தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {இஸ்ரயேலின் சிலைவழிபாடு கண்டிக்கப்படல்} [PS] [QS][SS] நேர்மையாளர் அழிந்து போகின்றனர்;[SE][SS] இதை மனத்தில் கொள்வார்[SE][SS] எவரும் இல்லை;[SE][SS] இறைப்பற்றுடையோர்[SE][SS] எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்;[SE][SS] அதைக் கருத்தில் கொள்வார்[SE][SS] எவரும் இல்லை;[SE][SS] ஏனெனில் நேர்மையாளர்[SE][SS] தீமையின் முன்னின்று[SE][SS] எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.[SE][QE]
2. [QS][SS] அவர்கள் அமைதிக்குள்[SE][SS] சென்றடைகின்றனர்;[SE][SS] நேர்மையான வழிமுறையைப்[SE][SS] பின்பற்றுவோர்[SE][SS] தம் இறுதிப் படுக்கைகளில்[SE][SS] இளைப்பாறுகின்றனர்.[SE][QE]
3. [QS][SS] சூனியக்காரியின் மக்களே,[SE][SS] விபசாரன், விலைமாதின் வாரிசே,[SE][SS] அருகில் வாருங்கள்.[SE][QE]
4. [QS][SS] யாரைப் பார்த்து நீங்கள்[SE][SS] நகைக்கின்றீர்கள்?[SE][SS] யாருக்கு எதிராக வாயைப்பிளந்து[SE][SS] நாக்கை நீட்டுகின்றீர்கள்?[SE][SS] நீங்கள் கொடுமையின்[SE][SS] பிள்ளைகளன்றோ![SE][SS] பொய்மையின் சந்ததியன்றோ![SE][QE]
5. [QS][SS] கருவாலி மரத் தோப்பிலும்,[SE][SS] பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும்[SE][SS] காமத்தீயால் எரிகிறீர்கள்;[SE][SS] பள்ளத்தாக்குகளில்,[SE][SS] பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில்,[SE][SS] உங்கள் பச்சிளங் குழந்தைகளைக்[SE][SS] கொல்கிறீர்கள்.[SE][QE]
6. [QS][SS] பள்ளத்தாக்கின் வழவழப்பான[SE][SS] கற்களினின்று உருவான சிலைகளே[SE][SS] உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு;[SE][SS] அவற்றிற்கு நீ நீர்மப்பலியை[SE][SS] ஊற்றியுள்ளாய்;[SE][SS] உணவுப் படையலைப் படைத்துள்ளாய்;[SE][SS] இவற்றால் நான் அமைதி அடைவேனோ?[SE][QE]
7. [QS][SS] வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல்[SE][SS] உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்;[SE][SS] பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.[SE][QE]
8. [QS][SS] கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால்[SE][SS] உன் நினைவுக்குறியை வைத்தாய்;[SE][SS] என்னை விட்டுவிட்டு[SE][SS] உன் மஞ்சத்தைத் திறந்தாய்;[SE][SS] ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்;[SE][SS] நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ,[SE][SS] அவர்களோடு ஓர் உடன்பாடு[SE][SS] செய்து கொண்டாய்;[SE][SS] அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய். [* மத் 21:13; மாற் 11:17; லூக் 19:46.[QE] ] [SE][QE]
9. [QS][SS] நீ எண்ணெயுடன்[SE][SS] மோலேக்கிடம் சென்றாய்;[SE][SS] நறுமணப் பொருட்களைப்[SE][SS] பெருக்கிக் கொண்டாய்;[SE][SS] தொலை நாடுகளுக்கு[SE][SS] உன் தூதர்களை அனுப்பினாய்;[SE][SS] பாதாளம் மட்டும் அனுப்பினாய்.[SE][QE]
10. [QS][SS] உன் வழிப்பயணம் தொலைவானதால்[SE][SS] களைத்துப் போனாய்; ஆயினும்,[SE][SS] ‘இது வீண்’ என்று நீ சொல்லவில்லை;[SE][SS] உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்;[SE][SS] ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.[SE][QE]
11. [QS][SS] யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்?[SE][SS] நீ என்னிடம் பொய் சொன்னாயே![SE][SS] நீ என்னை நினைவுகூரவில்லை;[SE][SS] என்னைப் பற்றி உன் மனத்தில்[SE][SS] எண்ணவுமில்லை![SE][SS] வெகுகாலமாய் நான்[SE][SS] அமைதியாய் இருந்ததால் அன்றோ[SE][SS] நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?[SE][QE]
12. [QS][SS] உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்;[SE][SS] அவை உனக்கு உதவா.[SE][QE]
13. [QS][SS] நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது,[SE][SS] நீ திரட்டிய சிலைகள்[SE][SS] உன்னை விடுவிக்கட்டும்![SE][SS] காற்று அவை அனைத்தையும்[SE][SS] அடித்துக் கொண்டுபோம்;[SE][SS] வெறும் மூச்சே அவற்றை[SE][SS] ஊதித் தள்ளிவிடும்;[SE][SS] என்னிடம் அடைக்கலம் புகுவோர்[SE][SS] நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;[SE][SS] என் திருமலையை உடைமையாய்ப்[SE][SS] பெறுவர்.[SE][PE][QE]
14. {நலமும் துணையும் நல்கும் ஆண்டவர்} [PS] [QS][SS] அமையுங்கள்; பாதையை அமையுங்கள்;[SE][SS] அதைத் தயார் செய்யுங்கள்;[SE][SS] ‘என் மக்களின் வழியிலிருக்கும்[SE][SS] தடையை அகற்றுங்கள்’[SE][SS] என்று கூறப்படும்.[SE][QE]
15. [QS][SS] உயர்ந்தவரும் உன்னதரும்[SE][SS] காலம் கடந்து வாழ்பவரும்,[SE][SS] ‘தூயவர்’ என்ற பெயரைக்[SE][SS] கொண்டவரும் கூறுவது இதுவே:[SE][SS] உயர்ந்த தூய இடத்தில்[SE][SS] நான் உறைகின்றேன்;[SE][SS] நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும்[SE][SS] நான் வாழ்கின்றேன்;[SE][SS] நொறுங்கிய உள்ளத்தினரை[SE][SS] ஊக்குவிக்கவும்[SE][SS] நலிந்த நெஞ்சத்தினரைத்[SE][SS] திடப்படுத்தவும்[SE][SS] நான் குடியிருக்கின்றேன்.[SE][QE]
16. [QS][SS] ஏனெனில், என்றென்றும் நான்[SE][SS] குற்றஞ்சாட்டமாட்டேன்;[SE][SS] எப்பொழுதும்[SE][SS] சினம் கொண்டிருக்கமாட்டேன்;[SE][SS] ஏனெனில், நான் தோற்றுவித்த[SE][SS] உயிர் மூச்சாகிய மனித ஆவி[SE][SS] என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.[SE][QE]
17. [QS][SS] பேராசை என்னும் தீமையை முன்னிட்டு[SE][SS] நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து,[SE][SS] அவனை அடித்து நொறுக்கினேன்;[SE][SS] சீற்றம் கொண்டு என்னை[SE][SS] அவனுக்கு மறைத்துக் கொண்டேன்;[SE][SS] அவனோ என்னைவிட்டு விலகி[SE][SS] மனம்போன போக்கிலே சென்றான்.[SE][QE]
18. [QS][SS] அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்;[SE][SS] ஆயினும் அவனைக் குணமாக்குவேன்;[SE][SS] அவனை நடத்திச் சென்று அவனுக்கு[SE][SS] மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.[SE][QE]
19. [QS][SS] அவனுக்காக அழுவோரின் உதடுகளில்[SE][SS] நன்றி ஒலி எழச்செய்வேன்;[SE][SS] அமைதி! தொலையில் இருப்போருக்கும்[SE][SS] அருகில் இருப்போருக்கும் அமைதி![SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] அவர்களை நான் நலமடையச் செய்வேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
20. [QS][SS] கொடியவரோ கொந்தளிக்கும்[SE][SS] கடல்போல் இருக்கின்றனர்;[SE][SS] அந்தக் கடலால்[SE][SS] அமைதியாயிருக்க இயலாது;[SE][SS] அதன் நீர்த்திரள்கள் சேற்றையும்[SE][SS] சகதியையும் கிளறிவிடுகின்றன;[SE][QE]
21. [QS][SS] கொடியவர்களுக்கு அமைதியே இல்லை,[SE][SS] என்கிறார் என் கடவுள்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 66
ஏசாயா 57:36
இஸ்ரயேலின் சிலைவழிபாடு கண்டிக்கப்படல் 1 நேர்மையாளர் அழிந்து போகின்றனர்; இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை; இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்; அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை; ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். 2 அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்; நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர் தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர். 3 சூனியக்காரியின் மக்களே, விபசாரன், விலைமாதின் வாரிசே, அருகில் வாருங்கள். 4 யாரைப் பார்த்து நீங்கள் நகைக்கின்றீர்கள்? யாருக்கு எதிராக வாயைப்பிளந்து நாக்கை நீட்டுகின்றீர்கள்? நீங்கள் கொடுமையின் பிள்ளைகளன்றோ! பொய்மையின் சந்ததியன்றோ! 5 கருவாலி மரத் தோப்பிலும், பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும் காமத்தீயால் எரிகிறீர்கள்; பள்ளத்தாக்குகளில், பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில், உங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறீர்கள். 6 பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று உருவான சிலைகளே உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு; அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்; உணவுப் படையலைப் படைத்துள்ளாய்; இவற்றால் நான் அமைதி அடைவேனோ? 7 வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல் உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்; பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய். 8 கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால் உன் நினைவுக்குறியை வைத்தாய்; என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்; ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்; நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ, அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்; அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய். [* மத் 21:13; மாற் 11:17; லூக் 19:46. ] 9 நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்; நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்; தொலை நாடுகளுக்கு உன் தூதர்களை அனுப்பினாய்; பாதாளம் மட்டும் அனுப்பினாய். 10 உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்; ஆயினும், ‘இது வீண்’ என்று நீ சொல்லவில்லை; உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்; ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை. 11 யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்? நீ என்னிடம் பொய் சொன்னாயே! நீ என்னை நினைவுகூரவில்லை; என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை! வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்? 12 உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்; அவை உனக்கு உதவா. 13 நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது, நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்! காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்; வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்; என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர். நலமும் துணையும் நல்கும் ஆண்டவர் 14 அமையுங்கள்; பாதையை அமையுங்கள்; அதைத் தயார் செய்யுங்கள்; ‘என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்’ என்று கூறப்படும். 15 உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், ‘தூயவர்’ என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே: உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன். 16 ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்; ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும். 17 பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான். 18 அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்; ஆயினும் அவனைக் குணமாக்குவேன்; அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன். 19 அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்; அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர். 20 கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்; அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது; அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன; 21 கொடியவர்களுக்கு அமைதியே இல்லை, என்கிறார் என் கடவுள்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References