தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {எருசலேமின் மீட்பு} [PS] [QS][SS] விழித்தெழு, விழித்தெழு, சீயோனே,[SE][SS] உன் ஆற்றலை அணிந்து கொள்;[SE][SS] திரு நகர் எருசலேமே, உன்[SE][SS] அழகுறு ஆடைகளை அணிந்துகொள்;[SE][SS] விருத்தசேதனம் செய்யாதவனும்[SE][SS] தீட்டுப்பட்டவனும்[SE][SS] உன்னிடையே இனி வரவேமாட்டான். [* திவெ 21:2,27. ] [SE][QE]
2. [QS][SS] சிறைப்பட்ட எருசலேமே,[SE][SS] புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்;[SE][SS] அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே,[SE][SS] உன் கழுத்திலுள்ள கட்டுகளை[SE][SS] அவிழ்த்துவிடு.[SE][QE]
3. ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
4. ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்; அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.
5. இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுவோர் தற்பெருமை பேசுகின்றனர்; எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது, என்கிறார் ஆண்டவர். [* உரோ 2:24. ]
6. ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்; இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.
7. [QS][SS] நற்செய்தியை அறிவிக்கவும்,[SE][SS] நல்வாழ்வைப் பலப்படுத்தவும்[SE][SS] நலம்தரும் செய்தியை உரைக்கவும்,[SE][SS] விடுதலையைப் பறைசாற்றவும்,[SE][SS] சீயோனை நோக்கி, ‘உன் கடவுள்[SE][SS] அரசாளுகின்றார்’ என்று கூறவும்[SE][SS] வருவோனின் பாதங்கள் மலைகள்மேல்[SE][SS] எத்துணை அழகாய் இருக்கின்றன! [* நாகூ 1:15; உரோ 10:15; எபே 6:15. ] [SE][QE]
8. [QS][SS] இதோ, உன் சாமக் காவலர்[SE][SS] குரல் எழுப்புகின்றனர்;[SE][SS] அவர்கள் அக்களித்து ஒருங்கே[SE][SS] ஆரவாரம் செய்கின்றனர்;[SE][SS] ஆண்டவர் சீயோனுக்குத்[SE][SS] திரும்பி வருவதை அவர்கள்[SE][SS] தம் கண்களாலேயே காண்பர்.[SE][QE]
9. [QS][SS] எருசலேமின் பாழ் இடங்களே,[SE][SS] ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;[SE][SS] ஆண்டவர் தம் மக்களுக்கு[SE][SS] ஆறுதல் அளித்துள்ளார்;[SE][SS] எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.[SE][QE]
10. [QS][SS] பிறஇனத்தார் அனைவரின்[SE][SS] கண்களும் காண[SE][SS] ஆண்டவர் தம் தூய புயத்தினைத்[SE][SS] திறந்து காட்டியுள்ளார்;[SE][SS] மண்ணுலகின் எல்லைகள் யாவும்[SE][SS] நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.[SE][QE]
11. [QS][SS] திரும்பிச் செல்லுங்கள்,[SE][SS] திரும்பிச் செல்லுங்கள்;[SE][SS] அங்கிருந்து வெளியேறுங்கள்;[SE][SS] தீட்டானதைத் தொடாதீர்கள்;[SE][SS] ஆண்டவரின் கலங்களை[SE][SS] ஏந்திச்செல்வோரே,[SE][SS] அந்நாட்டினின்று வெளியேறுங்கள்;[SE][SS] உங்களையும் தூய்மைப்படுத்திக்[SE][SS] கொள்ளுங்கள். [* 2 கொரி 6:17. ] [SE][QE]
12. [QS][SS] நீங்கள் அவசரப்பட்டு[SE][SS] வெளியேறப் போவதில்லை;[SE][SS] தப்பியோடுவது போல்[SE][SS] செல்வதுமில்லை;[SE][SS] ஏனெனில், ஆண்டவர்[SE][SS] உங்கள்முன்னே செல்வார்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுள்[SE][SS] உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.[SE][PE][QE]
13. {துன்புறும் ஊழியர்} [PS] [QS][SS] இதோ, என் ஊழியர் சிறப்படைவார்;[SE][SS] அவர் மேன்மைப்படுத்தப்பட்டு,[SE][SS] உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.[SE][QE]
14. [QS][SS] அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்;[SE][SS] அவரது தோற்றம் பெரிதும்[SE][SS] உருக்குலைந்ததால்[SE][SS] மனித சாயலே[SE][SS] அவருக்கு இல்லாதிருந்தது;[SE][SS] மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.[SE][QE]
15. [QS][SS] அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை[SE][SS] அதிர்ச்சிக்குள்ளாக்குவார்;[SE][SS] அரசர்களும் அவரை முன்னிட்டு[SE][SS] வாய்பொத்தி நிற்பர்;[SE][SS] ஏனெனில் தங்களுக்குச்[SE][SS] சொல்லப் படாததை அவர்கள் காண்பர்;[SE][SS] தாங்கள் கேள்விப்படாததை[SE][SS] அவர்கள் புரிந்து கொள்வர். [* உரோ 15:21.[QE]. ] [SE][PE]

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 66
எருசலேமின் மீட்பு 1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்; திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்; விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான். * திவெ 21:2, 27. 2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்; அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. 3 ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள். 4 ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்; அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான். 5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுவோர் தற்பெருமை பேசுகின்றனர்; எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது, என்கிறார் ஆண்டவர். * உரோ 2: 24. 6 ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்; இதோ, நான் இங்கே இருக்கின்றேன். 7 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! * நாகூ 1:15; உரோ 10:15; எபே 6: 15. 8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். 9 எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். 10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும். 11 திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்; அங்கிருந்து வெளியேறுங்கள்; தீட்டானதைத் தொடாதீர்கள்; ஆண்டவரின் கலங்களை ஏந்திச்செல்வோரே, அந்நாட்டினின்று வெளியேறுங்கள்; உங்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். * 2 கொரி 6: 17. 12 நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை; தப்பியோடுவது போல் செல்வதுமில்லை; ஏனெனில், ஆண்டவர் உங்கள்முன்னே செல்வார்; இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார். துன்புறும் ஊழியர் 13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். 14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. 15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். [* உரோ 15:21.. ]
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References