தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. [PS] [QS][SS] நாங்கள் அறிவித்ததை நம்பியவர்[SE][SS] யார்? ஆண்டவரின் ஆற்றல்[SE][SS] யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?[SE][QE]
2. [QS][SS] இளந்தளிர்போலும்[SE][SS] வறண்டநில வேர்போலும்[SE][SS] ஆண்டவர் முன்னிலையில்[SE][SS] அவர் வளர்ந்தார்;[SE][SS] நாம் பார்ப்பதற்கேற்ற[SE][SS] அமைப்போ அவருக்கில்லை;[SE][SS] நாம் விரும்பத்தக்க தோற்றமும்[SE][SS] அவருக்கில்லை; [* யோவா 12:38; உரோ 10:16 ] [SE][QE]
3. [QS][SS] அவர் இகழப்பட்டார்;[SE][SS] மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;[SE][SS] வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;[SE][SS] நோயுற்று நலிந்தார்;[SE][SS] காண்போர் தம் முகத்தை[SE][SS] மூடிக்கொள்ளும் நிலையில்[SE][SS] அவர் இருந்தார்;[SE][SS] அவர் இழிவுபடுத்தப்பட்டார்;[SE][SS] அவரை நாம் மதிக்கவில்லை.[SE][QE]
4. [QS][SS] மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்[SE][SS] தாங்கிக்கொண்டார்;[SE][SS] நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;[SE][SS] நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு[SE][SS] நொறுக்கப்பட்டவர் என்றும்[SE][SS] சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும்[SE][SS] எண்ணினோம்.[SE][QE]
5. [QS][SS] அவரோ, நம் குற்றங்களுக்காகக்[SE][SS] காயமடைந்தார்;[SE][SS] நம்தீச்செயல்களுக்காக[SE][SS] நொறுக்கப்பட்டார்;[SE][SS] நமக்கு நிறைவாழ்வை அளிக்க[SE][SS] அவர் தண்டிக்கப்பட்டார்;[SE][SS] அவர்தம் காயங்களால்[SE][SS] நாம் குணமடைகின்றோம். [* மத் 8:17 ] [SE][QE]
6. [QS][SS] ஆடுகளைப் போல நாம் அனைவரும்[SE][SS] வழிதவறி அலைந்தோம்;[SE][SS] நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;[SE][SS] ஆண்டவரோ நம் அனைவரின்[SE][SS] தீச்செயல்களையும்[SE][SS] அவர்மேல் சுமத்தினார். [* 1 பேது 2:24 ] [SE][QE]
7. [QS][SS] அவர் ஒடுக்கப்பட்டார்;[SE][SS] சிறுமைப்படுத்தப்பட்டார்;[SE][SS] ஆயினும், அவர் தம்[SE][SS] வாயைத் திறக்கவில்லை;[SE][SS] அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட[SE][SS] ஆட்டுக்குட்டிபோலும்[SE][SS] உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்[SE][SS] கத்தாத செம்மறி போலும்[SE][SS] அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். [* 1 பேது 2:25 ] [SE][QE]
8. [QS][SS] அவர் கைது செய்யப்பட்டு,[SE][SS] தீர்ப்பிடப்பட்டு,[SE][SS] இழுத்துச் செல்லப்பட்டார்;[SE][SS] அவருக்கு நேர்ந்ததைப்பற்றி[SE][SS] அக்கறை கொண்டவர் யார்?[SE][SS] ஏனெனில், வாழ்வோர் உலகினின்று[SE][SS] அவர் அகற்றப்பட்டார்;[SE][SS] என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக்[SE][SS] கொலையுண்டார். [* திவெ 2:6; திப 8:32-33 ] [SE][QE]
9. [QS][SS] வன்செயல் எதுவும்[SE][SS] அவர் செய்ததில்லை;[SE][SS] வஞ்சனை எதுவும்[SE][SS] அவர் வாயில் இருந்ததில்லை;[SE][SS] ஆயினும், தீயவரிடையே[SE][SS] அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;[SE][SS] செத்தபோது அவர்[SE][SS] செல்வரோடு இருந்தார். [* திப 8:32-33 ] [SE][QE]
10. [QS][SS] அவரை நொறுக்கவும்[SE][SS] நோயால் வதைக்கவும்[SE][SS] ஆண்டவர் திருவுளம் கொண்டார்;[SE][SS] அவர் தம் உயிரைக்[SE][SS] குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;[SE][SS] எனவே, தம் வழிமரபு கண்டு[SE][SS] நீடு வாழ்வார்;[SE][SS] ஆண்டவரின் திருவுளம்[SE][SS] அவர் கையில் சிறப்புறும். [* 1 பேது 2:22 ] [SE][QE]
11. [QS][SS] அவர் தம் துன்ப வாழ்வின்[SE][SS] பயனைக் கண்டு நிறைவடைவார்;[SE][SS] நேரியவராகிய என் ஊழியர்[SE][SS] தம் அறிவால்[SE][SS] பலரை நேர்மையாளராக்குவார்;[SE][SS] அவர்களின் தீச்செயல்களைத்[SE][SS] தாமே சுமந்து கொள்வார்.[SE][QE]
12. [QS][SS] ஆதலால், நான் அவருக்கு[SE][SS] மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;[SE][SS] அவரும் வலியவரோடு[SE][SS] கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;[SE][SS] ஏனெனில், அவர் தம்மையே[SE][SS] சாவுக்கு கையளித்தார்;[SE][SS] கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;[SE][SS] ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;[SE][SS] கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 53 / 66
ஏசாயா 53:27
1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? 2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை; * யோவா 12:38; உரோ 10:16 3 அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. 4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். 5 அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். * மத் 8:17 6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். * 1 பேது 2:24 7 அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். * 1 பேது 2:25 8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். * திவெ 2:6; திப 8:32-33 9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். * திப 8:32-33 10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். * 1 பேது 2:22 11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். 12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 53 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References