சென்றவர் எங்கே?[SE][SS] தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு[SE][SS] அவர்கள் முன்[SE][SS] தண்ணீரைப் பிரித்தவர் எங்கே? [* விப 14:21.[QE]. ] [SE][QE]
13. [QS][SS] ஆழ்கடலின் நடுவே[SE][SS] அவர்களை நடத்திச் சென்றவர் யார்?[SE][SS] பாலை நிலத்தில் தளராத குதிரைபோல்[SE][SS] அவர்கள் தடுமாறவில்லை.[SE][QE]
14. [QS][SS] கால்நடை பள்ளத்தாக்கினுள்[SE][SS] இறங்கிச் செல்வதுபோல்[SE][SS] அவர்களும் இளைப்பாற[SE][SS] ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது.[SE][SS] இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு[SE][SS] நீர் உம் மக்களை நடத்திவந்தீர்.[SE][PE][QE]
15. {இரக்கமும் துணையும் வேண்டி மன்றாடல்} [PS] [QS][SS] விண்ணகத்தினின்று கண்ணோக்கும்;[SE][SS] தூய்மையும் மாட்சியும் உடைய உம்[SE][SS] உறைவிடத்தினின்று பார்த்தருளும்;[SE][SS] உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே?[SE][SS] என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும்[SE][SS] அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே?[SE][SS] என்னிடமிருந்து அவற்றை[SE][SS] நிறுத்தி வைத்துள்ளீரே![SE][QE]
16. [QS][SS] ஏனெனில், நீரே எங்கள் தந்தை;[SE][SS] ஆபிரகாம் எங்களை அறியார்;[SE][SS] இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்;[SE][SS] ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை;[SE][SS] பண்டை நாளிலிருந்து[SE][SS] ‘எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து[SE][SS] எங்களைப் பிறழச் செய்வதேன்?[SE][SS] உமக்கு அஞ்சி நடவாதவாறு[SE][SS] எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?[SE][SS] உம் ஊழியர்களை முன்னிட்டும்,[SE][SS] உம் உரிமைச் சொத்தாகிய,[SE][SS] குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.[SE][QE]
18. [QS][SS] உம் திருத்தலத்தை உம் புனித மக்கள்[SE][SS] சிறிது காலம்[SE][SS] உடைமையாகக் கொண்டிருந்தனர்;[SE][SS] எங்கள் பகைவர்[SE][SS] அதைத் தரைமட்டமாக்கினர்.[SE][QE]
19. [QS][SS] உம்மால் என்றுமே[SE][SS] ஆளப்படாதவர்கள் போலானோம்;[SE][SS] உம் பெயரால்[SE][SS] அழைக்கப்படாதவர்கள் போலானோம்.[SE][PE]