1. {இஸ்ரயேல்மீது ஆண்டவர் கொண்ட அன்பு} [PS] [QS][SS] பிள்ளை பெறாத மலடியே,[SE][SS] மகிழ்ந்து பாடு;[SE][SS] பேறுகால வேதனை அறியாதவளே,[SE][SS] அக்களித்துப் பாடி முழங்கு;[SE][SS] ஏனெனில், கைவிடப்பட்டவளின்[SE][SS] பிள்ளைகள்[SE][SS] கணவனோடு வாழ்பவளின்[SE][SS] பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்,[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* கலா 4:27. ] [SE][QE]
2. [QS][SS] உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு;[SE][SS] உன் குடியிருப்புகளின்[SE][SS] தொங்கு திரைகளைப் பரப்பிவிடு;[SE][SS] உன் கயிறுகளைத்[SE][SS] தாராளமாய் நீட்டி விடு;[SE][SS] உன் முளைகளை உறுதிப்படுத்து.[SE][QE]
3. [QS][SS] வலப்புறமும் இடப்புறமும்[SE][SS] நீ விரிந்து பரவுவாய்;[SE][SS] உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை[SE][SS] உடைமையாக்கிக் கொள்வர்;[SE][SS] பாழடைந்து கிடக்கும் நகர்களிலும்[SE][SS] அவர்கள் குடியேற்றப்படுவர்.[SE][QE]
4. [QS][SS] அஞ்சாதே,[SE][SS] நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்;[SE][SS] வெட்கி நாணாதே,[SE][SS] இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;[SE][SS] உன் இளமையின் மானக்கேட்டை[SE][SS] நீ மறந்துவிடுவாய்;[SE][SS] உன் கைம்மையின் இழிநிலையை[SE][SS] இனி நினைக்கமாட்டாய்.[SE][QE]
5. [QS][SS] ஏனெனில், உன்னை உருவாக்கியவரே[SE][SS] உன் கணவர்,[SE][SS] ‘படைகளின் ஆண்டவர்’ என்பது[SE][SS] அவர்தம் பெயராம்.[SE][SS] இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;[SE][SS] ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என[SE][SS] அவர் அழைக்கப்படுகின்றார்.[SE][QE]
6. [QS][SS] ஏனெனில், கைவிடப்பட்டு[SE][SS] மனமுடைந்துபோன துணைவிபோலும்,[SE][SS] தள்ளப்பட்ட இளம் மனைவி போலும்[SE][SS] இருக்கும் உன்னை[SE][SS] ஆண்டவர் அழைத்துள்ளார்,[SE][SS] என்கிறார் உன் கடவுள்.[SE][QE]
7. [QS][SS] நொடிப்பொழுதே[SE][SS] நான் உன்னைக் கைவிட்டேன்;[SE][SS] ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை[SE][SS] மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.[SE][QE]
8. [QS][SS] பொங்கியெழும் சீற்றத்தால்[SE][SS] இமைப்பொழுதே என்முகத்தை[SE][SS] உனக்கு மறைத்தேன்;[SE][SS] ஆயினும் என்றுமுள பேரன்பால்[SE][SS] உனக்கு இரக்கம் காட்டுவேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
9. [QS][SS] எனக்கு இது நோவாவின் நாள்களில்[SE][SS] நடந்ததுபோல் உள்ளது;[SE][SS] நோவாவின் காலத்துப் பெருவெள்ளம்[SE][SS] இனி மண்ணுலகின்மேல்[SE][SS] பாய்ந்து வராது என்று[SE][SS] நான் ஆணையிட்டேன்;[SE][SS] அவ்வாறே உம்மீதும்[SE][SS] சீற்றம் அடையமாட்டேன் என்றும்,[SE][SS] உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும்[SE][SS] ஆணையிட்டுக் கூறியுள்ளேன். [* தொநூ 9:8-17. ] [SE][QE]
10. [QS][SS] மலைகள் நிலை சாயினும்[SE][SS] குன்றுகள் இடம் பெயரினும்[SE][SS] உன்மீது நான் கொண்ட பேரன்போ[SE][SS] நிலை சாயாது;[SE][SS] என் சமாதான உடன்படிக்கையோ[SE][SS] அசைவுறாது, என்கிறார்[SE][SS] உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.[SE][QE]
11. [QS][SS] துயருற்றவளே, சூறைக்காற்றால்[SE][SS] அலைக்கழிக்கப்பட்டவளே,[SE][SS] ஆறுதல் பெறாது தவிப்பவளே,[SE][SS] இதோ, மாணிக்கக்கற்களால்[SE][SS] உன் அடித்தளத்தை அமைப்பேன்,[SE][SS] நீலக்கற்களால் உன்[SE][SS] நிலைக்களத்தை நிறுவுவேன். [* திவெ 21:18-21. ] [SE][QE]
12. [QS][SS] உன் கால்மாடங்களைச்[SE][SS] சிவப்புக் கற்களாலும்,[SE][SS] உன் வாயில்களைப்[SE][SS] பளிங்குக் கற்களாலும்[SE][SS] உன் மதில்கள் அனைத்தையும்[SE][SS] விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். [* திவெ 21:18-21. ] [SE][QE]
13. [QS][SS] உன் குழந்தைகள் அனைவருக்கும்[SE][SS] ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்;[SE][SS] உன் பிள்ளைகள்[SE][SS] நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். [* யோவா 6:45.[QE]. ] [SE][QE]
14. [QS][SS] நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்;[SE][SS] ஒடுக்கப்பட்ட நிலை[SE][SS] உன்னைவிட்டு அகன்றுபோம்;[SE][SS] நீ அஞ்சாதே![SE][SS] திகில் உன்னை அணுகாது.[SE][QE]
15. [QS][SS] எவர்களாவது உன்னை[SE][SS] எதிர்த்துக் கூடினால் அவர்கள்[SE][SS] என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்;[SE][SS] உன்னைத் தாக்கவரும் எவனும்[SE][SS] உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.[SE][QE]
16. [QS][SS] இதோ, கரிநெருப்பை ஊதிப்[SE][SS] போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப[SE][SS] உருவாக்கும் கொல்லனைப்[SE][SS] படைத்தவர் நான்;[SE][SS] அதைப் பாழாக்கி அழிப்பவனையும்[SE][SS] படைத்தவர் நான்.[SE][QE]
17. [QS][SS] உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட[SE][SS] எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது.[SE][SS] உன்மேல் குற்றஞ்சாட்டித்[SE][SS] தீர்ப்புச் சொல்ல எழும்[SE][SS] எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்;[SE][SS] இவையே ஆண்டவரின் ஊழியர்களது[SE][SS] உரிமைச்சொத்தும்,[SE][SS] நான் அவர்களுக்கு அளிக்கும்[SE][SS] வெற்றியுமாய் இருக்கின்றன,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE]