தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] உன் தாயைத் தள்ளி[SE][SS] வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே?[SE][SS] உங்களை விற்றுவிடும் அளவுக்கு[SE][SS] எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்?[SE][SS] இதோ, உங்கள் தீச்செயல்களை[SE][SS] முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்;[SE][SS] உங்கள் வன்செயல்களின் பொருட்டே[SE][SS] உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.[SE][QE]
2. [QS][SS] நான் வந்தபோது ஒருவனும்[SE][SS] இல்லாமற் போனதேன்?[SE][SS] நான் அழைத்தபோது பதில் தர[SE][SS] எவனும் இல்லாததேன்?[SE][SS] உங்களை மீட்க இயலாதவாறு[SE][SS] என்கை சிறுத்துவிட்டதோ?[SE][SS] விடுவிக்கக் கூடாதவாறு[SE][SS] என் ஆற்றல் குன்றிவிட்டதோ?[SE][SS] இதோ என் கடிந்துரையால்[SE][SS] கடல்தனை வற்றச் செய்கிறேன்;[SE][SS] ஆறுகளைப் பாலையாக்குகிறேன்;[SE][SS] அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன;[SE][SS] தாகத்தால் சாகின்றன.[SE][QE]
3. [QS][SS] வான்வெளியைக் காரிருளால்[SE][SS] உடுத்துவிக்கின்றேன்;[SE][SS] அதனைச் சாக்கு உடையால்[SE][SS] போர்த்துகின்றேன்.[SE][PE][QE]
4. {ஆண்டவர்தம் ஊழியரின் ஒப்படைப்பு} [PS] [QS][SS] நலிந்தவனை நல்வாக்கால்[SE][SS] ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,[SE][SS] ஆண்டவராகிய என் தலைவர்,[SE][SS] கற்றோனின் நாவை[SE][SS] எனக்கு அளித்துள்ளார்;[SE][SS] காலைதோறும் அவர் என்னைத்[SE][SS] தட்டி எழுப்புகின்றார்;[SE][SS] கற்போர் கேட்பது போல்[SE][SS] நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவராகிய என் தலைவர்[SE][SS] என் செவியைத் திறந்துள்ளார்;[SE][SS] நான் கிளர்ந்தெழவில்லை;[SE][SS] விலகிச் செல்லவுமில்லை.[SE][QE]
6. [QS][SS] அடிப்போர்க்கு என் முதுகையும்,[SE][SS] தாடியைப் பிடுங்குவோர்க்கு[SE][SS] என் தாடையையும் ஒப்புவித்தேன்.[SE][SS] நிந்தனை செய்வோர்க்கும்[SE][SS] காறி உமிழ்வோர்க்கும்[SE][SS] என் முகத்தை மறைக்கவில்லை.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவராகிய என் தலைவர்[SE][SS] துணை நிற்கின்றார்;[SE][SS] நான் அவமானம் அடையேன்;[SE][SS] என் முகத்தைக் கற்பாறை[SE][SS] ஆக்கிக் கொண்டேன்;[SE][SS] இழிநிலையை நான் அடைவதில்லை[SE][SS] என்றறிவேன். [* மத் 26:67; மாற் 14:65 ] [SE][QE]
8. [QS][SS] நான் குற்றமற்றவன் என எனக்குத்[SE][SS] தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;[SE][SS] என்னோடு வழக்காடுபவன் எவன்?[SE][SS] நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;[SE][SS] என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?[SE][SS] அவன் என்னை நெருங்கட்டும்.[SE][QE]
9. [QS][SS] இதோ, ஆண்டவராகிய என் தலைவர்[SE][SS] எனக்குத் துணைநிற்கின்றார்;[SE][SS] நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட[SE][SS] யாரால் இயலும்?[SE][SS] அவர்கள் அனைவரும் துணியைப் போல்[SE][SS] இற்றுப்போவார்கள்;[SE][SS] புழுக்கள் அவர்களை அரித்துவிடும். [* உரோ 8:33-34.[QE] ] [SE][QE]
10. [QS][SS] உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து[SE][SS] அவர்தம் அடியானின் சொல்லுக்குச்[SE][SS] செவிசாய்ப்பவன் எவன்?[SE][SS] அவன் ஒளிபெற இயலா நிலையில்[SE][SS] இருளில் நடந்துவருபவன்;[SE][SS] ஆண்டவரின் பெயர்மீது[SE][SS] நம்பிக்கை கொண்டு[SE][SS] தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன். [* உரோ 8:33-34.[QE] ] [SE][QE]
11. [QS][SS] ஆனால், நெருப்பு மூட்டித்[SE][SS] தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே;[SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும்,[SE][SS] நீங்கள் மூட்டிய[SE][SS] தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்;[SE][SS] என் கையினின்று[SE][SS] உங்களுக்குக் கிடைப்பது இதுவே:[SE][SS] நீங்கள் வேதனையின் நடுவே[SE][SS] உழன்று கிடப்பீர்கள்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 50 / 66
ஏசாயா 50:27
1 ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்? இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள். 2 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்? உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ? விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ? இதோ என் கடிந்துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்; ஆறுகளைப் பாலையாக்குகிறேன்; அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன; தாகத்தால் சாகின்றன. 3 வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்; அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன். ஆண்டவர்தம் ஊழியரின் ஒப்படைப்பு 4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. 6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். * மத் 26:67; மாற் 14:65 8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். 9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்; புழுக்கள் அவர்களை அரித்துவிடும். [* உரோ 8:33-34. ] 10 உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன்? அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்; ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன். [* உரோ 8:33-34. ] 11 ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே; நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்; என் கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே: நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 50 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References