1. {மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்} [PS] [QS][SS] மீட்க இயலாதவாறு ஆண்டவரின்[SE][SS] கை குறுகிவிடவில்லை;[SE][SS] கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது[SE][SS] மந்தமாகி விடவில்லை.[SE][QE]
2. [QS][SS] உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,[SE][SS] உங்கள் கடவுளுக்கும் இடையே[SE][SS] பிளவை உண்டாக்கியுள்ளன;[SE][SS] உங்கள் பாவங்களே[SE][SS] அவர் செவி சாய்க்காதவாறு[SE][SS] அவரது முகத்தை உங்களுக்கு[SE][SS] மறைத்துள்ளன.[SE][QE]
3. [QS][SS] உங்கள் கைகள் இரத்தப்பழியால்[SE][SS] கறைபட்டுள்ளன;[SE][SS] உங்கள் விரல்கள் தீமையால்[SE][SS] தீட்டுப்பட்டுள்ளன.[SE][SS] உங்கள் உதடுகள்[SE][SS] பொய்களை உதிர்க்கின்றன;[SE][SS] உங்கள் நாக்கு[SE][SS] தீயவற்றை முணுமுணுக்கின்றது.[SE][QE]
4. [QS][SS] நீதியான வழக்கைக் கொண்டு வருபவர்[SE][SS] எவரும் இல்லை;[SE][SS] உண்மையுடன் வழக்காடுபவர்[SE][SS] யாருமில்லை;[SE][SS] வெறுமையான வாதங்கள்மீது[SE][SS] நம்பிக்கை வைத்துப்[SE][SS] பொய்யைப் பேசி,[SE][SS] வஞ்சனையைக் கருத்தரித்துத்[SE][SS] தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.[SE][QE]
5. [QS][SS] நச்சுப் பாம்பின் முட்டைகளை[SE][SS] அடைகாக்கிறார்கள்;[SE][SS] சிலந்திப் பூச்சியின் வலையைப்[SE][SS] பின்னுகிறார்கள்;[SE][SS] அவற்றின் முட்டைகளை விழுங்குபவர்[SE][SS] சாவார்;[SE][SS] உடைபடும் முட்டையிலிருந்து[SE][SS] கட்டுவிரியன் வெளிவரும்.[SE][QE]
6. [QS][SS] அவற்றின் வலைகள்[SE][SS] உடையாகப் பயன்படா;[SE][SS] அவற்றின் வேலைப்பாடுகளைக்[SE][SS] கொண்டு எவரும் தம்மைப்[SE][SS] போர்த்துக்கொள்ளமாட்டார்;[SE][SS] அவர்களின் செயல்கள் தீயன;[SE][SS] அவர்களின் கையில் இருப்பன[SE][SS] வன்முறைச் செயல்களே![SE][QE]
7. [QS][SS] தீமை செய்ய அவர்கள் கால்கள்[SE][SS] விரைகின்றன;[SE][SS] குற்றமற்ற இரத்தம் சிந்த[SE][SS] அவர்கள் துடிக்கின்றனர்;[SE][SS] அவர்கள் எண்ணங்கள் தீயவை;[SE][SS] பாழாக்குதலும் அழிவுமே[SE][SS] அவர்கள் வழித்தடங்களில் உள்ளன. [* உரோ 3:15-17. ] [SE][QE]
8. [QS][SS] அமைதி வழியை அவர்கள் அறியார்;[SE][SS] நீதியின் பாதையில்[SE][SS] அவர்கள் நடக்கவில்லை;[SE][SS] தாங்கள் செல்லும் பாதைகளைக்[SE][SS] கோணலாக்கினர்;[SE][SS] அவற்றில் நடப்பவர் எவரும்[SE][SS] அமைதியை அறியார். [* உரோ 3:15-17. ] [SE][PE][QE]
9. {மக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்} [PS] [QS][SS] ஆதலால், நீதி எங்களுக்கு[SE][SS] வெகு தொலையில் உள்ளது;[SE][SS] நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.[SE][SS] ஒளிக்கெனக் காத்திருந்தோம்;[SE][SS] காரிருள்தான் கிட்டியது;[SE][SS] விடியலை எதிர்பார்த்தோம்;[SE][SS] இருளிலேயே நடக்கின்றோம்;[SE][QE]
10. [QS][SS] பார்வையற்றோரைப் போல்[SE][SS] சுவரைப்பிடிக்க[SE][SS] நாங்கள் தடவுகின்றோம்;[SE][SS] கண்ணில்லாதவரைப்போல்[SE][SS] எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்;[SE][SS] நண்பகலிலும் மங்கிய பொழுதிலும்[SE][SS] செத்தவர்போல் இருக்கின்றோம்.[SE][QE]
11. [QS][SS] கரடியைப் போல் நாங்கள் யாவரும்[SE][SS] உறுமுகின்றோம்;[SE][SS] புறாக்களைப்போல் பெருமூச்சுடன்[SE][SS] விம்முகின்றோம்;[SE][SS] நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,[SE][SS] ஒன்றையும் காணவில்லை;[SE][SS] விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,[SE][SS] அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.[SE][QE]
12. [QS][SS] உம் திருமுன் எங்கள் குற்றங்கள்[SE][SS] பெருகியுள்ளன;[SE][SS] எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்[SE][SS] சான்று சொல்கின்றன;[SE][SS] எங்கள் குற்றங்கள் எங்களோடு தான்[SE][SS] இருக்கின்றன;[SE][SS] எங்கள் தீச்செயல்களை[SE][SS] நாங்களே அறிவோம்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவருக்கு எதிராகக்[SE][SS] கிளர்ச்சி செய்து[SE][SS] அவரை வஞ்சித்தோம்;[SE][SS] எங்கள் கடவுளைப் பின்பற்றாமல்[SE][SS] அகன்று போனோம்;[SE][SS] ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்[SE][SS] பற்றிப் பேசினோம்;[SE][SS] பொய்யானவற்றை மனதில் உருவாக்கி[SE][SS] அவற்றை மொழிந்தோம்.[SE][QE]
14. [QS][SS] நீதி துரத்தப்பட்டது;[SE][SS] நேர்மை தொலையில் நின்றது;[SE][SS] பொது இடங்களில்[SE][SS] வாய்மை நிலைகுலைந்தது;[SE][SS] உண்மைக்கு அங்கே இடம் இல்லை.[SE][QE]
15. [QS][SS] உண்மை என்பதே[SE][SS] இல்லாமல் போய்விட்டது;[SE][SS] தீமையினின்று விலகியவர்[SE][SS] சூறையாடப்படுகின்றார்;[SE][SS] ஆண்டவர் அதைக் கண்டார்;[SE][SS] அவர் பார்வையில் நீதியின்மை[SE][SS] தீயதாய்ப் பட்டது.[SE][PE][QE]
16. {மக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்} [PS] [QS][SS] இதில் தலையிட ஓர் ஆள்கூட[SE][SS] இல்லை என்று கண்டு[SE][SS] ஆண்டவர் திகைப்புற்றார்;[SE][SS] அவரது கையே அவருக்கு[SE][SS] வெற்றி கொணர்ந்து;[SE][SS] அவரது நேர்மையே[SE][SS] அவரைத் தாங்கி நின்றது. [* எசா 63:5. ] [SE][QE]
17. [QS][SS] அவர் நேர்மையை மார்புக் கவசமாய்[SE][SS] அணிந்துகொண்டார்;[SE][SS] விடுதலையைத் தலைச்சீராவாய்த்[SE][SS] தம் தலையில் வைத்துக்கொண்டார்;[SE][SS] அநீதிக்குப் பழிவாங்குதலை[SE][SS] ஆடையாய் உடுத்திக் கொண்டார்;[SE][SS] அன்புவெறியை மேலாடையாகப்[SE][SS] போர்த்திக் கொண்டார். [* எபே 6:14,17; 1 தெச 5:8.[QE]. ] [SE][QE]
18. [QS][SS] தம் பகைவரின் செயல்களுக்குத்[SE][SS] தக்க கைம்மாறு அளிப்பார்;[SE][SS] அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;[SE][SS] தம் எதிரிகளுக்குத்[SE][SS] தக்க தண்டனை வழங்குவார்;[SE][SS] தீவு நாடுகளுக்கும்[SE][SS] தகுந்த பதிலடி கொடுப்பார்.[SE][QE]
19. [QS][SS] மேலை நாட்டினர்[SE][SS] ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;[SE][SS] கீழைநாட்டினர்[SE][SS] அவரது மாட்சிக்கு நடுங்குவர்;[SE][SS] ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,[SE][SS] ஓடிவரும் ஆறென அவர் வருவார்.[SE][QE]
20. [QS][SS] சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;[SE][SS] யாக்கோபில் தீயதனின்று[SE][SS] திரும்பியவரிடம் வருவார்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
21. [QS][SS] அவர்களுடன் நான் செய்து கொள்ளும்[SE][SS] உடன்படிக்கை இதுவே:[SE][SS] உன்மேல் இருக்கும் என் ஆவியும்[SE][SS] உன் வாயில் நான் வைத்துள்ள[SE][SS] என் வார்த்தைகளும்[SE][SS] உன் வாயினின்றும்[SE][SS] உன் வழி மரபினர் வாயினின்றும்[SE][SS] வழிவழிவரும் உன்[SE][SS] தலைமுறையினர் வாயினின்றும்[SE][SS] இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE]